“கிருஷ்ணா. வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா.”
“ஏய் ரொம்ப ஓவரா பண்ணாதேடா.” அவன் முதுகில் தட்டினாள்.
“முதன் முதல்ல நம்ம வீட்டுக்கு வர்றே. நான் சொல்றதைச் செய்யேன்.”
கெஞ்சலாகக் கேட்டான்.
“சரி. உன்னோட ஒரே பாசத்தொல்லையாப் போச்சு. சின்னப்பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறே.”
அவனைக் கடிந்துகொண்டே வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் கிருஷ்ணவேணி.
அவள் பின்னேயே அவனும் வந்தான்.
அதைக் கண்ட பிறகுதான் மகேந்திரனால் சரியாக மூச்சு விட முடிந்தது. ஏனோ நிம்மதியாக உணர்ந்தான். இவள் வந்த முதல் நாளே இப்படி படுத்தி வைக்கிறாளே. இனி வரும் நாட்கள் எப்படி கழியப்போகின்றனவோ?
இருவரும் ஒரே வீட்டில் வேறு இருக்கிறார்கள். கண் முன்னே இருக்கும்போது கொஞ்சம் கண்காணிக்கலாம். என்று தன் மனதைத் தை
...
This story is now available on Chillzee KiMo.
...
மூன்று பேரும் சாப்பிட்டு கிளம்புங்க. நாங்க வீட்டில்தான் இருக்கோம். மெதுவா சாப்பிட்டுக்கிறோம்.”
என்றவாறே அவர்களுக்குப் பரிமாற ஆரம்பித்தார் வனிதாமணி.
அவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
“அப்பாடா.” என்று பெருமூச்சு விட்டார் வனிதாமணி.
“நாம இப்ப சாப்பிடலாமா அத்தை.”