(Reading time: 12 - 24 minutes)

“உங்க மூட் எப்படி இருக்கு என்று பார்கிறேன். என்னோட பேசற மூடில் இருகிங்களா? இப்போ நான் ஏதாவது கேட்கலாமா?

“ஐம் ஆல்வேஸ் யுவர்ஸ் டா. நீ எப்போ வேணா கேட்கலாம். ஆனா நான் மூட் அவுட்டில் இருக்கும் போது மட்டும் வேண்டாமே ப்ளீஸ்.”

“இப்போ ஓகே தானே, அந்த காப்ரிலா யாரு உங்களுக்கு?”  என்று நேராக விஷயத்திற்கு வந்தாள் உத்ரா. அது தெரியாதவரை நிம்மதியாக இருக்க முடியாது என்று.

“என் அலுவலகத்தில் வேலை பார்த்தவள்.”

“பார்த்தவள் என்றால், இப்பொழுது இல்லையா?”  என்று கேட்ட பொழுதே சிறிது நிம்மதி தோன்றியது உத்ரா மனதில்.

“ஆம், ஆறு மாதத்திற்கு  முன் என்னோடைய ஆபிசில் தான் இருந்தாள். அவளும், உன்னைப் போலத்தான், என்னை ஒரு தலையாய் விரும்பினாள்.”

“அப்போ, நானும் அவளும் ஒன்றா உங்களுக்கு?”  உத்ராவின் குரலில் கோபம் தெரிந்தது.

“ அவ உன்னை மாதிரி இல்லை டா. முதலில் என்னிடம் நட்பாகத் தான் பழகினாள். பின்பு  ஒரு வாலண்டைன்ஸ் டே அன்று என்னிடம் ஒரு ரோஜா கொடுத்து ப்ரபோஸ் செய்தாள்.”

“நீங்க அதை வாங்கிட்டிங்களா?”

“எனக்கு அப்படி எந்த எண்ணமும் அவள் மேல் இல்லை என்பதால், அதை நாசுக்காகத் தான் நிராகரித்தேன். அப்பொழுது அதை சாதாரணமாகத் தான் எடுத்துக் கொண்டாள். ஆனால் அவளது வேலை போன பின் தான் என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள்.” என்றான் அபி.

“என்ன வேலையில் இருந்தாள் அவள்? என்ற உத்ராவின் கேள்விக்கு...

“நான் இப்போ இருக்கும் சி.ஒ.ஒ. (சீஃப் ஆப்ரடிங் ஆபீசர்) போஸ்டிங்ல் இருந்தாள்.” என்றான் அபி.

“ஏன் வேலையே விட்டு போனாள்?”

“அவளா எங்க போனா? எங்க ஸி.இ.ஒ தான் அவளை வேலையை விட்டு எடுத்து விட்டார்.” என்று அலுத்துக் கொண்டான் அபிமன்யு.

உத்ரா அடுத்த கேள்வி கேட்குமுன் கடை வந்து விடவே இருவரும் இறங்கி, என்னன்ன வாங்க வேண்டும் என்பதில் கவனம் திரும்ப, மேலும்  அவளைப் பற்றி கவலைப் பட பெரிதாக ஏதும் இல்லை என்று, அந்நேரத்திற்கு, காப்ரிலாவைப் பற்றி மறந்து போனாள் உத்ரா.

அப்பா, அம்மாவிற்கு என்ன எல்லாம் பிடிக்கும் என்று யோசித்து, அதற்கு வேண்டிய சாமான்களை வாங்குவதில் ஆர்வமானாள், உத்ரா. அவள் காய்கறி, மளிகை சாமான் என்று வாங்கிக் கொண்டு இருந்த பொழுது, அபி, எதோ சாமான்கள் வாங்குவது தெரிந்தது.

உத்ரா, காய்கறிகளை எடை போட்டு எடுத்து வருவதற்குள், அபி வாங்கிய சாமான்களை, காரில் வைத்தே வந்திருந்தான். பின்பு இவைகளுக்கும், பில் போட்டு வாங்கி கொண்டு வீட்டை அடைந்தனர்.  உத்ரா வாங்கி வந்த சாமான்களை அடுக்கி வைக்கும் முன் அபி உடை மாற்றி வந்தான்.

இரவு உணவை முன்பே சமைத்து வைத்து இருந்ததால், “நான் சூடு செய்து வைக்கிறேன், நீ போய் உடை மாற்றி வா உத்ரா” என்று அவளை அனுப்பி வைத்தான்.

உத்ராவும் மெதுவாக குளித்து, உடை மாற்றி கிழே வந்து பார்த்த பொழுது, சப்பாட்டு அறையில் அபி இல்லை. அவன் எங்கே என்று தேடிய பொழுது, அவர்கள் வீட்டு பின் பக்கம் இருந்த பால்கனியில், சிறிய டேபிள் போட்டு, அதில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து சில பூக்களை தூவி, அதில் சாப்பாட்டை பரிமாறி இருந்தான்.  அங்கிருந்து பார்த்த பொழுது பக்கத்தில் இருந்த ஓடையில் நீர் சலசலவென ஓடுவதைப்  பார்க்க ரம்யமாக இருந்தது.

அங்கிருந்த ஸ்ப்ரைட்,  ஐஸில்  இருந்ததோ இல்லையோ,  உத்ராவின் தலையில்  ஐஸ் வைத்தது போல் இருந்தது. கண்களின் ஓரம் கூட ஆனந்த கண்ணீரால் இனித்தது.

“வாவ், சூப்பரா இருக்கு அபிமா, ரொம்ப தாங்க்ஸ்.” என்று உணர்ச்சி பொங்க கூறினாள் உத்ரா.

“வெறும் தாங்க்ஸ் தானா?, இந்த ரொமாண்டிக் இடத்தை பார்த்தால், ஐ லவ் யூ என்று சொல்ல தோன்றவில்லையா? என கேட்ட அபியிடம்...

“நீங்க முதலில் சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம், நான் சொல்லுவதைப் பற்றி” என்றாள் உத்ரா பதிலுக்கு.

“எங்க ஸ்டைலே வேறம்மா,  வா வந்து உட்கார் முதலில்” என்றான்.

உத்ரா வந்து அமர்ந்ததும், கையில் இருந்த சிறிய டப்பாவை திறந்து, அதன் உள்ளே இருந்த, வைர மோதிரத்தை எடுத்து, அவள் கையை பிடித்து, விரலில் அந்த மோதிரத்தை அணிவித்து, “ ஐ லவ் யூ டா, மீதி இருக்கும் நமது வாழ்நாள் முழுவதும்.” என்றான்.

அதைக் கேட்டு, உணர்ச்சி வசப்பட்டு, தனது சேரில் இருந்து டக்கென்று எழுந்த உத்ரா, அபி என்ன என்று கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்த பொழுதே, அவனது மடியில் அமர்ந்து அவனை அனைத்துக் கொண்டாள். இதனை வருடங்களாக காத்திருந்த  சொர்க்கம், கையில் கிடைத்தது போல் இருந்தது. “மீ டூ அபிமா” என்றதும், அபியின் அணைப்பும்  அவளை இறுக்கியது.

நீண்ட நெடிய, அணைப்பிற்கு பின் உத்ரா எழுந்து, அவளது சேரில் அமர்ந்தாள். “எப்போ வாங்கினீங்க அபிமா, இந்த மோதிரத்தை?” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.