(Reading time: 6 - 11 minutes)

“யாரு.. நீயா.. உன் மூஞ்சை கண்ணாடிலே பார்த்தே இன்னும் உசுரோடு இருக்கே.. என் பல்லை பார்த்து உனக்கு ஒன்னும் ஆகாது..”

“ஹ.. ஹ.. உனக்கு தெரியாதா.. சின்ன வயசுலே பல் விழுந்து புதைச்சியே. அத தோண்டி எடுத்து தொல்பொருள் ஆராய்ச்சி பண்றாங்களாம்.. இது எந்த காலத்து அழிந்து போன விலங்கினம்...” என்று வம்பு வளர்க்க,

“டாடி .. அவனை பாருங்க. “ என்று தந்தையிடம் புகார் வாசிக்க, தன் செல்ல மகள் சிணுங்குவது தாங்காமல்

“டேய்.. என்னடா.. காலையில் குழந்தை கிட்டே வம்பு பண்ணிகிட்டு?” என்று கடிந்தான்.

“ஹ்க்கும்.. என்னை மட்டும் சூர்யனுக்கு அலாரம் வச்ச மாதிரி எழுப்பி ஜாக்க்கிங் கூட்டிட்டு போங்க... அந்த சூரியனே தினமும் எங்கிட்ட புலம்பறார்.. உங்கப்பாவ ஒருநாளாவது லேட்டா எழுந்துக்க சொல்லேன்.. நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்னு கேட்டுட்டு இருக்கார்.. ஆனா உங்க பொண்ண மட்டும் அந்த சந்திரன் வந்த பின்னாடி எழுந்தா கூட என்னன்னு கேக்காதீங்க? அம்மா.. இந்த சோம்பேறிக்கு காபி கட்ன்னு சொல்லிடுங்க”

“டாடி..” என்று மீண்டும் சிணுங்க,

“மிதும்மா.. பாவம் சுமி குட்டி.. இன்னிக்கு ஒருநாள் காபி கொடுத்திடு.. நாளையில் இருந்து குட்டிம்மா சீக்கிரம் எழுந்துருவாள்.. அப்படிதானே செல்லம்?” என

வேகமாக மண்டை ஆட்டினாள் சுமி. என்கிற சுமித்ரா.. அந்த வீட்டின் இளவரசி.. தன் மகளிடம் சற்று கோபமாக இருந்த மைதிலியோ , ராமின் மிது என்ற அழைப்பில் கண்கள் மின்ன மெல்லிய புன்னகை சிந்தினாள்.

“போச்சு.. எங்கப்பா கவுத்திடாரே,, இனி என் பேச்சு எடுபடாது.. மீ கோயங்” என்றபடி தன் அறைக்கு சென்றான்..

உள்ளே சென்றவன் போன் அழைக்க அதில் வந்த காண்டக்ட் நேம் பார்த்தவுடன் சிரித்துக் கொண்டே எடுத்தான்..

“ஹாய் மித்ரா... குட் மார்னிங்.. “

“ஹை அத்தான்.. குட் மார்னிங்.. “

“என்னடா விஷயம்?”

“இன்னைக்கு காலேஜ்க்கு ட்ரோப் பண்ண வரீங்களா?” என்று வினவ, ஏன் என்று கூட கேட்காமல்

“சரிடா.. “ என்று வைத்தான்.. வீட்டில் அத்தனை பேரையும் தன் சுட்டு விரலில் ஆட்டுவிக்கும் ஷ்யாம், மித்ரா கேட்டதற்கு உடனே சரி என்றான்.. இது என்ன நேசமோ?

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.