(Reading time: 13 - 25 minutes)

நா சொன்னா நீ நம்ப மாட்டேன்னு எனக்கு தெரியும் நந்து.ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.எப்பவும் போல நா விளையாடுறேன்னு நீ நினைக்கிற.ஆனா நா சொல்றது நிஜம் நந்தினி என்ன நம்பு என்றாள் சரண்யா.

சரி நம்பிட்டேன் போதுமா என்றாள் நந்தனி நம்பவில்லை என தோன்றும் விதமான குரலில்.

ஏன் நந்தினி நா சொல்ரத நம்பவே மாட்டீங்கற என்றாள் சரண்யா ரொம்ப பாவான குரலில்.

எப்படி சரண்யா நம்ப முடியும் நீயே சொல்லு.என்ன இங்க விட்டுட்டு வந்த அங்க இருக்கிற எல்லாருக்கும் என்ன பதில் சொல்வாரு என்றாள் நந்தினி

உனக்கு இன்னும் அவனப் பத்தி முழுசா தெரியல.அதான் இப்படி சொல்ற.கொஞ்சம் யோசிச்சு பாரு நந்தினி அவனே உன்ன ஏதாவது செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து நீ வழியிலேயே தொலஞ்சு போயிட்டன்னு சொல்லலாம்ல.ஏற்கனவே ரதி காணாம போயிருக்கதுனால அவன யாரும் சந்தேகப்பட மாட்டாங்க.உன்ன கொலையே செஞ்சாகூட அத அவனோட செல்வாக்கு,பணம் இத வச்சு ஈஸியா மூடி மறைச்சுட முடியும்

ரதிக்கு தெரிஞ்சா

அவங்களுக்கு தெரிஞ்சாதான

சரி நீ சொல்றபடியே வச்சுப்போம்.எனக்காவது ஈவினிங்கே உங்க அப்பா சொன்னாரு. ஆனா உங்க அண்ணனுக்கு  நேத்து நைட் தா நாங்க இங்க வரப் போறது தெரியும்.அப்போதான் உங்க அப்பா அவர்கிட்ட அதப்பத்தி பேசுனாரு.அதுகுள்ள எப்படி எந்த பிளானும் செய்ய முடியும் என்றாள் நந்தினி

சொல்றேன் அதுக்கு முன்னாடி நா கேக்குற கேள்விக்கெல்லாம் கரெக்டா பதில் சொல்லு நீ தங்கியிருக்க ஹோட்டலோட பேரு உனக்கு தெரியுமா என்றாள்

இல்லை

சரி நீ எந்த ஊருல இருக்கன்னாவது உனக்கு தெரியுமா

ம்கூம்

அப்பா உங்கள எந்த ஊருக்கு போக சொன்னாருன்னு தெரியுமா

தெரியாது.ஏண்டி இப்படி சம்பந்த சம்பந்தமில்லாம கேள்வி கேட்டு என் உயிரை வாங்குற.இப்ப என்ன நீ சொன்னத நா நம்பனும் அவ்வளவுதான. நா நம்பிட்டேன் போதுமா என்றாள் நந்தினி

அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு நா சொன்னத நீ நம்ப வேண்டாம்.ஆனா உனக்கு மூளை கொஞ்சமாவது இருந்தா நீயே நல்லா யோசிச்சு பாரு.நீ இப்ப எங்க இருக்கன்னும் உனக்கு தெரியாது.எங்கப்பா உங்களை எங்க போக சொன்னாருன்னும் உனக்கு தெரியாது.அப்புறம் எப்படி ரெண்டும் ஒண்ணுன்னு உன்னால செக் செய்ய முடியும்.

சரி அத விடு உன்னோட ரூம வெளியில லாக் செஞ்சுட்டு போயிருக்கான் ஏன் நீ தப்பிச்சு போக கூடாதுன்னு தான்.அத விடு ரொம்ப பெரிய ஹோட்டல்ல இண்டர்காம் வொர்க் ஆகாம போகுமா.நீ அதுமூலமா வேற யாரையும் கான்டாக்ட் செஞ்சுரகூடாதுன்னுதா

இண்டர்காம் இருந்தாகூட இந்த ஹோட்டல்ல இருக்கிற யாரையாவது மட்டும்தான கான்டாக்ட் பண்ண முடியும்.ஆனா என்கிட்டதான் போன் இருக்கே அத வச்சு இந்த உலகத்துல இருக்கிற யாரா வேணாலும் கான்டாக்ட் செய்ய முடியுமே.அப்புறம் என்ன

அப்படியா.அதுக்கு போன்ல சார்ஜ் இருக்கணுமே

அது இருக்கிறதாலதான உன்னால என்கூட பேச முடியுது.

இப்ப இருக்கு சரி.எவ்ளோ நேரம் இப்படியே இருக்கும்.எப்படியும் பாட்டரி டவுன் ஆகத்தான செய்யும்

அதனால என்ன சார்ஜ் போட்டுகிட்டா போச்சு

அதுக்கு சார்ஜ்ஜர் வேணுமே

அதா என்கிட்டே இருக்கே

இருந்தா சரி.எதுக்கும் ஒரு தடவ தேடித் பார்த்துக்கோ.போன எடுத்தா ஈஸியா சந்தேகம் வந்துரும்.அதுமட்டும் இல்லாம போன நீ உன்னோட கையிலேயே வச்சுருப்ப அதனால அத எடுக்க முடிஞ்சுருக்காது.அதனால அதுக்கு பதிலா உன்னோட சார்ஜ்ஜர எடுத்து வச்சுருக்கலாம்.

“அப்புறம் நீ என்ன கேட்ட.இவ்ளோ ஷார்ட் டைம்ல எப்படி ப்ளான் செஞ்சுருக்க முடியும்ன்னா.அது இப்போ செஞ்ச ப்ளான் கிடையாது.ஏற்கனவே செஞ்சது.இதுவரைக்கும் நீயும் அவனும் மட்டும் தனியா எங்கயும் போனது கிடையாது.மறுவீட்டுக்கு போன போதுகூட நம்ம வீட்டு டிரைவரையும் சேர்த்துதா கூட்டிட்டு போயிருக்கீங்க.அவருதா உங்களுக்கு வண்டி ஓட்டிட்டு வந்தாரு.அவர் அப்பாவுக்கு ரொம்ப நம்பிக்கையான டிரைவர்.அதனால அவர வச்சுக்கிட்டு அவனால உன்ன எதுவும் செய்ய முடியல.

இப்போதான் அவனுக்கு சான்ஜ் கெடச்சிருக்கு.நந்தினி நீ என்ன பத்தி என்ன வேணா நினச்சுக்கோ நா உன்கிட்ட விளையாடுறேன்னு கூட நெனச்சுக்கோ அதப் பத்தி எனக்கு கவலை கிடையாது.ஆனா எனக்காக நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.அப்புறம் நா போன வச்ச உடனே எங்க யாருடைய நம்பரையாவது மனப்பாடம் செஞ்சுக்கோ.அப்பத்தான் ஒருவேள நீ தப்பிச்சா கூட எங்க யாரையாவது வெளியிலே இருக்கிற ஏதாவது பூத்துக்கு வந்தாவது கான்டாக்ட் பண்ண முடியும்” என சரண்யா பேசிக் கொண்டிருக்கும்போதே நந்தினியின் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.