(Reading time: 11 - 22 minutes)

அவள் வெளியில் நடக்க நினைக்கையில், கால்களில் எதோ தட்டுப்பட குனித்தவள் அதிர்ந்து நின்றுவிட்டாள். கீதாவின் கால்களை பிடித்துக்கொண்டு பருவதம்மாள் இருந்தார். கீதாவிற்கு மட்டும் இன்றி மற்ற இருவர்க்கும் கூட பருவத்தம்மாளின் செய்கை அதிர்ச்சியை அளித்தது.

கீதா கால்களை வெடுக்கென்று பின் இழுத்து கொண்டாள். ரிஷி குனிந்து பருவத்தம்மாளின் கரம் பிடித்து தூக்கினான். எழுந்து நின்ற பருவதம்மாள், நீ இந்த வீட்டு மருமகள்.  எங்கும் செல்லக்கூடாது. ராஜசேகர் இடத்தில் இருந்து இனி  நீதான் அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் மகனை பிரிந்து நான்பட்ட துன்பம் எல்லாம் போதும். இனி, என் பேரன்யோடு   இருக்கும் நாட்களை சந்தோசமாக கழிக்க விரும்பிகிறேன். தயவுசெய்யுது இங்கேயே இருந்துவிடுமா  என்று கீதாவிடம் கெஞ்சினார்.

அது எப்படி முடியும்? இவள் சொல்வது உண்மை என்று யாருக்கு தெரியும்? அக்கா அவசரபட்டு எந்த ஒரு முடிவும் எடுக்காதீர்கள். இது ராஜசேகர் குழந்தையாக இருக்காது. இவள் நிச்சயம் பொய் கூறுகிறாள். என்று கூறிய  சிவகாமியை போதும் நிறுத்து என்பது போல பருவதம்மாள் பார்த்தார்.

என் பேரன் யார் என்று எனக்கு யாரும் கூற தேவையில்லை. இந்த குழந்தை அப்படியே ராஜசேகரின் தந்தையை கொண்டு பிறந்து உள்ளது. இந்த குழந்தையை பார்த்தால் உனக்கு அது தெரியவில்லையா? ராஜசேகர்யை பெற்ற எனக்கு தெரியாதா? முடிவாக கூறுகிறேன், இது ராஜசேகரின் வாரிசுதான். என் வேதனையை போக்க கடவுள் கொடுத்த வரம். என்று குழந்தையை கொஞ்சினார்.

இதோபார்,  உன் பெயர் என்ன? பிரியா தானேயே!!! என்று பருவத்தம்மாளின் கேட்டதும் ரிஷி கீதாவை பார்த்தான். தனது பெயரை பிரியா என்று கூறியதும் கீதா அதிரந்தேயே விட்டாள். ரிஷியும் தன்னை சந்தேகத்துடன் பார்ப்பதை புரிந்து கொண்டாள்.

என் முழுப்பெயர் கீதாபிரியா என்று பருவத்தம்மாளிடம் கூறிவிட்டு ரிஷியை ஓரக்கண்ணால் பார்த்தாள். ரிஷி குழம்பி போய் கீதாவை பார்த்தான். அவர்கள் நேசித்த காலத்தில் ஒரு முறை கூட கீதா தனக்கு பிரியா என்று ஒரு பெயர் இருப்பது போல கூறியது இல்லை. ஒருவேளை எனக்கு தான் தெரியவில்லையா? என்பது புரியாமல் நின்றான்.

கடைசியாக, சேகர் பேசிய போது உன்னை பிரியா என்று கூறியது ஞாபகம் உள்ளது. அதான் இப்படி கேட்டுவிட்டேன்.அன்றேயே சேகர்யை  வீட்டை விட்டு செல்லவிடாமல் செய்து இருந்தால் இப்போழுது என் மகனை நான் இழந்து இருக்க மாட்டேன்.என்று கூறி அழுத பருவத்தம்மாளின் பாசம் கீதாவிற்கு புரிந்தது.

இனி, நீ எங்கும் செல்ல வேண்டாம். சேகரின் மனைவியை இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும். உனக்கு ஒரு குறையும் இல்லாமால் நான் பார்த்து கொள்கிறேன். என்னை நம்பி இங்கு இருப்பையா? என்று கேட்ட பருவத்தாமலிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் நின்றாள்.

சேகரின் மனைவி என்ற வார்த்தையை கீதாவால் தாங்கிக்கொள்ளவேயே முடியவில்லை. இதில் ரிஷி வேற இந்த வார்த்தையை கேட்டு கொண்டு இருக்கிறான். கீதாவிற்கு தரை இரண்டாக பிளந்து பூமிக்குள்  சென்று விட கூடாதா என்று நினைத்தாள்

பெரிய அத்தை நீங்கள் என் அவளிடம் கெஞ்சுகிறீர்கள்? சேகருடன் மூன்றுவருடம் வாழந்து குழந்தையீ பெற்றுவிட்டாள்? இந்த வீட்டு மருமகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும் என்று கீதாவிற்கு மன்னிக்கவும் கீதப்ரியாவிற்க்கு தெரியாதா என்ன? என்று அவளது பெயர்க்கு அழுத்தம் கொடுத்து கூறினான்.

ரிஷியின் பேச்சை எதிர்த்து பேசினால் என்ன நடக்கும்  என்று அவளுக்கு நன்றாகவேயே தெரியும். ஆனால், சிங்கத்தின் குகைக்குள் எப்படி அவளால் இருக்க முடியும். என்றுதான் அவளுக்கு தெரியவில்லை?

சிவகாமிக்கு அவள் இங்கு தங்குவதில் சிறிதும் உடன்பாடில்லை. ஆனால், அவளின் பேச்சு இப்போழுது எடுபடாது என்பதை புரிந்து கீதாவின் பதிலை எதிர்பாத்து இருந்தாள்.

ஏன் இவ்ளோ யோசிக்குற  கீதப்ரியா? உன்னால  குழந்தையை விட்டு இருக்க முடியுமா? பத்து மதம்  சுமந்து பெற்ற குழந்தையை அவ்ளோ ஈஸியாக விட்டு செல்ல முடியுமா என்ன ? என்று ரிஷி அழுத்தமாக கீதாவை கேட்டான்.

இப்போழுது குழந்தையை விட்டு சென்றாள் தன் மீது சந்தேகம் வரும் என்பதை புரிந்து கொண்டவள். எனது கண்டிஷன்க்கு ஒத்துக்கொண்டாள் இங்கு இருக்க சம்மதம் என்று பர்வதம்மாளிடம் கூறினாள்.

அது என்ன கண்டிஷன் அதையும் கூறிவிடு என்பது போல பருவதம்மாள் கீதாவையை பார்த்தார்.

கீதா தொண்டையை செருமிக்கொண்டு. நான் ஒரு 6  மாதகாலம் இங்கு இருக்கிறேன் என் குழந்தைக்காக. இந்த 6 மாதகாலத்தில் நீங்கள் எல்லாரும் என்னையும் என் குழந்தையும்  எப்படி பார்த்து கொள்கிறீர்கள் என்பதை நான் உணரவேண்டும் . நானும் சொத்துக்காக இந்த வீட்டிற்கு வரவில்லை என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை சிவகாமியை பார்த்து கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.