(Reading time: 15 - 29 minutes)

நீங்க தொடர்ந்து பேசிகிட்டு இருந்தீங்க.நாங்க வந்ததையே கவனிக்கல.உங்க கூட பேச முடியலைன்னாலும் நீங்க பேசுறத கேக்குறதே அவனுக்கு சுவாரஸ்யமா இருந்துச்சு.அதனால அவன் உங்க பேச்சை கவனிசுகிட்டு இருந்தான். அவனுக்கு இருந்த ஈடுபாட்ட பாத்துட்டு சர்வர் வந்ததும் அவனுக்கும் சேர்த்து நானே ஆர்டர் செஞ்சேன்.

ம்.

இவ்ளோ சுவாரஸ்யமா கவனிக்கற அளவுக்கு அப்படி என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க எனக்கும் ஆர்வமா இருந்ததால நீங்க பேசுறத நானும் கவனிக்க ஆரம்பிச்சேன்.நீங்க பிஸினஸ் பத்தின நெளிவு சுழிவுகளப் பத்தி உங்க பிரெண்டுக்கு சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தீங்க.அப்படியே உங்க பிஸினஸ இன்னும் எப்படி டெவலப் பண்ணலாம்னு பேச ஆரம்பிச்ச உங்களோட பேச்சு உங்களிடம் வேலைக்கு புதுசா சேர்ந்த வோர்க்கர்ச பத்தி திரும்பிச்சு.ஒவ்வொரு பேரா சொல்லி அவங்களப் பத்தின உங்களோட ஒபினியன உங்ககூட இருந்தவரு உங்ககிட்ட கேட்டாரு.

எதுவோ புரிந்ததுபோல நிமிர்ந்து அமர்ந்த ஆதி “அவர் என்னுடைய பிரெண்ட்” என்றவன் தொடருமாறு சைகை செய்தான்

நீங்களும் உங்க ஒபினியன சொல்லிட்டு வந்தீங்க.அப்போ ரதி பேர் வந்தது.

ம்

நீங்க அவங்களோட வொர்க் ரொம்ப பெர்பெக்டா இருக்கு.அவங்க குடுத்த வேலையா டெடிகேசனோட செய்றாங்க என்று அவளைப் பத்தி ரொம்ப உயர்வாக சொன்னீங்க.

அப்போ உங்க பிரெண்ட் நீ யாரையும் அவ்ளோ சீக்கிரமா புகழ மாட்ட.அதுவும் பொண்ணுங்கள கேக்கவே வேண்டாம்.அதுவும் அவங்ககூட அடிக்கடி பேசுறேன்னு வேற கேள்விப் பட்டேன் என்ன லவ்வா அப்படின்னு கேட்டாரு.

அதுக்கு நீங்க லவ்வா,நானா.நோ வே.அப்படின்னு சொன்னிங்க

ம்

லவ் பண்ற எல்லாரும் முதல்ல சொல்ற வசனம் இதுதாண்டா என்று சொன்னார் உங்களுடைய நண்பர்.

நானும் மத்தவங்களும் ஒண்ணா.மத்தவங்கள வச்சு என்ன எடை போடாதே என்று சற்று கோபமாக சொன்னீங்க.

அத கேட்ட உங்க பிரெண்ட் “ம்.அப்புறம் உனக்கு பொண்ணுங்கன்னாலே சுத்தம்மா பிடிக்காது. பொண்ணுங்கமேல உனக்கு நல்ல ஒபினியன் இல்லை இதெல்லாம் விட்டுட்டியே” என சிரித்து கொண்டே சொன்னவர் “உன்ன பத்தி எனக்கு தெரியாதா,சும்மா விளையாட்டுக்கு சொன்னா இவ்ளோ கோபப்படுற” என்றார்

சாரிடா என நீங்க தணிந்து வந்ததும்

பரவால்ல ஆதி என்ற உங்களுடைய நண்பர்

தொடர்ந்து ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லா பொண்ணுங்களுமே தப்பானவங்க கிடையாது.ஏன் ரதியவே எடுத்துக்கோயேன் அவங்க எப்பவாவது உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி எடுத்துருக்காங்களா.இல்லை உன்ன இம்ப்ரெஸ் செய்யனும்ன்னு நினைச்சு ஏதாவது செஞ்சிருக்காங்களா நீயே சொல்லு என கேட்டார்.

எப்படி செய்ய முடியும்.புதுசா வேலைக்கு சேர்ந்த எல்லா லேடிஸ் ஸ்டாப்புக்குமே இதுக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்து என்ன இம்ப்ரெஸ் செய்யனும்ன்னு நினைச்ச எல்லோரையும் எப்படி வேலைய விட்டு தூக்குனேன்னு உன்னோட சிஸ்டர விட்டு எல்லார்கிட்டயும் சொல்ல வச்சுட்டேனே.அப்புறம் எப்படி அந்த மாதிரி யாரும் முயற்சிப்பாங்க என நீங்க பதில் சொன்னீங்க.

தப்பு ஆதி.நீ நினைக்கிறது ரொம்பவே தப்பு.நம்ம நாட்டுல நிறைய நல்ல பொண்ணுங்க இருக்காங்க.அதிலயும் ரதி ரொம்ப நல்ல பொண்ணு அப்படின்னு உங்க பிரெண்ட் சொன்னாரு.

அப்படியா நீ சொல்றது உன்னோட ஒபினியன.பாவம் உனக்கு உன்ன போலவே எல்லாரையும் நல்லவங்கனு நினைக்கிற எண்ணம் இருக்கு.அதனால்தா இப்படி சொல்ற.உனக்கு சொன்னா புரியாது.அதனால நிரூபிச்சு காட்டுறேன் என நீங்க சொன்னீங்க .

எப்படி என கேட்ட உங்க நண்பரிடம்

நா ஏற்கனவே சொன்னதுதா.சந்தர்ப்பம் கிடைக்கததுனாலதான் இப்போ நம்மகிட்ட வேலைக்கு சேர்ந்த எந்த பொண்ணும் என்னோட வழிக்கே வர்றது கிடையாது.அதனால நீ யாராவது ஒரு பொண்ண சொல்லு அந்த பொண்ணுக்கு நா ஒரு சிட்சுவேஷன் அமைச்சு தர்றேன்.அப்புறம் அந்த பொண்ணு நடந்துக்கிற முறைய பார்த்து நீயே சொல்லுவ பொண்ணுங்க எல்லாருமே மோசம்ன்னு அப்படின்னு நீங்க சொன்னீங்க.

அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நீ உன்னோட கருத்துலேயே இரு.நா என்னோட கருத்துல இருக்கேன்.இதுக்காக எந்த பொண்ணோட வாழ்க்கையிலேயும் நீ விளையாட வேண்டாம்.

என்னடா என்னவோ என்ன பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சொல்ற.

என்னோட பணம்+புகழுக்கு யாரா இருந்தாலும் மயங்குவாங்கன்னுதான் நா உனக்கு நிரூபிக்க போறேன்.என்னோவோ அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க போற மாதிரி பேசுற என நீங்கள் கேட்கவும்

உன்னோட அப்பியரன்ஸ விட்டுட்ட என கேட்ட உங்களுடைய நண்பர் சிறிது இடைவெளி விட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.