அறையில் அமர்ந்திருந்த சாரு, தீபன் பேசியதையே நினைத்துக்கொண்டிருந்தாள் மாறி மாறி…
தனக்கு அவன் கொடுத்திருக்கும் அங்கீகாரமும், உரிமையும் நினைத்துப்பார்க்கையிலே அவளுக்கு இனம் புரியாத உணர்வை பரிசளித்திட்டது….
தரையில் கிடந்த தமையனின் போனை மெத்தையில் பரப்பி பார்த்துக்கொண்டிருக்கையில்,
“சாரு…” என்றபடி தீபன் வர, அவள் நிமிர்ந்து பார்த்திட்டாள் அவனை…
அறைக்குள் நுழைந்தவன் அவளையும் மெத்தையில் கிடந்த போனின் உதிரி பாகங்களையும் மாறி மாறி பார்த்தபடி, அவளருகில் வந்து அமர, அவள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை…
“ஆமா… உடைஞ்சதை வச்சு என்ன பார்த்துட்டிருக்குற?...”
“.........”
“உன்னைத்தான் லூசு கேட்குறேன்… சொல்லு….”
“……………….”
“ஹேய்… சாரு……..”
அவன் அழுத்தம் திருத்தமாக அழைத்திட,
“உனக்கு கோபம் இவ்வளவு வருமா?.. தீபா?...”
அவள் எதை சொல்கிறாள் என்று புரிய,
“ஹாஹா….” என சிரித்தான் அவன் வேகமாய்…
“எதுக்கு சிரிக்குற?...”
“கேள்வி அப்புறம் கேட்கலாம்… முதல்ல எங்கூட வெளியே கிளம்பு…”
“எதுக்கு?...”
“எதுக்கா?... இதோ உன் முன்னாடி பரப்பி வச்சிருக்கிறியே, இதை ஒட்ட வைக்கத்தான்…”
“இதை ஒட்டினாலும் நீ யூஸ் பண்ண முடியாது…”
“அப்போ புதுசு வாங்கித்தா….”
அவன் இலகுவாக கேட்டுக்கொண்டே, அவள் போனை எடுத்து நோண்டிட,
“என் மேல உனக்கு கோபமே வரலையா தீபா?... நான் உன்னை கார்னர் பண்ணினேன்… ஏன் உன் போன் உடைய காரணமே நான் தான?... என் கூட பேசாம போகணும்… கோபப்படணும்னு ஏன் நீ நினைக்கலை?....”
ஆதங்கத்தோடு அவள் கேட்க, அவனோ இம்முறை அதிகமாகவே சிரித்திட்டான்..
“போடீ… லூசு….” என செல்லமாக அவள் தலையில் தட்டியவன்,
“புது போன் வாங்குறதுக்கு ஒரு சந்தர்ப்பம்னு நானே யோசிச்சிட்டிருக்கேன்… இவ வேற?.... சும்மா காமெடி பண்ணிகிட்டு….” என சொல்லியபடி அவளை பார்த்து சிரிக்க, அவள் அவனையே பார்த்திட்டாள்…
“என்னடி?...” என புருவங்களை உயர்த்தியவாறு அவன் கேட்டிட,
“ஜோக்ஸ் அபார்ட்… உனக்கு கோபம் வரலையா என் மேல சொல்லு?... அந்த கோபத்துல தான நீ போனை தூக்கி போட்டு உடைச்ச?...” என வினவினாள் அவள் தமையனை அவன் என்ன சொல்வான் என்ற எதிர்பார்ப்புடன்…
தலையை லேசாக உலுக்கியவன், “எனக்கு கோபம் வந்தது உண்மைதான்… நான் அந்த கோபத்துல போனை தூக்கி போட்டு உடைச்சதும் உண்மைதான்… ஆனா அதுக்கெல்லாம் காரணம் நீ இல்லை…” என்றான் நிதானமாக…
“பொய் சொல்லாத… நான் அப்படி சொன்னாதால தான நீ போனை தூக்கி போட்டு உடைச்ச….?...”
“பார்த்தீயா நீயே சொல்லிட்ட… அன்சரை… அப்புறம் என்ன?...”
“அப்போ என் மேல கோபம் நிஜம் தான?... அப்புறம் ஏன் இல்லன்னு சொல்லுற?...”
“ஏய் லூசு… நான் தூக்கி போட்டு உடைச்சதுக்கு காரணம் நீ இல்லை… உன்னை அப்படி பேச வச்சாங்கல்ல… அவங்க மேல உள்ள ஆத்திரம் தான் அதுக்குக் காரணம்?...”
“தீபா… அவங்களை ஏன் நீ …”
அவள் ஆரம்பிக்கும்போதே, இடையிட்டு மறுத்தவன், “அக்கா… ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ… நீ பேசுற விஷயங்களில் ஆயிரம் விஷயங்களுக்கு நான் உன் கூட சண்டை போடலாம்… அது எதார்த்தம்… ஆனாலும் அது செல்ல சண்டையா தான் இருக்கும்… இதோ இப்போ என் மேல கோபமா? கோபமான்னு கேட்குற பார்த்தீயா, இது தான் எனக்கு கஷ்டமா இருக்கு… எனக்கு உன் மேல எப்பவும் கோபம் வராதுக்கா… நான் சொல்லுறதை கேட்கமாட்டேங்குறியேன்னு ஆதங்கம் இருக்குமே தவிர, கோபம் இருக்காது… சரியா?...” என அவளின் கைப்பிடித்து அவன் கூறிட, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…
“அண்ட் ஒன் மோர் திங்க்…. இன்னைக்கு சொன்ன பார்த்தீயா, அதே போல இனி என்னைக்கும் சொல்லாத… ப்ளீஸ்…”
“சாரிடா… தீபா…”
அவள் மனமுவந்து தான் சொன்ன அந்த வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டிட, “நீ ஏன் சாரி கேட்குற லூசு…” என திட்டினான் அவன்…
“நான் அப்படி சொன்னது தப்புதான?..”
“நீ என்ன தப்பு செஞ்ச?..” என உரைத்தவன், “ஹ்ம்ம்… இனி உன் வாயிலிருந்து அப்படி எதாவது வார்த்தை வந்துச்சுன்னு வச்சிக்கோ, சத்தியமா உன் மேல கோபப்பட மாட்டேன்… ஆனா அதுக்கு காரணமானவங்களை கொன்னுடுவேன்…” என்றான் தெளிவாக…
“தீபா….”
அவள் அதிர்ச்சியுடன் பார்த்திட, “ஹ்ம்ம்… உனக்கு ஹாஃப் அன் அவர் டைம்… சீக்கிரம் ரெடியாகி கீழ வா… ஃபர்ஸ்ட் வந்து போன் வாங்கி கொடு…. ஓகே……” என அவளை கிளம்ப சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் தீபன்…
“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”
{kunena_discuss:1162}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.