(Reading time: 13 - 25 minutes)

ஏற்கனவே நிறைய தடவை விளையடியிருப்பார்கள் போல.அனைத்திலும் நந்தினியே ஜெயிக்கவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .அவனும் நன்றாக விளையாடக்கூடியவனே .ஆயினும் சொல்லி வைத்ததைப்போல எல்லா தடவையும் ஜெயித்தது கிடையாது.அதே எண்ணம் அவனுடைய தந்தைக்கும் இருந்திருக்கும்போல அவர் வாய்விட்டே அவளைப் பாராட்டினார்.அப்போதுதான் அவள் அவ்வாறு ஜெயித்த ரகசியத்தை அவளுடைய தந்தை போட்டு உடைத்தார்.எப்போதுமே இப்படித்தானாம் .அவளும் அவளுடைய தம்பியும் அருகருகிலேயே அமருவார்கலாம்.

யார் சீட்டு போடும் நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் எந்த சீட்டைப் போட்டால் ரம்மி சேருமோ அந்த சீட்டையேபோடுவார்களாம்.இது அவர்களுக்குள் இருக்கும் ரகசிய உடன்படிக்கையாம்.இதைக் கேட்டதும் நந்தினிக்கும் அவளுடைய தம்பி பிரிய நந்தனுக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போயிற்று.

ஏனென்றால் தங்களுடைய இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்று எண்ணியிருந்தனர்.மறைக்க வேண்டும் என்றோ இல்லை ஏமாற்ற வேண்டும் என்றோ நினைத்து இதை செய்ய வில்லைதான்.ஆயினும் எப்போதும் ஜெயிப்பதில் ஒரு திரில் இருப்பதினாலேயே அவர்கள் இருவரும் அவ்வாறு செய்வனர்.ஆச்சரியப்படத்தக்க விதமாக அங்குள்ள அனைவரும் அதை நல்ல விதமாகவே எடுத்துக் கொண்டனர்.அதிலும் அவனுடைய தந்தை எப்போதும் என்னுடைய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது.ஆனாலும் இதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று ஆச்சரியப்பட்டார்.

தம்பியை தன்னுடன் சேர்த்துக்கொண்டு நந்தினி போதும் தன்னை வம்பிழுப்பதாக ரதி சொன்னது நினைவில் வந்தது.சீக்கிரமகவே ரதியை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.அப்புறம் இந்த நந்தினியை வீட்டை விட்டே விரட்ட வேண்டும் என மனதினுள் நினைத்துக் கொண்டான்.அதற்குமுன் இந்த நந்தினியை மட்டம்தட்ட வேண்டும் என நினைத்தவன் தானும் சென்று அவர்களுடன் அமர்ந்தான்.ரம்மியில்தானே சீட் போடமுடியும் என்று எண்ணியவனாக ஆஸ் விளையாடலாம் என்று கூறினான்.அனைவரும் சம்மதிக்கவே திரும்பவும் விளையாட ஆரம்பித்தனர்.நேரம் போனதே தெரியவில்லை.மட்டம் தட்ட வேண்டும் என நினைத்தவனுக்கோ அந்த நினைவே வரவில்லை.அதுதான் விளையாட்டின் சிறப்பு.வேறு எதைப் பற்றியும் நினைக்க விடாமல் ஜெயிப்பது பற்றி மட்டுமே நினைக்க வைக்கும்.இம்முறை அனைவரும் மாறிமாறி ஆஸ் வாங்கினர்.மதிய உணவருந்தும் வேளையின்போதுதான் மனமே இல்லாமல் எழுந்து சென்று உணவருந்தினர்.

அப்புறம் பெரியவர்கள் அனைவரும் சென்று ஓய்வெடுக்க சென்றனர்.தம்பி வெளியில் சென்றுவிட்டான் .ஆதியின் தங்கை சரண்யா படிக்க சென்றுவிட்டாள்.

நந்தினிக்கோ ஆதியின் ரூமுக்கு செல்ல பிடிக்கவில்லை.ஆதிக்கோ எங்கே தான், தன்னுடைய ரூமிற்கு சென்றால் நந்தினியும் தன்னோடு வந்துவிடுவளோ என்று தோன்றவும் அங்கே செல்லப் பிடிக்கவில்லை.

வெளியே வேலையிருப்பதால் வர இரவு ஆகிவிடும் என்பதை வீடு பெரியவர்களிடம் தெரிவிக்குமாறு கூறிச் சென்றான்.அவன் இங்கிருக்கப்போவதில்லை என தெரிந்ததால் நந்தினி அவனுடைய அறைக்குச் சென்று ஒரு நாவலை எடுத்துப் படிக்கலானாள்.மாலை கீழே பொய் டீயும் ,சிற்றுண்டியும் அருந்திவிட்டு திரும்பவும் மாடியிலுள்ள அவனுடைய அறைக்குச் சென்று தன்னுடைய பொருட்களை அடுக்கினாள்.

அதே நேரம் வெளியில் சென்ற ஆதி என்ற ஆதிகேசவ் ரதியைப் பற்றி கண்டுபிடித்துத் தருமாறு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான்.அதை முடித்துவிட்டு அப்படியே அலுவலகத்துக்கும் சென்று மேற்பார்வையிட்டுவிட்டு இரவு சாப்பிடும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்தான்.

நந்தினியின் பெற்றோர் மறுநாள் ஊருக்கு கிளம்பினர்.அடுத்தடுத்து மறுவிருந்துக்கு அழைத்தவர்களின்வீடுகளுக்குபோய்விட்டு வந்து ஒருவழியாக வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.

டுத்து வந்த ஒரு மாதமும் ஆதிக்கு வேலை அதிகமாக இருந்தது.அவனை வீட்டிலேயே பார்ப்பது அரிதாக இருந்தது.நந்தினிக்கு இந்த வீடு பிடித்திருந்தது.மாமியாருக்கு ரதிதான் தன்னுடைய மருமகளாக வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இவளிடமும் மிகுந்த அன்புடனே நடந்து கொண்டார்.மாமனாரும்,நாத்தனாரும் கேட்கவே வேண்டாம்.ஏற்கனவே அவர்களுக்கு ரதியின்மேல் நல்ல அபிப்பிராயம்இல்லை.எனவே எல்லோருடனும் நன்றாக பழகினாள்.ஆதியைத் தவிர.

அருகிலேயே லைப்ரரி எங்கு இருக்கிறது என்று கேட்டு அதில் மெம்பராகச்சேர்ந்தாள். ஆதி இடைஇடையே ரதியைப்பற்றி விசாரித்தான்.எந்த தகவலும் கிடைக்காமல் திரும்பினான்.அந்த வெறுப்பு நந்தினியின் மேல் திரும்பியது.

அதை அவளிடம் எதற்கெடுத்தாலும் கோபப்பட ஆரம்பித்தான்.பதிலுக்கு வாங்கிகட்டிக்கொள்ளவும் செய்தான்.இதற்கிடையே ஒரு திருப்பு முனையாக ரதியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால் அவளை கடத்தியவர்கள் அதற்குள் தப்பித்துவிட்டார்கள்.எனவே ரதியை மட்டும் கண்டுபிடித்து அவனிடம் அழைத்து வந்தார்கள்.

தொடரும்!

Episode # 02

{kunena_discuss:1181}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.