(Reading time: 15 - 29 minutes)

நீ அப்படி எதாவது ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டா கூட பரவால்லைடா நா உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்.ஏன்னா நீ ரொம்ப பொறுப்பான பெர்சன்.அப்படி நடந்துட்டா அதுக்கப்புறமா அந்த பொண்ண நீ கைவிட மாட்ட.அது யாரா இருந்தாலும் அவங்கள நீ கல்யாணம் செஞ்சுப்ப.ஆனா நீ ஒரு பொண்ணோட மனசுகூட விளையாடனும்னு நினைக்கிற.அதனாலதான் நா வேண்டாம்ன்னு தடுக்குறேன்  என கூறி முடித்தார்.

அதுக்கு நீங்க “மனசா,அதுவும் பொண்ணுங்களுக்கா.அப்படின்னு ஒண்ணு அவங்களுக்கு கிடையாது.அத நிரூபிக்கத்தான் நா ட்ரை பண்றேன்னு சொல்றேன்.ஆனா நீ ஒத்துக்க மாட்டேன்னு சொல்ற.உனக்கே நல்லா தெரியும் இந்த ஆதி ஒரு முடிவு எடுத்துட்டா அதுல இருந்து பின்வாங்குறது ரொம்ப கஷ்டம்னு.நா இப்போ டிசைட் பண்ணிட்டேன் உனக்கு பொண்ணுங்க எப்படிப்பட்டவங்கன்னு நிரூபிக்கனும்ன்னு” அப்படின்னு சொன்னீங்க.

எப்படி நான்தா உனக்கு எந்த பொண்ணு பேரையுமே சொல்லவே இல்லையே.அப்புறம் எப்படி நீ ப்ரூவ் செய்ய முடியும் என கேட்டார் உங்க பிரெண்ட்.

ம்ம்

அதுக்கு நீங்க வேற யாரோ ஒரு பொண்ண ஏன் செலக்ட் செய்யணும்.உனக்குதா ரதி மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருக்கே.அதனால ரதிய வச்சே நா சொன்னது கரெக்டுன்னு ப்ரூவ் செய்யறேன்னு சவால் விட்டீங்க

ம்ம் என்றவன் பதில் இல்லாது போகவும்

அப்புறம் என்றான்

அப்புறம் நீங்கதான் சொல்லனும் ஏன் அப்படி சொன்னீங்கன்னு.ஒருவேள உங்க சவால்ல நீங்க ஜெயிசுட்டதுனால நீங்கதா ரதிய கடத்திட்டீங்களா.

முதல்ல நீ எல்லாத்தையும் சொல்லி முடி,கடைசியில நா சொல்றேன் என்றான் ஆதி

முடியாது.பர்ஸ்ட் நீங்க சொல்லுங்க.அப்போதான் நா அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லுவேன் என்றாள் நந்தினி

உனக்கு மறந்துடுச்சுன்னு நினைக்கிறேன். நீ பத்ரமா வீடு போய் சேர வேண்டாமா.நீ இப்போ ஒழுங்கா நடந்த எல்லாத்தையும் சொல்லாட்டினா அப்புறம் நா ஏற்கனவே செஞ்ச ப்ளான நிறைவேற்ற வேண்டி இருக்கும் என ஆதி சொன்னவுடன்

நந்தினி சிரிக்க ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் நா, உன்கிட்ட நல்லா பேசுன உடனே உனக்கு ரொம்ப தைரியம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன்.உன்னோட சார்ஜர் இன்னும் என்கிட்டதான் இருக்கு.ரூமும் பூட்டி இருக்கு.நான் சும்மா உன்ன பயமுறுத்துறேன்னு நினைக்காத.அது உனக்கு நல்லது கிடையாது என்றான் ஆதி.

