(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 20 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

முன்னுரை

பிரபல நாட்டிய மங்கை மாயா தற்கொலை செய்து கொள்கிறாள். காதலியின் தற்கொலையில் துவண்டுபோகும் நண்பனைத் தேற்ற டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தும் அசோக்கும் இன்ஸ்பெக்டர் வீராவும் மாயாவின் தற்கொலையை ஆராய முற்படுகின்றனர். மாயாவைச் சுற்றியுள்ளவர்களின் மூலம் அவளுக்கு நேர்ந்த சிக்கல்களை ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார்கள். பெங்களூரு நோக்கிப் பயணமாகும் அவர்களுடன் நாமும் பயணமாவோம்..........


மாயாவின் கடிதம் வீராவின் சட்டைப் பையில் இருந்தது. அதை எடுத்து படித்தார்.

அன்புள்ள கமலுக்கு

முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும் போது நான் உங்களுடன் இருக்கப்போவது இல்லை சில காரணங்களுக்காக நான் என் முடிவைத் தேடிப் போகிறேன். பணம் பதவி உடல் என்று ஏதாவது ஒரு துரோகத்தில் நான் துவண்டு இருக்கும் போது எனக்குள் வந்த ஒளிக்கீற்று நீங்கள் நாமிருவரும் சேர்ந்து வாழப்போகும் வாழ்விற்கு எந்த வித உறுத்தலோ தடையோ இருக்கக்கூடாது என்பதால் தான் என் சொத்துக்களை எல்லாம் அத்தை பேருக்கும், சந்துரு பேருக்கும் எழுதிவைத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். நான் வாழும் இந்த வீட்டில் என் அழுகையும் சோகத்தையும் பார்த்த இந்த வீடு நாம் இருவரின் சந்தோஷ தாம்பத்தியத்தில் இணைய வேண்டும் என்று உங்கள் பெயரிற்கு அதை மாற்றியிருக்கிறேன். 

எனக்கென நான் ஏற்படுத்திக் கொண்ட வட்டம் தான் என் குணம் சிலர் திமிர், கர்வம் என்றெல்லாம் நினைக்கலாம், என் வேலியைத் தளர்த்திட முயன்றவர்களிடம் நான் என்னைப் பாதுகாக்கப் போட்டுக் கொண்ட முகமூடி நான் அறிந்தோ அறியாமலோ என்னால் ஒருவனின் வாழ்வு சிதைக்கப்பட்ட அவலத்திற்க காரணமாகிப்போனேன். என் குற்றஉணர்வு என்னைக் கொல்கிறது கமல், என்னையே நான் அழித்துக்கொள்வதுதான் இதற்கு விடிவாக அமையும், இது உங்களுக்கு அபத்தமாகக் கூட தோன்றலாம். இந்த கரிநாள் என் வாழ்வில் முன்பே வந்திருந்தால் உங்களை நான் சந்தித்து இருக்கமாட்டேன். என் மனம் உங்களின் மேல் லயிப்பாய் இருந்திருக்காது. 

எத்தனையோ முகமுடிகளுக்கு மத்தியில் என்னிடம் உண்மையாய் இருந்த வினிதாவிற்கு நீங்கள் ஏதாவது செய்யவேண்டும் கமல் இது என் வேண்டுகோளும் அதாவது கடைசி வேண்டுகோள். டிரைவர் மணியின் தம்பியின் நிலைதான் நான் என்னை முடித்துக்கொள்ள காரணம், நீங்கள் என்னை புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த ஜென்மத்திலாவது உங்களுடன் ஒரு முழுமையான வாழ்வு வாழ காத்திருக்கும் உங்கள் மாயா......!

வீரா திகைப்பாய் அந்த கடிதத்தை மேலும் ஒரு முறை வாசித்தார். கண்களாலேயே ஏதோ அறிகுறியை உணர்த்துவதைப் போல அசோக்கிற்கும் கெளதமிற்கும் சைகைகள் செய்தார். 

ஸார் மாயா மேடம் தற்கொலை விஷயமாக ஏதோ தகவல் என்று சொன்னீர்களே அது என்ன ? வினிதாவின் கேள்வியில் அனைவரும் தம்தம் சிந்தனையில் இருந்து விழித்து கொண்டனர்..

அது ஒரு சின்ன அசெம்ஷன்தான் அந்த பகுதி ஆய்வாளைப் பார்த்தபிறகுதான் எனக்கும் தெளிவாக தெரியும். அசோக் லட்சணாவின் வீட்டில் வினிதாவை இறக்கிவிட்டுவிட்டு நாம் ஸ்டேஷன் போலாம்.

பரவாயில்லை ஸார் நானும் வருகிறேன். வினிதாவின் கண்களிலும், பேச்சிலும் தோன்றியது ஆர்வமா பயமா என்று யோசனையோடு, உங்களுக்கு தேவைப்படும் தகவலை நானே அவசியம் தருகிறேன் இப்போது இறங்கிக்கொள்ளுங்கள் என்று லட்சணாவின் வீட்டுவாசலில் வினிதாவை இறக்கிவிட்டு பறந்தனர் மூன்றுபேரும்

திடுமென்று தன்னை கழட்டிவிட்டதைப் போல இருந்தது வினிதாவிற்கு அப்படியென்ன எனக்குத் தெரியாத ரகசியம் இருக்கும், தனக்கு பின்னால் வந்த காரை நிறுத்தச் சொல்லி சற்று இடைவெளிவிட்டு முன்புறம் சென்ற வண்டியைத் தொடரச் சொன்னாள் வினிதா.

லட்சணா மாயாவிற்கு ஊசியைப்போட்டு பிரஷர் செக்கிக் செய்து திரும்பும் போது அவளின் கண்இமைகள் மெல்ல அசைவதைப் போல தோன்றியது. லட்சணா சற்று ஊன்றி கவனித்தாள். கமல் அப்போதுதான் குளித்துவிட்டு வெளியே வந்தான் கமல் அண்ணா இந்த பெண்ணிடம் மெல்ல அசைவு தெரிகிறது. 

இரண்டே எட்டில் குளியலறை வாசலில் இருந்து கட்டிலை அடைந்தவன் மென்மையாக தலையை வருடியவாறு மாயா என்றழைத்தான். ஸ்வ்ட்ச் போட்டாற்போல மயக்கத்தில் இருந்த பெண்ணின் கண்கள் சட்டென திறந்து கொண்டன. எதையோ உணர்த்துவதைப் போல விழிகள் இங்குமங்கும் அலைந்து பின் கமலின் முகத்தில் நிலைத்தது. தன் சக்தியெல்லாம் ஒருங்கிணைத்து கமல் என்று அழைப்போடு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள் அந்த மயக்கமாது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.