(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி

kadavul potta mudichu

ந்தினி போனை எடுத்துப் பார்த்தாள்.பெயர் இல்லாமல் நம்பர் மட்டும் தெரிந்தது.

யாரா இருக்கும் என யோசித்துக் கொண்டே அதை அட்டென்ட் செய்து “ஹலோ,யார் பேசுறது” என்றாள்.

“ஹலோ,நந்தினி.நா ஆதி பேசறேன்”

“ஆதியா,எந்த ஆதி” என கேட்டு முடித்த பின்பே பேசுவது யார் என புரிந்தது.

அதற்குள் ஆதி “உனக்கு ஆதிங்கற பேர்ல அப்படி எத்தன பேரமா தெரியும்” என்றான் நக்கலாக.

 அவளுடைய பதிலை எதிர்பாராமலே “உன்னோட கழுத்துல போட்ருகியே, அந்த தாலிய போட்டு விட்டது நாந்தான்.இப்பவாவது உனக்கு நியாபகம் வந்திருச்சா” என்றான் ஆதி.

“உங்களுக்கு எப்படி என்னோட போன் நம்பர் தெரியும்”

“இந்த உலகத்திலேயே தன்னோட ஹஸ்பண்ட்கிட்ட இப்படி ஒரு கேள்விய கேக்ற முத பொண்ணு நீயாதான் இருப்ப”

இவன் எதுக்கு இப்போ நமக்கு போன் செய்றான் என நினைத்த நந்தினி அமைதியாக இருந்தாள்.

“நா இப்ப உனக்கு ஏன் போன் செஞ்சேன்னு கேக்க மாட்டியா” என்றான்

“ஏன்” என அவள் கேட்கும்போதே  நந்தினியின் ரிங்டோன் சத்தம் திரும்பவும் கேட்டது.நம்மளத் தவிர இந்த ரூம்ல யாருடைய போனும் இல்ல.நாம போன்ல பேசும்போது எப்படி இது சாத்தியம் என நினைத்தாள் நந்தினி.

போன் சத்தம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாக கேட்டது.ஒருவேள நம்ம கையில் இருக்கும் போன்தான் லைன் கட் ஆனதால திரும்ப ரிங் ஆகுதோ என நினைத்தவள் தன்னுடைய கையை பார்த்தாள்.அங்கு போன் இல்லை.

  ஒருவழியாக நந்தினியின் தூக்கம் கொஞ்சம் கலைந்தது.கண்ணை மூடிக்கொண்டே கையால் தடவி போனை எடுத்தவள்

“ஹலோ யார் பேசுறது” என்றாள் தூக்க கலக்கத்துடனே.

அவளுடைய குரலை வைத்தே “ஓ தூங்கிட்டு இருக்கியா, அதான பாத்தேன். பொதுவா நா போன் செஞ்ச உடனே அட்டென்ட் செஞ்சுருவியே. இன்னைக்கு ரெண்டு தடவ ட்ரை செஞ்சும் போன் எடுக்காததனால என்னவோ ஏதோன்னு நினைச்சேன்.எதுக்கும் இன்னொரு தடவ ட்ரை செய்வோம்னு நினைச்சுதா போன் செஞ்சேன்.நல்லவேளை அதுக்குள்ள நீயே போன எடுத்துட்ட” என்றாள் சரண்யா.

தூக்கம் முழுதாக கலைந்து விட்டாலும் கண்ணை திறக்க மனமில்லாமல் கண்ணை மூடிக்கொண்டே “ஏன் சரண்,இவ்ளோ சீக்கிரமா என்ன எழுப்புற.அடிக்கடி நைட் தூங்கும்போது சண்டை போட்டு உங்கண்ணன் என்ன தூங்கவிடாம டார்ச்சர் பண்றாரு.அட்லீஸ்ட் காலையில யாவது நல்லா தூங்கலாம்ன்னு பாத்தா நீ போன் செஞ்சு என்ன டார்ச்சர் செய்ற.என்ன தூங்க விடாம செய்றதுல உங்களுக்கெல்லாம் அப்படி என்னடி சந்தோஷம்” என கேட்டாள் நந்தனி.

“என்னது காலையிலையா இப்போ டைம் என்ன தெரியுமா“

“என்ன”

“5.௦௦ மணி”

“அதிகாலையில அடிப்பாவி உனக்கு தூக்கம் வரலைங்கரதுக்காக என்ன எழுப்பி டார்ச்சர்  செய்றியா.அதுசரி இவ்ளோ சீக்கிரமா நீ எப்படி எழுந்த” என்றாள் நந்தினி.

“உன்ன சொல்லி குத்தம் இல்லைடி வாட்ச் கண்டுபிடுச்சவன சொல்லனும் அவன் மட்டும் ஏன் கையில கெடச்சான் செத்தான்”

 “சரண்யா, நீ பேசுறத ட்ரான்ஸ்லேட் பண்ண என்கிட்ட strength இல்லை.அதனால சுத்தி வளைக்காம என்ன விசயம்னு சொல்லு”

“பின்ன என்னடி 24 மணி இருக்கிற மாதிரி வாட்ச் கண்டுபிடிக்க வேண்டியதுதான.12 மணி நேரம் இருக்கிற மாதிரி கண்டுபிடுச்சா காலையிலயும் மாலையிலையும் ஒரே மாதிரி நேரத்தைத் தான் காட்டும். லூசு இது சாயந்தரம்.கல்யாணம் ஆயிடுச்சுன்னுதா பேரு,ஆனாலும் உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா” என பேசிக் கொண்டே போனவள் நந்தினியின் குரல் கேட்கவும் நிறுத்திவிட்டு அதை கவனிக்க ஆரம்பித்தாள்.

“நிஜமாவே இது ஈவினிங்கா , அப்பா இப்போதான் எனக்கு சந்தோசமா இருக்கு” என சொன்னவள் குரலில் நிஜமாகவே சந்தோஷம் வெளிப்பட்டது.

“அதுக்கு ஏண்டி இவ்வளவு சந்தோசப்படுற” என கேட்டாள் சரண்யா

 “முதல்ல எனக்கு ஒரு சந்தேகம்,அத கிளியர் பண்ணு.அதுக்கப்றமா நீ கேட்டதுக்கு நா பதில் சொல்றேன்” என்றாள் நந்தினி

“என்னன்னு கேளு” என்றாள் சரண்யா

“இல்லை இந்த அதிகாலையில வர்ற கனவுதான பலிக்கும்.ஈவினிங் வர்ற கனவு பலிக்காதுல்ல” என கேட்டாள்

“ஆமா நீ சொல்றது சரிதான்.அப்படி என்னடி பயங்கரமான கனவு கண்ட,அது பலிக்காதுன்னு சந்தோஷப்படுறதுக்கு” என்று கேட்டாள் சரண்யா

கனவில் நடந்ததை அப்படியே நந்தினி விவரித்ததை கேட்ட சரண்யா சிறிது யோசித்துவிட்டு “கவலைப்படாத நந்தினி.அதிகாலையில வந்திருந்தாக்கூட இந்த கனவு கண்டிப்பா நடக்காது” என்று சொன்னாள் சரண்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.