அவன் சொல்வதை கேட்ட நந்தினி ஓ நீங்க என்ன பயமுருத்துனதுனாலதா நா நீங்க கேட்ட கேள்விகெல்லாம் பதில் சொன்னேன்னு நினைச்சீங்களா

அப்போ உனக்கு பயமே கிடையாதுன்னு சொல்ல வர்றியா

இல்லை நார்மலா இருந்தா பயப்பிட்டு இருப்பேன்

இப்போ மட்டும் என்ன.அந்த ப்ளான நீ நம்பலையா.அதனாலதான் உனக்கு பயம் வரலையா

அப்படி இல்லை.அந்த ப்ளான் உண்மையா பொய்யான்னு எனக்கு இப்பவும் தெரியாது.ஆனா நீங்க நெனச்சாகூட உங்களால என்ன எதுவும் செய்ய முடியாது.இன்னும் சொல்லப் போனா எனக்கு ஏதாவது ஆபத்து வந்தாகூட நீங்கதா என்ன அந்த ஆபத்திலிருந்து காப்பாத்த வேண்டிய நிலைமையில இருக்கீங்க

புரியல

சரி,உங்களுக்கு புரியுற பாஷையிலையே சொல்றேன்.கேட்டுக்கோங்க.

ம். சொல்லு.

சரண்யா எனக்கு போன் செஞ்சு நீங்க என்ன எதோ செய்ய ப்ளான் செஞ்சுருக்கீங்கன்னு சொன்னா

அதனால

எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ உங்கள சும்மா விட மாட்டா

அவ என்னோட சிஸ்டர்.

அதுதா எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.உங்களைமாதிரி சிடுமூஞ்சி அண்ட் நல்ல்துன்னாலே கிலோ என்ன விலைன்னு கேக்குற ஒருத்தருக்கு எப்படி இவ்ளோ சாப்டா ரொம்ப நல்ல ஹுமர்சென்ஸ் அண்ட் நல்ல கேரக்ட்டர் உள்ள ஒரு பொண்ணு சிஸ்டரா இருக்க முடியும்.

ம்.ஒரு பொண்ணுன்னா எப்படி இருக்கணுமோ அப்படி ரொம்ப நளினத்தோடவும்,அடக்கமா அதிர்ந்தோ எதிர்த்தோ பேசாத ரதி எப்படி அதுக்கு ஆப்போசிட்டா இருக்குற உனக்கு சிஸ்டரோ அப்படிதான்.

அதுகூட பரவாயில்ல டிரஸ்ஸ பாரு பேண்ட் ஷர்ட்.ஹேர் பாப் கட்.உன்ன பொண்ணுன்னு சொன்னாகூட எல்லாரும் ஆச்சர்யமாத்தான் பார்ப்பாங்க

ஓகே நம்ம சண்டைய அப்புறம்கூட வச்சுக்கலாம்.முதல்ல நீங்க ஏன் உங்க பிரெண்டுகிட்ட அப்படி சொன்னீங்கன்னு சொல்லுங்க

நா ஏன் சொல்லனும்.சரண்யா என்னோட சிஸ்டர்.அதனால அவ எனக்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டா.சோ நீ முதல்ல சொல்லு.

அப்படியா.உங்களுக்கு மறந்துருச்சுன்னு நினைக்கிறேன்.ஒருதடவ நா உங்க காரோட டயர பஞ்சராக்குனதுக்கு நீங்க என்ன திட்டிட்டு இருந்தத பார்த்த உங்க அப்பாவும் அம்மாவும் வந்து கேட்டப்போ சரண்யா எனக்குத்தான் சப்போர்ட் செஞ்சா

அது ரொம்ப சின்ன விஷயம்.அதுமட்டுமில்ல அப்போதான் நீ வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள்தா ஆச்சு.அதனால உன்மேல இரக்கப்பட்டு உனக்கு சப்போர்ட் செஞ்சுருப்பா.பட் இப்போ அப்படி கிடையாது.எல்லாத்துக்கும் மேல சப்போர்ட் செய்யனும்ன்னாகூட நீயே இல்லாதப்போ அவ என்ன செய்ய முடியும் சொல்லு.

சரி நீங்க என்ன செய்யணுமோ செஞ்சுக்கோங்க.ஆனா ஒண்ணு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.இதுக்குமேல என்ன நடந்ததுன்னு நா உங்களுக்கு சொல்லனும்ன்னா நீங்க நடந்த எல்லா விசயத்தையும் என்கிட்டே சொல்லனும்.அப்படி இல்லன்னா நானும் சொல்ல மாட்டேன்.

தொடரும்!

Episode # 03

Next episode will be published on 1st June. This series is updated fortnightly on Friday Evenings.

{kunena_discuss:1181}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.