தொடர்கதை - என்னவளே - 02 - கோமதி சிதம்பரம்

தன் வம்சமெயே முடிந்து விட்டதாக எண்ணிய பருவத்திற்கு கீதாவின் வார்த்தைகள் ஆனந்த அதிர்ச்சி அளித்தது.
தன் வயதை கூட மறந்து கீதா விடம் ஓடிச்சென்று நீ கூறுவது உண்மையா? என்று கேட்டார்.
ஆமாம். என்பது போல கீதா மேலும் கீழும் தன் தலையை ஆட்டினாள்.
ஹே! நீ யார்? நீ சொல்வது உண்மை என்று நாங்கள் எப்படி நம்புவது? என்று அதட்டலுடன் சின்னம்மா எனப்படும் சிவகாமி அங்கு வந்தார்.
பார்த்த மாத்திரத்திலேயே, ராஜசேகர் வாழ்வின் வில்லி இவர் தான் என்பதை கீதா புரிந்து கொண்டாள். கழுத்து கை காது என்ன அனைத்திலும் செல்வத்தின் பிரிதிபலிப்பு நன்றாகவேயே தெரிந்தது.
பருவதமோ, பாசத்துடன் கீதாவின் கையில் இருக்கும் குழந்தையை பார்த்து கொண்டுருந்தார்.நெற்றியில் விபூதி மட்டும் இட்டு சோகத்தின் உருவமாய் நின்றார்.
ஹே! உன்னதானாய கேட்குறேன் காதிலே விழலா? அவரது குரலில் திரும்பிய கீதா. நான் எந்த குழந்தையின் தாய் ராஜசேகரின் மனைவி என்று அழுத்தமாக கூறினாள்
கீதாவின் பதில், பருவத்திற்கு மட்டுமே மகிழ்ச்சியை அளித்தது.
ரிஷிக்குகோ, தன்னை எவ்வாறு கீதாவால் மறக்க முடிந்தது என்று தெரியாமல் நின்றான்.
சிவகாமிக்குகோ, சொத்து தன் கை விட்டு போய் விடக்கூடாது என்பதில் தீர்மானமாய் நின்றாள்.
பருவதம்மாள், அந்த குழந்தையை வாரி அணைத்து கொண்டாள்.தனது மகன் ராஜசேகரயை முதன் முதலில் இந்த உலகத்திற்கு கொடுத்த போது அனுபவித்த பரவசத்தை மீண்டும் அனுபவித்தாள். தனது மகனின் இரத்தம் இந்த வீட்டின் வாரிசு என்று மனம் எங்கும் பூரிப்புடன் நின்றாள்.
கீதா தப்பி தவறி கூட ரிஷியை பார்க்கவில்லை. பார்க்கும் தைரியமும் அவளுக்கு இல்லை.
ஆனால், ரிஷியோ நேராக அவளது கண்களை பார்த்து. ராஜசேகர் 3 மாதத்திற்கு முன்பு சிட்னியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்து விட்டதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அப்படி இருக்க, ராஜசேகரின் குழந்தை என்று நீ கூறுவதை நாங்கள் எப்படி நம்புவது? நீ அவன் மனைவி என்பதற்கு என்ன ஆதாரம்? சொல் என்றான்.
கீதா, கடவுளையே இந்த கேள்விகளை வேறு யாரேனும் கேட்க கூடாதா என்று மனதிற்குள் வேண்டி கொண்டாள். உன்னுடன் மட்டும் தான் வாழ்வேன். என்று சத்தியம் செய்து விட்டு இப்போது எவனோனொருவன் மனைவி என்று அவன் முன்பேயே நிற்கிறேன் . கடவுளையே! என் நிலைமை வேறு எந்த ஒரு காதலிக்கும் ஏற்படக்கூடாது என நினைத்துக்கொண்டாள்.
வேற என்ன பொய் சொல்லலாம் என்று யோசிக்கிறியா ? என்று அதட்டலுடன் கேட்ட சிவகாமியின் குரல் கீதாவை நினைவிற்கு கொண்டு வந்தது.
கீதா, சிவகாமியை தீர்க்கமாக முறைத்துவிட்டு. தனது பையில் இருந்து ஒரு கவர்யை எடுத்து அவளிடம் நீட்டினாள். ஆனால், அதை ரிஷி வாங்கி கொண்டான்.
இப்பொழுது, கீதாவிற்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. கடவுளையே! என்னால் என் ரிஷியின் அருகாமையை கூட தாங்க முடியவில்லை. என்று நொந்துகொண்டாள்.
கவர் யை பிரித்த ரிஷியின் கண்கள் அதிர்ச்சியின் எல்லைகேயே சென்றுவிட்டது. என்ன வென்று கேட்ட சிவகாமிக்கு பதில் கூற கூட முடியாமல் தனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்த கீதாவை பார்த்துக்கொண்டு நின்றான்.
அவ்னது பார்வையை எதிர் கொள்ள முடியாமல், கீதாவேயே, சிவகாமியிடம் இந்த குழந்தை ராஜசேகர்க்கு பிறந்தது என நிரூபிக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் என்று கூறினாள்.
உடனேயே, சுதாரித்த சிவகாமி இதை நாங்கள் எப்படி உண்மை என நம்புவது என கேட்டார்.
அப்படியென்றால், நீங்களேயே உங்கள் டாக்டர்இடம் ஒரு புது ரிப்போர்ட் எடுத்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாள்.
சிறிதும், பயமின்றி அவள் கூறியதை கேட்டு சிவகாமி கோபத்தின் எல்லைகேயீ சென்றுவிட்டாள்.
முடிவாக, இது உன் குழந்தை. உனக்கும் ராஜசேகர்க்கும் பிறந்த குழந்தை அல்லவா? என்று கேட்ட ரிஷியின் குரலில் இருப்பது விரகத்திய? கோபமா? காதலா? எதுவென்று புரியாமல் கீதா அவனை பார்த்தாள்.
கண்களில் கண்ணீருடன் நிற்கும் ரிஷியை பார்க்க இயலாது தலை குனிந்து தனது கண் நீரையும் மறைத்து கொண்டாள்.
இதற்கு மேல், தான் இங்கு இருந்தால் ரிஷியின் முன்பேயே தான் அழுது விட கூடும் என்று முடிவு செய்தவள். நேராக, பருவத்தம்மாளிடம் சென்று, இந்த வீட்டு வரிசை ஓப்படைக்கவேயே நான் இங்கு வந்தேன். ஒப்படைத்துவிட்டேன். இனி குழந்தை உங்கள் பொறுப்பு. குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தனது பையை எடுத்தாள்.
குழந்தையை விட்டு விட்டு ஒரு தாய்யால் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியுடன் ரிஷி கீதாவை பார்த்தான்.
அதேயே நேரம், கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கீதா ரிஷியை பார்த்தாள். இருவரின் கண்களும் சந்தித்து கொண்டது. திரும்பி குழந்தையின் கையை தொட்டு முத்தம் ஒன்றை கொடுத்தாள். குழந்தை சிணுங்கியது.