(Reading time: 13 - 25 minutes)

நந்தினிக்கு சரண்யா சொன்னதில் நம்பிக்கை இல்லையென்றாலும் போன் சுவிச் ஆப் ஆகியதால் அவளுடைய சார்ஜரை தேட ஆரம்பித்தாள்.அவளுடைய bag மற்றும் சூட்கேஸில் கிடைக்காததால் ஆதியினுடைய பெட்டியை திறக்க முயன்றாள்.அது பூட்டு போட்டு மூடியிருந்தது.

சார்ஜ்ஜர் கிடைக்காதபோது லைட்டாக தோன்றிய எண்ணம் இப்போது கொஞ்சம் அதிகரித்தது.

ஒருவேளை சரண்யா சொன்னது உண்மையாக இருக்குமோ.ம்ஹூம் அவசரப்படக்கூடாது. சரண்யா எப்போதுமே நம்மிடம் விளையாடுபவள்.பொய்யையும் உண்மைபோலவே சொல்லக் கூடியவள்.

அனாலும் இவ்வளவு பெரிய விஷயத்தில் பொய் சொல்வாளா என நினைத்த நந்தினி எதற்கும் இதை எப்படியாவது திறந்து பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்தாள்..

அதற்கேற்றாற்போல் ஹேர்பின்னை வைத்து பூட்டை திறந்தும் விட்டாள்.ஆனால் என்ன முயன்றும் அந்த சூட்கேஸை திறக்க முடியவில்லை.

இப்போது தொண்ணூறு சதவீதம் சரண்யா சொல்வதில் நம்பிக்கை ஏற்பட்டது.

கட்டிலில் வந்து அமர்ந்து என்ன செய்யலாம் என அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த நந்தினி அங்கு ஆதி இருப்பதைப் பார்த்ததும் என்னுடைய சார்ஜ்ஜர் எங்க என்று கேட்டாள்

உன்னோட சார்ஜ்ஜர் எங்கன்னு என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும் என்றான் ஆதி கதவை மூடி ரூமுக்குள் வந்தவாரே.

பொய் சொல்லாதீங்க.அத நீங்கதா எங்கேயோ எடுத்து வச்சுருக்கீங்கன்னு எனக்கு தெரியும்.அதனால மரியாதையா அத என்கிட்ட குடுத்துருங்க என்றாள் நந்தினி

குடுக்கலைன்னா என்ன செய்வ என்ற ஆதி சிறிது யோசித்தவன்,

நீ கேக்றத பார்த்தா உனக்கு எப்படியோ என்னோட ப்ளான் என்னன்னு தெரிஞ்சிருச்சு போல இருக்கு,ஓகே நந்தினி என்னதா இருந்தாலும் நீ ரதியோட சிஸ்டர்.உன்ன நா ஏதாவது செஞ்சா அவ ரொம்ப வருத்தப் படுவா அதனால நா உன்ன எதுவும் செய்ய வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.சோ உன்னோட சார்ஜ்ஜர உனக்கு திருப்பி குடுத்துடுறேன்.ஆனா ஒரு கண்டிஷன் என்றான்

என்ன

நா கேக்ற எல்லா கேள்விக்கும் நீ பதில் சொல்லனும்.அதவிட முக்கியமா உண்மையான பதில் மட்டுமதா சொல்லனும்.பொய் சொல்றேன்னு தெரிஞ்சா அப்புறம் நா ரதியோட சிஸ்டர்ன்னு கூட பாக்க மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன் என்றான் ஆதி

உடனே சரி என தலையாட்டினாள் நந்தினி

உண்மைய சொல்லு நீ முதல்ல எங்க கல்யாணத்த எப்படியாவது நிறுத்தனும்ன்னுத்தான நினைச்ச  என்றான் ஆதி

சிறிது தயக்கத்துடன் ஆமாம் என தலையாட்டினாள் நந்தினி

ஏன் அப்படி செஞ்ச என்று கேட்டான் ஆதி

தொடரும்!

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1181}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.