(Reading time: 13 - 25 minutes)

அதற்குள் நந்தினி கட்டிலின் மேல் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டாள்.தன்னுடைய வீட்டிற்கே வந்து தன்னுடைய அனுமதியே பெறாமல் தன்னுடைய கட்டிலில் படுத்து தூங்கும் பாவையை கண்டு கோபம் வந்தாலும் மற்ற பெண்களைப்போல தன்னை வளைத்து பிடிப்பதற்காக கண்டபடி முயற்சி செய்யாமல் படுத்து உறங்குகிறவளை தொந்தரவு செய்யவும் மனம் வரவில்லை.தனக்குமே மிக அசதியாக இருப்பதால் தூங்க வேண்டும் என்று நினைத்தவன் எங்கு தூங்குவது என தெரியாமல் குழம்பி நின்றான்.

அவளை கீழே தூங்க சொல்லிவிட்டு தான் கட்டிலில் படுக்க வேண்டும் என நினைத்தவனுக்கு, தான் இப்போது எங்கு படுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.பெரிய கட்டில்தான் எனினும் ரதியின் இடத்தை நந்தினிக்கு குடுக்கப் பிடிக்கவில்லை.அதை கேட்டு பெறவும் நந்தினி நினைக்க வில்லை.எப்போதும் கட்டிலிலேயே படுத்து தூங்கியதாலும்,அதிகமான அசதியினாலும் எதைப் பற்றியும் நினைக்காமலே அவள் தூங்கி விட்டாள்.

சொந்த வீட்டிலேயே முதன்முறையாக அன்னியமாக உணர்ந்தான்.நாளையிலிருந்து அவளைக் கண்டிப்பாக கீழே உறங்க சொல்ல வேண்டும் என நினைத்தவன்.கட்டிலின் மறுமுனையில் சென்று படுத்தான்.இல்லை படுக்க முயற்சித்தான்.அசதியையும் மீறிய வெறுப்பு அவனுடைய தூக்கத்தைப் பறித்துக் கொண்டது.

 ரதியின் நினைவு வந்தது.நந்தியின் தமக்கையே ஆயினும் நந்தினியைவிட பல மடங்கு அழகானவள்.அவளைப்பார்க்கும்போது ஸ்நொவ் வைட் கதையின் நாயகி கண்டிப்பாக நினைவுக்கு வருவாள்.அவ்வளவு அழகு.பணிவும்கூட.ஆதி என்ன சொன்னாலும் சரிசரிஎன கேட்டுக்கொள்வாள்.எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாள்.தனக்கு வேண்டும் என்பதனைக்கூட உடனே கேட்டு வாங்க மாட்டாள். உங்களுக்கு வீண்செலவு என்று பலமுறை மறுத்து அவன் கட்டாயமாக வாங்குமாறு வற்புறுத்திய பிறகே வாங்கிக்கொள்வாள்.

அப்படிப்பட்டவளை ஏனோ தந்தைக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை.ஆயினும் மகனின் விருப்பம் என்று தெரிந்தப்பிறகு தடுக்கவுமில்லை.அவரே முன்னின்று இந்த திருமண வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.அதனாலேயே ரதி போனபின்பு ,நந்தினியை மணக்குமாறு தந்தை கூறியதற்கு அவனால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.அவருடைய கவுரவத்தைக் காப்பற்றுவது தனையனான தன்னுடைய கடமை என்று எண்ணினான்.

இந்த திருமணம் எவ்வாறு பிடிக்கவில்லையோ அதைவிட நந்தினியை திருமணம் செய்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை.ஏனெனில் அவனிடமே ஒருதரம் வந்து ரதியை மனம் புரிய வேண்டாம்.அவளுக்கும் உங்களுக்கும்சரிப்பட்டு வராது என்று எச்சரித்தாள்.வருங்கால மைத்துனியே என்று முன் அனுமதி பெறாதபோதும் கூப்பிட்டு உபசரித்தால் வந்தவள் பேசியது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்க வில்லை.அவனுடைய பெற்றோர்களே அவனுடைய எந்த விஷயத்திலும் அவ்வளவாக தலையிடுவதில்லை.அவ்வாறு இருக்க இவள் தலையிட்டது அவனுக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை.

அதைவிட அவள் சொன்ன காரணம் தன்னுடைய சகோதரியைப் பற்றி தானே சொன்னால் தவறாக இருக்கும்.அதனால் தன்னால் காரணம் சொல்ல முடியாது.ஆயினும் எச்சரிப்பது தன்னுடைய கடமை எனவே வந்தேன் என்றாள்.மிக நல்லது என்மேல் உனக்குள்ள அக்கறைக்கு என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்.மற்றபடி தவறாகவே சொன்னாலும் ரதியின் சகோதரியல்லவா.எனவே அவளைப்போய் என்ன திட்டுவது என்றுவிட்டுவிட்டான்.

அன்று சகோதரிமேல் பொறாமை என்று எண்ணினானே தவிர அவள் திட்டம் போட்டு இந்த திருமணத்தை நிறுத்துவாள் என்றோ ,அதைக் காரணம் காட்டி தன்னையே மணந்து கொள்வாள் என்றோ அவன் கொஞ்சம்கூட நினைக்கவில்லை.அவளுடைய எண்ணம் தெரிந்தும் அவளை திருமணம் செய்துகொண்ட தன்மேலேயே அவனுக்கு கோபம் வந்தது.ஆயினும் தந்தை கேட்டு மறுக்க மனம் வரவில்லை.

அவனுக்கு ரதியின் மேல் எந்த கோபமும் வரவில்லை.ஏனெனில் நீங்களாகவே இந்த திருமணத்தை நிறுத்தாவிட்டால் தானாகவே இந்த திருமணம் நடக்கும் என்று நந்தினி சொன்னபோதே அவனுக்கு தெரியும்.திருமணத்தை நிறுத்த அவள் எதாவது செய்வாள் என்று.தன்னிடம் சொன்னதுபோல ரதியிடமும் சொல்வாள் என்றுதான் நினைத்தானே தவிர அவள் இந்த அளவுக்கு போவாள் என்று அவன் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க வில்லை.மற்றபடி அவனுடைய ரதி எங்கு எவ்வாறு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளோ என்று இன்னமும் அவளை நினைத்தே ஏங்கினான்.

அவளை எவ்வாறு மீட்பது .மேலும் அவள் திரும்பி வந்ததும் தன திருமணத்தை அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள்.நான் காணாமல்போனால் என்னை வந்து தேடாமல் உடனே வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா என்று அவள் தன்னுடன் சண்டை போட்டால் என்ன செய்வது என்று பலவாறாக யோசனை செய்தவன் ஒருவழியாக தூங்கியும் விட்டான்.

காலையில் கண் விழித்தபோது மணி ஒன்பது.இவ்வளவு லேட்டாக தான் எப்போதும் எழுந்ததில்லையே என்று நினைக்கும்போதுதான் நேற்று நடந்த அனைத்தும் நியாபகம் வந்தது.இன்னும் நந்தினி விழிக்கவில்லையா என்று பார்த்தால் அவளைக் காணோம்.சரியென்று குளித்து ரெடியாகி கீழே போனால் அங்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.