Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Share your feedback and Suggestions</strong></h3>

Share your feedback and Suggestions

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 2 votes
Change font size:

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே!

டியே உன்னோட பார்லருக்கு கஸ்டமர் வரவில்லைங்கறதுக்காக நான் தான் உனக்கு கிடைச்சேனா?” கட்டாயமாக நாற்காலியில் அவனை உட்கார வைத்துவிட்டு கையில் கத்திரிக்கோல், கத்தி, சீப்பு இதையெல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்த வருணாவை பார்த்துக் கேட்டான் ஆதவன்.

“யோவ் அழுக்கா இப்போ நீ அமைதியா உட்காரப் போறீயா இல்லையா?”

“என்னது அழுக்கனா?”

“ஆமாம்.. பின்ன எப்பவும் அழுக்கு ட்ரஸ், பரட்டை தலை, காடு மாதிரி தாடியை வளர்த்து சுத்திக்கிட்டு இருந்தா அப்படி தான் சொல்வாங்க..”

“என் வேலை அப்படி டீ.. அதுதான் எனக்கு சோறு போடுது..”

“அதுக்காக எப்பவும் இப்படியே சுத்தனும்னு ஏதாச்சும் நேர்த்தி கடனா? ஒழுங்கா முடி வெட்டிக்கிட்டு தாடிய எடுத்துக்கிற..” என்று அவள் அருகில் வரவும் அவன் எழுந்திருக்க முயற்சி செய்தான். உடனே அவனை அமர வைத்து ஒரு காலை அவன் மடியில் வைத்தப்படியே அவன் முகம் நோக்கி குனிந்தவள், “அடம் பிடிக்காம ஒழுங்கா காட்டனும்..” என்றாள்.

முன்பெல்லாம் “இப்படியா முடியை செம்பட்டையா ஆக்கி வச்சிருப்பீங்க” என்று தினமும் அவள் தான் அவனுக்கு எண்ணெய் வைப்பாள். தலை சீவி விடுவாள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிட்டு குளிக்க சொல்வாள். வீட்டிலிருந்து போகும் போது நல்ல உடை அணிந்து செல்ல வேண்டும் என்று சொல்லி அவளே உடைகளை தேர்ந்தெடுத்து கொடுப்பாள். இப்போ எதுக்கு இதெல்லாம் என்று கேட்டால், “அந்த வேலை என்றால் இப்படி தான் போகனுமா? சுகுமார், முருகன் மட்டும் வீட்ல இருந்து நல்ல ட்ரஸ் போட்டுட்டு வர்றாங்கல்ல” என்று கேட்பாள்.

“அவங்க  சின்னப் பசங்க” என்று அவன் சொன்னால், “அப்போ நீங்க கிழவனா?” என்றுக் கேட்டு அவனை அமைதியாக்கி விடுவாள். அவனுக்காக அவள் செய்வதெல்லாம் அவனுக்கு சுகமாக இருந்தது.  ஆனால் தாடி மட்டும் அவளுக்கு பிடிக்காமல் அடிக்கடி எடுக்க சொல்வாள். ஆனால் அவன் தான் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தான். இப்போது அவளே தீவிரத்தோடு தாடியை எடுக்கும் வேலையில் இறங்குவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அவளின் அருகாமை அவனை இம்சிக்க, “ஏண்டி முத்தம் கொடுக்கும் போது தாடி குத்துதான்னு கேட்டதுக்கு, இல்ல சுகமா இருக்குன்னு தான சொன்ன? அப்புறம் எதுக்குடி எடுக்கனும்?” என்று அவளை அந்த நிலையிலேயே அணைத்ததில் அவன் மீது மொத்தமாய் வந்து விழுந்தாள். பின் விலக அவள் முயற்சி செய்யவில்லை. அந்த நிலையில் இருந்தப்படியே,

“ஆஹா ஐயா இதையே சாக்கா வச்சு அப்படியே ஓட்டிடலாம்னு பார்க்கிறீங்களா? நான் சொன்னா சொன்னது தான்” என்றாள்.

“தாடி எடுத்தா நான் அசிங்கமா இருப்பேன் டீ”

“அதுதான் எனக்கும் நல்லது.. அப்போ தான என்னோட புருஷனை யாரும் சைட் அடிக்க மாட்டாங்க” என்று கண்ணடித்தாள்.

“நீயாவது என்னை கண்ணெடுத்து பார்க்கனுமில்ல நல்லா யோசிச்சுக்கோ” என்று அவன் பரிதாபமாக கூற,

“சரி அப்படின்னா ஹேர் கட் பண்ணிட்டு தாடியை ட்ரிம் பண்ணுவோம்.” என்று சொல்லியும் அவன் முரண்டுபிடிக்க, அவன் காதில் ஏதோ ரகசியம் பேசினாள். அதில் கண்களை விரித்தவன்,

“உண்மையாவா?” என்று கேட்டான்.

“நிஜமா தான் காட்டுவீங்களா? மாட்டீங்களா?” என்றதும் அவன் சரி என்று ஒத்துக் கொண்டான். அடுத்து அவன் மீதிருந்து எழுந்தவள், அவனை சரியாக உட்கார வைத்து, அவள் வேலையை ஆரம்பித்தாள்.  அவனுக்கோ இன்னும் கூட மனம் ஆறவில்லை. தாடியை எடுப்பது வருத்தம் கொள்ள வைப்பதாக முகபாவனையில் காட்டினான்.

“போதும் ரொம்ப சீன் போடாதீங்க..” என்று அவள் முறைக்க, பின் முக பாவனையை மாற்றிக் கொண்டான்.

