“என்ன அப்படி எழுத சொல்லிட்டு என்ன வேற ரூம்ல கொண்டுபோய் விட்டுட்டு நீங்கல்லாம் அதுக்கு எப்படி ரியாக்ட் செய்றீங்கன்னு பாக்கலாம்ன்னு அவளும் சரண்யாவும் சேர்ந்து செஞ்ச ப்ளான்தா இது.சும்மா ஒரு திரில்லுக்காகத்தான் அவங்க ரெண்டு பேரும் அப்படி செஞ்சாங்க அவங்க ரெண்டு பேரும் ரூம் தேடப் போனப்பதா என்னோட முகத்துல மயக்க மருந்து அடுசுட்டாங்க”
அப்போது அங்கு வந்த ஹரியின் அம்மா “போதும் ஆதி,ரதி ரொம்ப டயர்டா இருக்கா, எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்” என்றவர் தொடர்ந்து ரதியைப் பார்த்து “ரதி நீ வாம்மா வந்து சாப்டுட்டுபோய் படு” என்றார்.
“சரிங்கம்மா ரதியப் பத்ரமா பாத்துக்கோங்க.அவளுக்கு தேவையான பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சிட்டு வந்து அவள நா கூப்டுப் போறேன்” என்றவன் தொடர்ந்து ரதியைப் பார்த்து “பத்ரமா இரு ரதி வெளில எங்கேயும் போகாத.என்ன தவிர யாரவது இங்க வந்தா ரூம விட்டு வெளில வராத.சரி நா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்” என கூறி விடைபெற்றான்.
அவன் வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தான் என்பதே அவனுக்கு தெரியாது.ஏனெனில் வரும் வழியெல்லாம் நந்தினியப் பற்றி பாதியும், ரதியைப் பற்றி மீதியும் யோசித்துக் கொண்டே வந்தான்.
இன்னும் அவன் மனதில் நந்தினியைப் பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.ரதியை கடத்தியது யார் என்பது அதைவிட குழப்பியது.எல்லாவற்றிற்க்கும் மேலாக ரதியிடம் தனக்கு திருமணம் ஆன விசயத்தை சொல்லாதது அவனுடைய மனத்தை மிகவும் உறுத்தியது.
என்னதான் தனக்கும் நந்தினிக்கும் இடையில் எதுவும் நடக்கவில்லை என்றாலும் தான் அவளை டைவர்ஸ் செய்துவிட்டு உன்னை மணக்கிறேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாளா.வேறு யாரவது ஒரு பெண் என்றால்கூட பரவாயில்லை.
எதாவது சொல்லி கன்வின்ஸ் செய்ய கொஞ்சம் பாசிபிலிட்டியாவது இருக்கும்.அனால் சொந்த தங்கை எனும்போது கண்டிப்பாக அதை அவளுக்கு செய்யும் துரோகமாகத்தான் நினைப்பாள்.
ஏன் அவனுக்கே அது நந்தினிக்கு செய்யும் அநியாயமாகத்தான் தோன்றியது.அவளைத் திருமணம் செய்யும்போது அவளைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை.அதனால் அவனுடைய மனதிலும் அவளை டைவர்ஸ் செய்வது தவறாகத் தோன்றவில்லை.
திட்டம் போட்டு திருமணத்தை நிறுத்தியதற்கான தண்டனையாகத்தான் அப்போது நினைத்தான்.
இப்போதும் அவளைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
ஒருவேளை ரதி சொல்வதுபோல அவள் நல்லவளாக இருந்தால் எந்த பாவமும் அறியாத அவள் ஏன் சிலுவை சுமக்க வேண்டும் என தோன்றியது.
இருவரில் ஒருவர் நல்லவராக இருந்து இன்னொருவர் கெட்டவராக இருந்தால் ஈசியாக எதாவது ஒரு முடிவுக்கு வர முடியும்.அட்லீஸ்ட் யார் மேலாவது தப்பு இருந்தாலாவது தன்னால் குழப்பமில்லாமல் ஒரு முடிவுக்கு வர முடியும்.
இங்கு இருவருமே சூழ்நிலைக் கைதிகள்.யாராவது ஒருவருக்கு சாதகமாக முடிவு எடுத்தால் இன்னொருவர் கஷ்டப்பட்டே ஆக வேண்டும்.
அவர்கள் இருவரில் அடுத்தவர் கஷ்டப்படுவதை அந்த இருவருமே விரும்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவன் நினைவு முழுவதும் பலவித எண்ணங்களால் குழப்பமாக இருந்தது. இத்தனைக் குழப்பத்திலும் விபத்து ஏதும் நேராமல் எப்படி பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான் என்பதை நினைக்கவே அவனுக்கே அது ஆச்சர்யமாக இருந்தது.
வீட்டினுள் நுழைந்த ஆதி அதுவரை தூங்காமல் விழித்து இருந்த தந்தையைப் பார்த்து
“என்னப்பா இன்னும் தூங்காம இருக்கீங்க” என்றான்.
“உனக்காகத்தாம்பா வெயிட் செய்றேன்” என்றார் அவனுடைய தந்தை
“சொல்லுங்கப்பா என்ன விஷயம்”
“இங்க வேண்டாம்ப்பா.நம்மோட ஆபீஸ் ரூமுக்கு வா” என்றார்.
ஆபீஸ் வேலை எதாவது வீட்டிலிருந்தபடியே செய்ய வேண்டியிருந்தால் அதை செய்வதற்காக என்று கட்டப்பட்ட அறை அது.அனாவசியமாக யாரும் அந்த அறைக்கு வர மாட்டார்கள்.எனவே எதோ முக்கியமான விசயத்தை அவர் பேச போகிறார் என்று தெரிந்தது.என்னவாக இருக்கும்,ஒருவேளை ரதியை கண்டுபித்துவிட்டது தெரிந்து அதுபற்றி பேச இருக்குமோ என யோசித்துக்கொண்டே அவருடன் நடந்து சென்றான் ஆதி.
“ஆதி அடுத்த வாரம் நம்ம ஊரு திருவிழா வருதுல்லப்பா.உனக்கு நியாபகம் இருக்கா” என கேட்டார் அவனுடைய தந்தை.
“என்னப்பா இப்படி கேக்கறீங்க.அது எப்படிப்பா நியாபகம் இல்லாம போகும்” என கேட்டான் ஆதி.
“நல்லதுப்பா உனக்கு அது நியாபகம் இருந்தா சரி” என்றவர் தொடர்ந்து “நம்ம எல்லோரும் அங்க போகணும்.அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு நினைச்சேன்.அதுக்காகத் தான் உன்ன இங்க வர சொன்னேன்.பேசலாமப்பா” என சொல்லிவிட்டு அவனுடைய முகத்தை பார்த்தார்.
அதுவரை ரிலாக்ஸ்ஸாக அமர்ந்திருந்த ஆதியின் மனதில் ஒரு மணியடித்தது, கண்டிப்பாக தனக்கு பிடிக்காத ஏதோ ஒரு விசயத்தை பற்றி பேசத்தான் தன்னை அழைத்திருக்கிறார் என்று.
எதற்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து நிமிர்ந்து அமர்ந்தான்.
தொடரும்!
{kunena_discuss:1181}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.