(Reading time: 11 - 22 minutes)

முக்கியமாக, இந்த 6 மாதகாலத்தில் நான் ராஜசேகரின் மனைவி என்று யாரும் கூறக்கூடாது. நான் இந்த குழந்தையை பார்த்து கொள்ளும் பெண் அவ்வளவுதான். என் குழந்தையின் தாயக மட்டுமேயெ நான் இருக்க விரும்பிகிறேன். என் கணவர் ராஜசேகரின்  மூலமாக கிடைக்கும் ஏதும் எனக்கு இங்கு  தேவை இல்லை என்பதை உறுதியாக கூறிவிட்டாள்.

அவளது, பேச்சை கேட்ட ரிஷி  அவளை நம்பாமல் பார்த்தான். சிவகாமிக்கோ கீதாவின் பேச்சில் சிறிது சந்தோசம் ஏற்பட்டது. 6  மாதத்திற்கு குள் அவளை எப்படி விரட்ட வேண்டும் என்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

கீதாவின் பேச்சு, வருத்தத்தியாய் அளித்தாலும் பருவதம்மாள் கீதா இங்கு இருக்க சமதத்தியே இப்போதைக்கு போதும் என்று எண்ணினார்.

உன் இஷ்டம் போலவேயே நடக்கட்டும் கீதா. நீயும் என் பேரனும் என் கூட இருந்தால் அதுவேயெ எனக்கு  போதுமம்மா. என்று கூறினார்.

கீதா, இது உன் வீடு என்ற எண்ணம், உனக்கு சீக்கிரம் வந்துவிடும் என்று ஆண்டவனை நான் நம்புகிறேன். போனது எல்லாம் போகட்டும். இனி  நல்லதேயே நடக்கட்டும்.

கீதா, நான் உன் பெரிய அத்தை பருவதம்,   இவள் உன் சின்ன அத்தை  சிவகாமி. சேகர் வீட்டை விட்டு சென்ற 1 வருடத்தில் உன் மாமனார் காலமாகிவிட்டார்.

இதோ இவன் ரிஷி என் தம்பி மகன். இவன் மட்டும் இல்லையென்றால்.  நான் இந்த வீடு, சொத்து எல்லாம் என்னவாகியிருக்கும் என்று எனக்கேயே தெரியவிலைம்மா. என்று வாஞ்சையுடன் ரிஷியின் தலையை தடவிவிட்டார்.

போதும் அத்தை, அவள் போய் முதலில் பிரெஷகட்டும் அப்புறம் உங்கள் மருமகளிடம் பேசிக்கொள்ளலாம். நானேயே அவளுக்கு அவளது அறையை காட்டுகிறேன்.என்று கூறி முடிக்கும் முன் இடையீட்ட கீதா அம்மா நானேயே சென்றுவிடுகிறேன் குழந்தை இப்போழுது முழித்து விடுவான் அதற்குள் நான் பிரெஷ்யாகவேண்டும் என்று குழந்தையை வாங்கி கொண்டாள்.

ஒரு வேலையாளை அவளுடன் அனுப்பிவிட்டு, பருவதம்மாள் கடவுளுக்கு நன்றி சொல்ல பூஜையறை நோக்கி சென்றார் .

சிவகாமியோ. கீதாவை விரட்ட திட்டம் திட்ட ஆரம்பித்தாள்.

வேலையாள், காட்டிய அறைக்குள் வந்ததும் தான் கீதாவிற்கு உயிரையே வந்தது. குழந்தையை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, அந்த கட்டிலில் உட்காரந்தாள்.

கொஞ்ச நேரம் , ரிஷி முன்பு நிற்கவேயே தன்னால் முடியவில்லை. நான் எப்படி அவனோடு 6 மாதம் இங்கு இருப்பது? யாருடன் ஒரு நொடி கூட பிரியாமல் வாழ வேண்டும் என்று நினைத்தாளோ!  அவன் முன்பு நிற்கவேயே இப்போழுது பயப்படுகிறாள்.

அவன் முன்பு தன் மனம் அவன் வசம் செல்வதை கீதா  உணர்ந்தாள். அதனாலேயே அவன் கேள்வி கேட்டால் கூட அவள் பர்வதம்மாளிடம் பதில் கூறினாள். முக்கியமாக, அவன் கண்களை அவளால் பார்க்க முடியவில்லை.

குழந்தைக்காக, இங்கு இருந்து தான் ஆகவேண்டும். இங்கு இருக்கும் வரை ரிஷி  கண்ணில் படவேயேகூடாது. என்று முடிவுடன் எழுந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

ரிஷி அவளை பார்த்தவாறு, அந்த அறையின் வாசலில் சாய்ந்தவாறு நின்றுகொண்டு இருந்தான்.இவள் பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததும் அவள் அருகில் வந்தான்.

கீதாவிற்கு இப்போது என்ன செய்ய்வது என்றியே தெரியவில்லை. எடுத்த முடிவு எல்லாம் அவனை கண்டவுடன் மறைந்து விடுகிறது.மிகவும் நெருங்கி வந்த ரிஷியை கண்டு கீதா தன் கால்களை பின்வைத்தாள்.

இதற்கு மேல், பின்னால் செல்ல முடியாது என்பதை உணர்ந்தவள் தன் முன் மிக நெருக்கத்தில் இருக்கும் ரிஷியை தள்ளிவிடும் பொருட்டு அவளது கைகளை அவன் நெஞ்சின் மீது வைத்தாள்.

கீதா சற்றும் எதிர்பார்க்காத வகையில் ரிஷி அவளது கைகைளை தனது கைக்குள் அடக்கி தனது நெஞ்சின் மீது வைத்து கொண்டான். ரிஷியின் இதய துடிப்பு மிக தெளிவாக கீதாவிற்கு கேட்டது.

ரிஷியின் மூச்சுக்காற்று அவளது மேனியை தீண்டியது. ரிஷி கண்கள் மூடி 3  வருடம் கழித்து அவளது வாசனையை நுகர்ந்தான்.கீதா பேச்சு இழந்து நின்றாள்.

கீதாவின் மூளை அவளை விலகி செல்ல சொன்னாலும் அவனது அருகாமையை அவளது மனம் நாடியது.

தொடரும்

Episode # 01

Episode # 03

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.