(Reading time: 15 - 29 minutes)

“அவ்ளோதானா.அந்த ஆர்டிக்கிலேயே ரெண்டு பக்கம் என்ன பத்தி எழுதியிருந்தாங்க. இன்னும்கூட என்னப்பத்தி நிறைய ஆர்டிக்கிள் வந்துருக்குது. இப்போ அதுக்கு என்ன”

“அதுக்கு என்னவா.உங்களைப் பத்தி அவ்ளோ எழுதுனவங்க முக்கியமான ஒரு விஷயத்தை எழுதாம விட்டுட்டாங்க.”

“என்ன”

“ம்.நீங்க ஒரு ஸெல்ப் டப்பான்னு”

“கிண்டலா”

“பின்ன.இன்னும் ரெண்டு நிமிஷம் அமைதியா நா சொன்னத கேட்டு இருந்தா உங்களுக்கே நா ஏன் அத சொல்ல வந்திருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு போகுது.அத விட்டுட்டு இடையில பேசி என்னோட டைம வேஸ்ட் செய்றீங்க.”

“சரி.சொல்லு.”

“அந்த மேகஸின் படிச்சதில இருந்து என்னோட தம்பிக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்களை மாதிரியே யாருடைய உதவியும் இல்லாம தானும் முன்னுக்கு வரணும்ன்னு ஒரு எண்ணம்.உங்களை அவன் தன்னோட ரோல்மாடலா நினைச்சிருந்தான்.உங்ககூட ஒரு தடவையாவது நேர்ல பேசனுங்கறது அவனுடைய கனவுன்னுகூட சொல்லலாம்.சொல்லப்போனா ரதிய உங்க கம்பெனிக்கு resume அனுப்ப சொன்னதே அவன்தான்.”

“ம்.அப்புறம்.”

“அதனால,உங்களை அங்க நாங்க எதிர்பாராத விதமா பார்த்ததும் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.”

“ம்”

“அதனால உங்ககூட பேசலாம் வான்னு என்ன கூப்ட்டான்”.

“நா உங்ககூட பேசுனதுமாதிரி எனக்கு ஞாபகம் இல்லையே.”

“உங்ககூட பேசுற எல்லாரையும் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா”

“நா பிஸினஸ் செய்ய ஆரம்பிச்சபோது அப்பா குடுத்த முதல் அட்வைஸ் நாம பேசுற எல்லாரையும் நல்லா ஞாபகம் வச்சுக்கனும்ன்னுதான்.பேசுற வார்த்தைகளையும் அவங்களோட பாடிலாங்குவேஜையும் கூட கவனிச்சு அத மறக்காம இருக்கனும்ன்னும் சொன்னாரு.”

“ஏன்”

“ஏன்னா பிசினஸ்ல நமக்கு பிரெண்ட்ஸவிட எதிரிங்கதா அதிகமா இருப்பாங்க.அதனால எப்பவாவது நமக்கு ஏதாவது நெருக்கடி அல்லது பிரச்சனை வந்தா அது யாராலன்னு நாமளே அடு யாராலன்னு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்.”

“அப்புறம் ஏன் உங்களுக்குன்னு ஒரு பெர்சனல் டிடெக்டிவ் வச்சிருக்கீங்க”

“எவ்ளோதான் நாம கவனமா இருந்தாலும் நம்மளால கண்டுபிடிக்க முடியாத பிரச்சனைகள் எப்பவுமே இருக்கும்.அத கண்டுபிடிக்கத்தான்.”

“ரதி விஷயம் மாதிரி” என்றாள் நந்தினி

“அப்படியே பேச்சை மாத்திட்டியே.நா கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான் ஆதி.

“ம்ம்ம்ம். என்ன கேட்டீங்க.எனக்கு மறந்து போச்சே” என யோசிப்பவள் போல நடித்த நந்தினி,

அவன் முறைப்பதை கவனித்து விட்டு “ம்ம்,இப்போ ஞாபகம் வந்துருச்சு.உங்களுக்கு எங்க கூட பேசுனது மாதிரி ஞாபகம் இல்லைன்னுதான.அதுக்குபேருதான் கேள்வியா” என்று அவனுடைய கோபத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிவிட்டு தொடர்ந்து

“நாங்க உங்ககூட பேசவே இல்லை,அதனாலதான் உங்களுக்கு ஞாபகம் வரல” என்றாள்.

“நீதான உன்னோட தம்பி என்கூட பேசனும்ன்னு கூப்பிட்டதா சொன்ன”

“கூப்பிட்டதாதான சொன்னேன்,பேசினோம்னு சொல்லலைல “

“ம்.சரி.அப்புறம் என்ன நடந்தது.”

“நீங்க யாரோ ஒருத்தரோட ரொம்ப தீவிரமா பேசிகிட்டு இருந்தீங்க.அதனால இப்போ போய் பேச வேண்டாம்னு” நா சொன்னேன்.அதுமட்டுமில்ல யார்னே தெரியாதவங்ககூட நீங்க பேசுவீங்கலான்னும் எனக்கு தெரியாது.எல்லார்க்கு முன்னாடி அவன அசிங்கப் படுத்திடுவீங்கலோன்னும் எனக்கு தோணுச்சு.அத சொன்னா நந்து ஒத்துக்க மாட்டான்னு தோணுனதுனால அப்போதைக்கு அப்படி சொல்லி அவன அங்க இருந்து கூப்பிட்டு போகலாம்ன்னு நா நினைச்சேன்.

“ஆனா அவன் அவர்கூட பேசலைன்னாலும் பரவால்லக்கா அவர் பக்கத்துல இருக்கிற டேபிளயாவது உக்காரலாம்.ஒருவேள அவர் பேசிமுடிசுட்டாருன்னா நாம அவர்கூட பேச வசதியா இருக்கும்ன்னு” சொல்லிட்டு என்னுடைய பதிலை எதிர்பார்க்காமலே உங்களுக்கு பின்புறம் உள்ள டேபிளில்போய் உக்காந்துட்டான்.

ம்

வேற வழியில்லாம நானும் வந்து அவன் பக்கத்துல உட்கார்ந்தேன்.

ம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.