பின் அவள் வேலை முடிந்ததும் அவனை கண்ணாடி முன் கொண்டு போய் நிறுத்தினாள். அவனின் தோற்றத்தை பார்த்து அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“இது நானா நம்பவே முடியலையே வருணா..” என்றவன், “நீ சொன்ன விஷயத்துக்காக மட்டும் தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். கண்டிப்பா அது உண்டுல்ல..” என்று கேட்டதும்,

“பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம்” என்று பட்டும்படாமல் சொல்லி, சரி டைம் ஆச்சு வாங்க வேலைக்கு போகனும்ல்ல” என்று அவனை கிளப்பினாள்.

அந்த இரவுக்குப் பின் ஆதவன், வருணாவிற்கு இடையில் இந்த அன்னியோன்யம் வர கிட்டத்தட்ட இரண்டு மாதமாகியது. என்னவோ செய்யக் கூடாத குற்றத்தை செய்துவிட்டது போல் அவன் அவளிடமிருந்து விலகி விலகி போக அதில் கோபம் கொண்டவள், முதல் போல் தயக்கமில்லாமல் அவனிடமே கோபமாக சில கேள்விகளை கேட்டாள்.

“ஆமா என்னை உங்களுக்கு பிடிக்கலையா? அப்புறம் ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?”

“ஏன் வருணா இப்படியெல்லாம் பேசற? அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..”

“இல்ல இருக்கு.. பாட்டி விருப்பம்னு மட்டும் தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க? மத்தப்படி உங்களுக்கு என்ன பிடிக்கவேயில்ல.. என்னை என்னவோ தீண்ட தகாதவளா நினைக்கிறிங்க? இங்க வீட்ல என்கூட உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களா? இந்த கட்டிலில் உட்கார்ந்திருக்கீங்களா? என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? எங்க அண்ணன் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லி பாட்டி மனசை கஷ்டப்படுத்தவே தான், என்கிட்ட அந்த கோபத்தை காண்பிக்கிறீங்களா? 

வீட்ல இப்படியெல்லாம் நடந்துக்கிட்டு, வெளிய மட்டும் ரொம்ப என் மேல பாசமும் அக்கறையும் இருக்கற மாதிரி காட்டிக்கிறீங்க.. ப்யூட்டி பார்லர் வச்சு கொடுக்கறதும், டெய்லி ட்ரைவர் ட்யூட்டி பார்க்கிறதும் இதெல்லாம் நான் கேட்டேனா? உங்களுக்கு என்னை பிடிக்காத போது, இதெல்லாம் மட்டும் எனக்கெதுக்கு.. தேவையே இல்லை” என்று அதிரடியாக ஒரு போடு போட்டாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Chithra V

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெThenmozhi 2018-04-19 07:26
very cute epi Chithra :-)

Varuna Athavan lovely couple.

Rakesh ethavathu kuzhapam kondu vara porara or neighbors-nala prb vara pogutha?

Waiting to read ji :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெChithra V 2018-04-19 07:33
Yarala problem vara pogudhu nu next epi la parpom Thens :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெSaaru 2018-04-15 19:16
Hoom kan kadhu mooku vachi pesaporangala
Cute epiiii
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெChithra V 2018-04-19 07:31
Yes adhai avanga renduperum eppadi eduthupanga nu parpom :-)
Thanks saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெSameera 2018-04-14 22:29
Ivanukku yenna vanthuchi..over a pesaran
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெChithra V 2018-04-19 07:30
Sila time ippadipatta person a meet panna vendi irukku
Avanukku avlo important illa
Parpom aduthu enna nu
Thanks sameera :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெAdharvJo 2018-04-14 18:51
Na ka Mu vachi pesuvangalo :Q: facepalm avasaram vendam varum sat padithu therindhu kolgrin....unga elimaiyana interview paditha piragu idhu padika oru light feel chitra ma'am :clap: :clap: your carrying the series really cool and interesting :dance: I like varuna's answer but orutharoda residence and work status mattum oruvarai ippadi down ah parpadhu utter stupidity 3:) ivanukku ena vandhadhu :angry: the rest of the epi was cute chithra ma'am .....pavam adhavan oda andha kuttraumarchi partum ethum illama uffff panidinga :D thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெChithra V 2018-04-19 07:28
Haha kutra unarchi part a seekiram vedikka vittudalam adharv
Unga asai ai en niraivethama vidanum ;-)
Thanks for your sweet cmnt :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெrspreethi 2018-04-14 15:46
Nice update... Shine n rain scenes cute oh cute... Inimel dhan aatam aarambam ah... Am waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெChithra V 2018-04-19 07:25
Aattaam terottama nu parpom preethi
Thanks for your cmnt :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெTamilthendral 2018-04-14 13:47
Good epi (y)
Ennathan naama samthoshama irunthalum suthi irukka jananga vidrathillaiye 3:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெChithra V 2018-04-19 07:24
Amam sila time adhu pola situation sandhikka vendi irukku
Parpom adhavan varuma adhai eppadi handle panrngannu :-)
Thanks Tamil :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெmadhumathi9 2018-04-14 13:03
:Q: udane kathai katta aarambithu viduvaargale.super epi.waiting to read more. (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெChithra V 2018-04-19 07:23
Yes appadi than madhimathi
Thanks for your cmnt :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
14
EVUT

PVOVN

NiNi
15
MINN

ILU

MAMN
16
VD

EMPM

KIEN
17
VMKK

KK

KaKa
18
Sush

UVME

Enn
19
UNV

NKU

Tha
20
KI

VTKS

EK

Mor

AN

Eve
21
EVUT

-

NiNi
22
MMSV

ILU

MAMN
23
GM

EMPM

KIEN
24
ISAK

KK

KaKa
25
EU

Ame

EYPI
26
UNV

NKU

Tha
27
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top