(Reading time: 12 - 24 minutes)

“அவங்க தானே இரண்டு நாளில் இங்க வர்றாங்க”

“ஏன் என்னிடம் அவங்க சொல்லவில்லை?” என்று ஏக்கமாக உத்ரா கேட்ட பொழுது...

“நீ தான் உன்னோட போனை அணைத்து வைத்து இருந்தாயே”

அப்பொழுது தான் உத்ராவிற்கு நினைவு வந்தது.  காலையில் அலுவலகத்தில் இருந்து, அடிக்கடி போன் செய்து மாத்திரை சாப்பிட்டயா, மருந்து சாப்பிட்டயா என்று அபி தொல்லை செய்கிறான் என்று அவன் குரலை கேட்க பிடிக்காமல் போனை அணைத்து வைத்து இருந்தாள், அவன் மேல் இருந்த கோபத்தால். அது வேறு கீழே கிச்சனில் இருந்தது.

“என்னுடைய போனிலிருந்து பேசு” என்று அவனது போனை கொடுத்த பொழுது, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் உத்ரா.

அம்மாவுடன் வாட்சப்பில் பேசிக் கொண்டிருந்த பொழுது, அதை தாண்டி லோக்கல் கால் என்பதால், மணி அடித்தது அவனது போனில்.  அவனிடம் கொடுக்கும் பொழுது, அதில் தெரிந்தது காப்ரிலா என்ற பெயர்.

போனை அவனிடம் கொடுத்தபடி யோசித்தாள் உத்ரா. இதற்கு மேலும் காப்ரிலா பற்றி அவனிடம் பேசாமல் இருப்பது தவறு என்று. அபி போனை வாங்கிக் கொண்டு, பேச கீழே சென்று விட்டான். அவர்கள் பேசுவது அவளுக்கு கேட்க கூடாதாமாம்.

கடந்த மூன்று மாதத்தில் அவன் இப்படி எல்லாம்,  யாரோடும் போனில் பேசி பார்த்ததில்லை.  அன்று கோவிலில் பார்த்த நாளில் இருந்து தான், இது தொடங்கியது. உத்ராவிற்கு இந்த மூன்று மாதத்தில் அவனுடன் நல்ல தோழியாக மட்டும் இல்லாமல் நல்ல மனைவியாகவும் நடந்து கொண்டு இருந்திருக்க வேண்டுமோ, அல்லது முன்பே அவனை விரும்பியதை அவனிடம் கூறி இருக்க வேண்டுமோ, என்று பலவாறாக யோசனை ஓடிக் கொண்டு இருந்தது. எல்லாம் சேர்ந்து அவன் மேல் கோபமே மேலோங்கி நின்றது.

இருப்பது நிமிடம் கழித்தே மேலே அறைக்கு வந்தான் அபி.  படுக்கையில் அவள் அருகே படுத்தும் உத்ரா எழுந்து அமர்ந்து கொண்டாள். என்ன என்று புருவம் உயர்த்தி அவளை கேட்டதும் வந்ததே கோபம் உத்ராவிற்கு. ஒன்றுமே நடக்காதது போல் எப்படித் தான் இப்படி முகத்தை வைத்துக் கொள்கிறானோ.

“யார் இந்த காப்ரிலா?” என்று சற்று கோபமாகவே கேட்டாள் உத்ரா.

“உஷ்.......  இப்போ ஏன் இப்படி கத்துகிறாய். அதை கொஞ்சம் மெதுவாகக் கூட கேட்கலாம் உத்ரா” என்று சற்று அமைதியாகவே கூறினான் அபி.

“எவ்வளவு அழகா பேச்சை மாத்தரிங்க. நான் உங்களை கேள்வி கேட்டா, என் மேலேயே குறை சொல்வீங்களா?” என்று அதற்கும் கோபப்பட்டாள் உத்ரா.

“நான் இப்போ சண்டை போடும் மூடில் இல்லை உத்ரா.” என்று கூறியபடி விளக்கை அணைத்த விட்டு உறங்க துவங்கினான் அபிமன்யு.

“கண்டவ கிட்ட எல்லாம் அரை மணி நேரம் பேசுவிங்க, என்னோட கேள்விக்கு பதில் சொல்ல  மட்டும் உங்களுக்கு மூட் இல்லை அப்படித் தானே.” என்று இருட்டில் அமர்ந்தபடி கேட்டாள்.

இந்த பெண்களே இப்படித் தானா, இப்பொழுது தான் அந்த காப்ரிலாவை பேசி சமாதானப் படுத்தி வந்தால், இப்பொழுது உத்ரா வேறு ஆரம்பிக்கின்றாளே என்று கோபம் தான் வந்தது அபிக்கு. அந்த காப்ரிலா யாரோ, ஆனால் உத்ரா என் மனைவி, என்னை இவ்வளவு கூட புரிந்து கொள்ளவில்லை என்றால், இவ்வளவு வருடமாக என்னை விரும்பினேன் என்று சொன்னது எல்லாம் வாய் வார்த்தை தானா? என்று இருந்தது அபிமன்யுவிற்கு.

எழுந்து விளக்கை போட்ட அபி , வந்த கோபத்தில் உத்ராவிடம் “ஐ ஹேட் யூ உத்ரா “ என்றான்.

வெளிச்சத்தில் அவனைப் பார்த்த உத்ரா, “மனைவியிடம்  ஐ லவ் யூ ன்னு சொல்லாதவங்களுக்கு எல்லாம்,  ஐ ஹேட் யூ என்று சொல்ல எந்த உரிமையும் இல்லை.” என்று அவனுக்கு பதில் கூறினாள்.

அடுத்த நிமிடம் அபிமன்யு எழுந்து அவர்கள் எப்பொழுதும் படுக்கும்  அறைக்கு  சென்று கதவை மூடிக் கொண்டான்.  “இந்த காப்பிலா யார் என்று ஒழுங்காக சொல்லித் தொலைத்தான் தான் என்னவாம் இந்த அபிக்கு” என்று மனதிற்குள் அவனுடன் சண்டையிட்டபடி, தனியாக படுத்திருப்பதால் சரியாக உறக்கம் வராமல் பாதி தூக்கத்தில் படுக்கையில் உருண்டு கொண்டு இருந்தாள் உத்ரா.

சிறிது நேரத்தில், கனவில் அம்மா வந்து பக்கத்தில் படுத்து, தலை கோதி தூங்கு உத்ரா என்று சொல்லியதும் தான் முழு உறக்கத்திற்கு சென்றாள்.  காலையில் கண் விழித்த பொழுது, அவள் தலையில் கை வைத்த படி உறங்கிக் கொண்டு இருந்தான் அபிமன்யு.

இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை, என்று நினைத்த படி எழுந்தாள் உத்ரா. காலையில் பேசிக் கொள்ள நேரம் இல்லாததால்,  டிபன் சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினான் அபி.

அலுவலகத்தில் இருந்து சற்று தாமதமாக வந்த அபி, உடை மாற்றி வந்து, “நாளைக்கு அத்தையும், மாமாவும் வருவதால் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கி வரலாம் கிளம்பி உத்ரா”  என்றான்.

சூப்பர் மார்கெட் செல்லும் வழியில் காரில் அமர்ந்து அவன் முகத்தையே பார்த்தபடி வந்தாள் உத்ரா.

“எதுக்கு இப்போ இப்படி என்னை குறு குறு என்று பார்க்கிறாய் உத்ரா” என்றான் அபி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.