(Reading time: 13 - 25 minutes)

“நானும் அப்படித்தான் நினைச்சேன் சரண்.உங்க சிடுமூஞ்சி அண்ணனாவது நல்லபடியா பேசுறதாவது.நீயும் அத வச்சுதான அப்படி சொல்ற”

“இல்லை”

“பின்ன எதவச்சு அந்த கனவுல வர்றது நடக்காதுன்னு சொல்ற”

“எங்கண்ணன் அவ்வளவு பேசும்போது நீ அமைதியா இருந்திருக்க.கனவுல நீ அமைதியா இருக்கறதே எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.இதுல நிஜத்திலேயும் நீ அப்படி இருப்பன்னு என்னால கற்பனைகூட பண்ண முடியல.அதனாலதான் சொல்றேன் அந்த கனவு எப்பவுமே நடக்காது” என்றவள் தொடர்ந்து “அது சரி,அண்ணா இப்போ என்ன செய்றான்” என்றாள்.

“ம்ம்.என்னையே கிண்டல் செஞ்சுட்டு என்கிட்டே உங்கண்ணா என்ன செய்றாருன்னு கேக்ற.அதெல்லாம் என்னால பாத்து சொல்ல முடியாது.உனக்கு வேணும்ன்னா நீயே மேல வந்து பாரு”.

“அடிப்பாவி உனக்கு டைம் தா என்னன்னு தெரியலைன்னா நீ இருக்கிற இடம் கூடவா தெரியாது.ஹனிமூனுக்கு போன ரெண்டு பேரும் போனே செய்யலையே,உங்களுக்கு என்ன ஆச்சோன்னு போன் செஞ்சா நீ ஹாயா தூங்கிகிட்டு இருக்க” என்றவள் சிறிது இடைவெளிவிட்டு “சரி நதி உன்ன கிண்டல் செய்யாம நா வேற யார கிண்டல் செய்ய முடியும் நீயே சொல்லு ப்ளீஸ் நந்து ஆதி என்ன செய்றான் பார்த்து சொல்லு”  என்று கேட்டாள்.

கண்ணை திறந்த நந்தினி மேலோட்டமாக எல்லா இடத்தையும் கண்ணை சுழற்றிப் பார்த்தாள்.ஆதியை காணவில்லை எனவும் எழுந்து சென்று தேடினாள்.

ரூமில் எங்கும் இல்லையெனவும் ஒருவேளை வெளியில் இருப்போனோ என தோன்றவும் வெளியில் செல்வதற்கு உரிய கதவைத் திறந்து பார்த்தாள்.திறக்க முடியவில்லை.

அதை சரண்யாவிடம் சொல்லவும் “சரி, இண்டர்காம் இருக்கும்ல அதுல ரிசப்ஷனுக்கு போன் செஞ்சு ஆதி கீழ வந்தானான்னு கேளு.ஒருவேள அங்க சொல்லிட்டு போயிருக்கலாம்” என்றாள் சரண்யா.

போனுக்கு அருகிலேயே எல்லா நம்பரும் உள்ள அட்டை ஒன்று இருந்தது.அதைப் பார்த்து ரிசப்ஷனை தொடர்பு கொள்ள போனை எடுத்தாள்.ஆனால் அது ரிப்பேராக இருந்தது.

“அதை சரண்யாவிடம் சொல்லிவிட்டு எப்பவுமே இருக்கிறவங்ககிட்ட யாருமே பேச மாட்டீங்க இல்லாதவங்களதா எல்லாரும் கேப்பீங்க.நேர்ல பாத்தாதான் எல்லோரும் இப்படி கேட்டு டார்ச்சர் செய்றீங்கன்னா இப்ப போன்லயும் இத ஆரம்பிச்சுடீங்க.உனக்கு உங்க அண்ணானோட பேசனும்ன்னா அவனையே கூப்ட வேண்டியதுதான எனக்கு ஏன் போன் செஞ்ச” என்று சற்று எரிச்சலுடன் கேட்டாள் நந்தினி.

கூல் நதி,அண்ணாக்கிட்ட பேசணும்ன்னா அவனையே கூப்டிருப்பேன்.அவனைப் பத்தி உன்கிட்ட பேசணும்னுதான் உன்ன கூப்ட்டேன்

அவரப்பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.அதனால அதப்பத்தி நா கேக்க விரும்பல.அதனால வேற பேசு

நீ இப்படிதா சொல்வேன்னு எனக்கும் தெரியும்.ஆனா இது உன்ன பத்தின விஷயம்.அதனால என்னால சொல்லாம இருக்க முடியாது.அதனால நா சொல்றத அமைதியா கேளு என்றவள் தொடர்ந்து அண்ணாவுக்கு உன்ன பிடிக்காது.அதனால உன்ன டிவோர்ஸ் செஞ்சுட்டு ரதிய மாரேஜ் செய்யனும்னு நினைக்கிறார்ன்னு உனக்கு தெரியும்ல என்றாள்.

ம்

அது மட்டும் இல்லை அவன் உன்ன திட்டுன்னான்னு நீ அவன ரொம்ப டார்ச்சர் செஞ்சிருக்க.அவன் பேப்பர் படிக்க வரும்போது நீ வேணும்னே பேப்பர எடுத்து வச்சுக்கிட்டு அவன் ஆபீஸ் போகுற வரைக்கும் கீழ வைக்காம அவன பேப்பர் படிக்க விடாம செஞ்சுருக்க.அவனுக்கு காபி குடுக்க சொல்லி உன்கிட்ட அம்மா காபி குடுத்து அனுப்பினா “அம்மா உங்களுக்கு காபி குடுத்தாங்க.ஆனா உங்களுக்குத்தான் என் கையில வாங்கி குடிக்க பிடிக்காதே”ன்னு சொல்லிட்டு அத  நீ குடிச்சுட்டு அவன குடிக்க விடாம செஞ்சிருக்க,அப்புறம் அவன் அவசரமா ஆபீசுக்கு போகும்போது அவனோட வண்டிய ரிப்பேராக்கிருக்க

போதும் சரண் நா என்னென்ன செஞ்சேன்னு எனக்கு தெரியாதா.அதெல்லாம் நியாபகப்படுத்தத் தான் நீ எனக்கு போன் செஞ்சியா என்றாள் நந்தினி

இல்லை நந்தினி.நீ செஞ்ச எல்லாத்தையும் சொன்னாதான் உனக்கு ஆதிக்கு உன்ன எந்த அளவுக்கு பிடிக்காதுன்னு தெரியும்.அப்போதான் நா சொல்ல வர்றது உனக்கு முழுசா புரியும்.அதுக்குதான் அத சொன்னேன்.

அப்படி என்னடி சொல்லப் போற

எனக்கும் கரெக்டா என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாது நந்தினி.ஆனா அண்ணா உன்ன ஏதோ செய்யப் போறான்னு மட்டும் தெரியும்.

ஏதோன்னா

மே பீ கொலை செய்ற அளவுக்கு போக மாட்டான்னு நினைக்கிறேன்.ஆனா. உன்ன திரும்ப நம்ம வீட்டுப் பக்கமே வரவிடாம இருக்கறதுக்காக ஏதாவது செய்யலாம்.அப்போதான அவனால ரதிய கல்யாணம் செய்ய முடியும்.

 ம்ம் அப்புறம் என்றாள் நந்தினி கிண்டலாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.