(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி

kadavul potta mudichu

ன்கிட்டதான் கேட்டுகிட்டு இருக்கேன்.நீ பதில் சொல்லாம இருந்தேனா,என்ன அர்த்தம்” என கேட்டான் ஆதி.

“இல்லை சரியா கவனிக்கல.என்ன சொன்னிங்க”

“நீ சரியாதான் கவனிச்சுகிட்டு இருக்க.இங்க இருந்து எப்படி தப்பிச்சு போகலாம்னுதான பாக்கிற.முதல்ல ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ.நா உள்ள வரும்போதே நம்ம ரூமோட கதவ லாக் செஞ்சுட்டேன்.இங்க இருந்து வெளில போறதுக்கு அது ஒண்ணுதா வழி.அதனால நா கேட்ட,கேக்கப்போற எல்லா கேள்விக்கும் ஒழுங்கா பதில் சொல்லு.அது ஒண்ணுதா நீ என்கிட்ட இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி.புரிஞ்சதா” என்றான் ஆதி

புரிந்தது என்பதற்கு அறிகுறியாக தலையாட்டிய நந்தினி “எனக்கு உங்களை பிடிக்காது.அதனாலதான்” என்றாள் முன்பு கேட்ட கேள்விக்கு விடையாக.

“உனக்கு என்ன பிடிக்கலைங்கரதுக்காக நீ இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நினைச்சியா.இது உனக்கே ஓவரா தெரியல”

“நீங்க எங்க அக்காவ நல்லா வச்சுக்க மாட்டீங்கன்னு நினைச்சதாலதான்,நா அந்த மாதிரி செஞ்சேன்.”

“எத வச்சு அவள நா நல்லா வச்சுக்க மாட்டேன்னு சொல்ற”

“உங்களுக்கு பொண்ணுங்க மேல நல்ல ஒப்பினியனே இல்லைன்னும், நீங்க எல்லா பொண்ணுங்களையுமே ரொம்ப அலட்சியமாதான் நடத்துவீங்கன்னும்” அக்காவோட வேலை பார்த்த பொண்ணுங்க நிறைய பேர் என்கிட்ட சொல்லிருக்காங்க.

“அதனால

“இப்போ அவளோட அழகைப் பார்த்து நீங்க அவளைக் காதலிச்சிருக்கலாம்.கொஞ்ச நாள் கழிச்சு உங்களுக்கு அவமேல இருக்குற மோகம் போனதும் நீங்க மத்த பொண்ணுங்கள நடத்துற மாதிரி அவளையும் இன்சல்ட் செய்வீங்கன்னு நா நினைச்சேன்.”

“ம்ம்.அப்புறம்”

“அவ ரொம்ப சென்சிடிவ்.அவளை எங்க வீட்ல யாருமே திட்டுனது கிடையாது.அவ நல்லா படிக்கிற பொண்ணு அண்ட் ரொம்ப டிசிப்ளினான பொண்ணுகூட.அதனால ஸ்கூல்,காலேஜ்லயும் அவ திட்டு வாங்கினது கிடையாது.சொல்லப்போனா எங்கயுமே அவ அவ்வளவா திட்டு வாங்கினது கிடையாது.சோ ஆப்டர் மாரேஜ் அவள ரொம்ப நல்லா பார்த்துக்கிற ஒரு பையனதான் அவ செலக்ட் செஞ்சிருக்கணும்.உங்களை பத்தி தெரியாம உங்களை செலக்ட் செஞ்சுட்டா.அதனால அவளுக்கு அத புரிய வைக்க நெனச்சேன்.”

“என்ன பாக்காம என்கூட பேசாம யாரோ சொல்றத கேட்டு நீ எடுத்த டெசிஷன் உனக்கு சரின்னு தோணுதா.அதவிடு அவளை கடத்தியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நினைச்சப்போ அதனால அவளோட பேரு,எதிர்காலம் எல்லாமே பாதிக்கப்படும்ன்னு உனக்கு தோணலையா.நீ பேசுறது முன்னுக்குப்பின் முரணா உனக்கே தோணலையா”

“நா ஒன்னும் அவளைக் கடத்தல”

“ம்.அப்புறம் நீதான இந்த கல்யாணத்த நிறுத்தனும்ன்னு நினைச்சேன்னு சொன்ன”

“இந்த கல்யாணத்த நிறுத்தனும்ன்னு நினைச்சேன்னுதான் சொன்னேன்.அவள கடத்துனேன்னு ஒன்னும் சொல்லலையே” என்றவள் தொடர்ந்து

“உங்களுக்கு முதல்ல இருந்து எல்லாம் சொன்னாதான் புரியும்.இல்லைன்னா இப்படிதான் அடிக்கடி கேள்வி கேட்டுகிட்டே இருப்பீங்க.அதனால நா முழுசா சொல்லி முடிச்சுடுறேன்.அதுவரைக்கும் பேசாம நா சொல்றத மட்டும் கேளுங்க.அதுக்கப்புறமா உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்ததுன்னா என்கிட்ட கேளுங்க” என்றாள்.

“சரி சொல்லு” என்றான் ஆதி.

“ஒரு நாள் நானும் நந்துவும் ஒரு ஹோட்டலுக்கு சாப்ட போயிருந்தோம்.அங்க உங்களை பாத்தோம்.நந்துதான் சொன்னான் நீங்க ரதியோட பாஸ்னு.அதுமட்டுமில்ல உங்ககிட்ட பேசலாம்னும் சொன்னான். அப்போ ரதி உங்களை லவ் பண்றது எங்களுக்கு தெரியாது.”

“அப்புறம் எதுக்காக என்கிட்டே பேசணும்னு சொன்னான்.”

“இப்போதான சொன்னேன் குறுக்க பேசாதீங்கன்னு.அதுக்குள்ள கேள்வி கேக்குறீங்க”

“எனக்கு எந்த கேள்வியும் தோணாத அளவுக்கு உனக்கு எக்ஸ்ப்ளைன் செய்ய முடியல.இதுல என்ன குறை சொல்ற.”

“உங்களுக்கு என்ன நடந்ததுன்னு சொல்றதே பெரிய விஷயம்.இதுல எனக்கு ஒழுங்கா எக்ஸ்ப்ளைன் செய்ய தெரியலைன்னு வேற சொல்றீங்க.அதனால இதுக்குமேல என்ன நடந்ததுன்னு நா சொல்ல மாட்டேன்”

“ஓகே ஸாரி நந்தினி.இனிமே உன்ன குறை சொல்லல.என்ன நடந்ததுன்னு சொல்லு.”

“ம். அது” என்று கெத்தாக சொன்னவள் தொடர்ந்தாள்.

“என்னதான் உங்க அப்பா பெரிய பிசினஸ்மேன்னாலும் நீங்க உங்களோட கம்பெனிய அப்பாவோட உதவி இல்லாம தனியா உங்க ப்ரெண்டோட சேர்ந்து ஆரம்பிச்சு இருக்கீங்க.அதுக்கான முதல்கூட பாங்க்ல தா கடனா வாங்கியிருக்கீங்க.அதுவும் இப்போ ரொம்ப successfullaa போகுது.அத பத்தின ஆர்டிகிள் ஒரு பேமஸான பிஸினஸ்மேகசின்ல வந்திருந்துச்சு.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.