(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா

Iru thuruvangal

ன்றும் இல்லாமல், 2 மணி அதிகாலை வேளையிலும், இருவரின் கண்களில் தூக்கம் வர மறுத்துக்கொண்டிருந்தது. இரவு நடந்த கூடலில் இருவரின் மனமும் நிறைந்திருந்தது. இருப்பினும் ஏதோ ஒன்றுத் தடுத்துக் கொண்டிருந்தது பழைய நிலையைக் கொண்டுவர முயன்றும் மிகவும் பரிதாபமாக தோற்றனர்.

அது “ஏன்?” என இருவரும் யோசித்துக் கொண்டிருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு படுத்திருந்தாலும், தங்களுடைய குழப்பத்தில் இருந்து வெளிய வர முயற்சிக்கவில்லை. மற்றவரை ஏன்? என்றும் கேட்கவும் இல்லை.

அந்த படித்த முட்டாள்களுக்கு தெரிந்தும் இருவரும் அதை கண்டுக் கொள்ள விரும்பவில்லை, மூன்று வருடங்களாக மனதால் ஏற்பட்ட பிரச்சனைகளில் உழன்றுக் கொண்டு இருந்தவர்கள், அதைப் பேசி தீர்க்காமல் அதைத் தவிர்க்கவே விரும்புகின்றனர் இருவரும்.

 அதைப் பேச போய் திரும்பவும் தங்களுக்கான இடைவளியை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால் முடிக்காமல் இன்னும் பெரிதாக வளர்ந்துவிடுமோ என்று பயமும் இருந்தது. எவ்வாறு இதனைச் சரி செய்வது? என்ற யோசனையிலேயே உறங்கத் தொடங்கி இருந்தனர்.

ஹரிஷின் பெரியப்பா வீட்டிற்கு போயிருந்த ராம்ப்ரகாஷும் சுமதியும் காலை 6 மணிக்கே தங்களுடைய வீட்டிற்கு வந்துவிட்டனர். மறுவீடு இல்லாத காரணத்தால் தங்கள் வீட்டிற்கு வரும் சம்பந்தி குடும்பத்தை சிறப்பாக கவனிக்கவே விரைவில் வந்தனர்.

இளம் தம்பதியினருக்கு தொந்தரவு கொடுக்க விரும்பாத அவர்கள் தங்களிடம் இருந்த மற்றொரு சாவியைப் பயன்படுத்தி விருந்துக்கு தயார் செய்ய ஆரம்பித்தனர்.

அறையில் விழுந்த வெளிச்சத்தில் விழித்த அனந்திதா, நேரத்தைப் பார்க்க 6.3௦ என்றுக் காட்டவும் எழுந்துக் கொள்ள முயற்சித்தால், முடிந்தால் தானே!! அவன் இவள் அசைந்ததும் எழுந்தவன் அவளிடம் வம்பு வளர்க்க எண்ணி, அவளைவிடாமல் அணைத்திருந்தான்.

அதை உணர்ந்த அவள் “ப்ளீஸ் ரிஷு !! விடுடா !! வீட்ல யாரும் இல்ல, அவங்க வரதுக்கு முன்னாடியே ரெடி ஆகணும்.” என்றவளை பார்த்தவன்.

“போலாம் !! அதுக்கு முன்னாடி எனக்கு தர வேண்டிய மார்னிங் கொட்டவ குடுக்காம போற !! ஏன் நந்து தர தோணலையா?”

“அப்படி எதுவும் இல்லை, டைம் ஆயிடுச்சுன்னு அவசரத்துல எழுந்துட்டேன் அவளோதான் வேற எதுவும் இல்லை.” என்றுக் கூறியவள் அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு விடுவித்தவள் “போதுமா!!” என்றாள்.

“எனக்கு எப்பவும் போதாது உன்னோட விஷயத்துல, போன போகுதுன்னு விடறேன். இனிமேல் நான் கேட்காமலே கொடுத்துடு” சிரித்துக் கொண்டே சொன்னவன் திடிரென்று யோசனைக்கு உள்ளானான்.

“என்ன யோசிக்கற ஹரிஷ், இஸ் எவரிதிங் ஒகே?”

“அதி !! நான் இப்படி சொல்றன்னு கோவிச்சுக்காதடி, என்று கூறியவன் அவளை மடியில் அமர்த்திக்கொண்டு ரெண்டு தாலி போட வேணாம்டி, பார்க்கறவங்க தப்ப நினைப்பாங்க. maybe பிரதீப் கட்டனதா கூட நினைக்க சான்ஸ் இருக்கு. அதுவும் இல்லாம வேற யாராவது வெளி ஆளுங்க பார்த்த பிரச்சனையாயிடும் ப்ளீஸ் டி” என்றான்.

அவனைப் பார்த்தவள், “எனக்கு புரியுது ரிஷு !! என்ன பண்ண அந்த தாலி யோட நிறைய மெம்மரீஸ் இருக்குடா, அதோட எமொஷ்னாலா கனக்ட் ஆயிட்டேன் பா. இந்த மூணு வருஷத்துல ஒரு தடவ கூடக் கழட்டனும்ன்னு நினைக்கல. நேத்துக் கூட யாராவதுப் பார்த்திடுவாங்களான்னு பயந்துட்டே இருந்தேன். என்ன decide பண்ணனும் தெரியலடா” என்றவளை மூச்சுமுட்ட முத்தம் கொடுக்க வேண்டும் என்றே தோன்றிற்று அவனுக்கு.

அவன், “எனக்கு எல்லாம் புரியுதுடா !! ஒரு ஐடியா பண்ணலாம் நீ அந்த தாலிய கழட்டிடு. 3 நாளைக்கு அப்பறம் தாலி பிரிச்சு கோப்பாங்க. அப்போ நான் இந்த தாலி செயின கொடுத்துடறேன். அதுல நேத்துக் கட்டண தாலிய கோத்துக்கோ. இப்பவே கழட்டிடு, நேத்து இந்த செயின யாரும் பார்திருக்க சான்ஸ் இல்ல. அதனால அன்னைக்கு கொடுத்த யாரும் எதுவும் கேட்கற மாதிரி இருக்காது. ஹ்ம்ம் ஒகே வா” என்றான்.

அவளும் “சரி” என்று தலையாட்டினாள்.

“அப்புறம் இன்னொரு விஷயம் டா, நம்ம பாஸ்ட் பத்தின எந்த விஷயமும் எந்தக் காரணத்தகொண்டும் யாரும் தெரிஞ்சுக்க கூடாது. அது எல்லார்க்கும் ரொம்ப shocking இருக்கும். அது தெரிஞ்சதுக்கு அப்புறம் எல்லாரும் ரொம்ப வருத்தபடுவாங்க.”

மேலும், “ நமக்குள்ள இன்னும் எதுவும் சரியாகல, நம்ம ப்ராப்ளம்ஸ் இன்னும் முடிக்காமல் இருக்கு, அதனால எப்போ வேணுமனாலும் நமக்குள்ள பிரச்சனை ஆகலாம். அது எல்லார்க்கும் முன்னாடி வேணாம் எதுவாக இருந்தாலும் இந்த ரூம்குள்ளயே இருக்கனும். ப்ளீஸ் ஐ திங்க் யு அண்டர்ஸ்டுட் மீ ” என்றவன் அவளைப் பார்த்தான்.

அவளும், “நானும் இதைத்தான் சொல்லணுமன்னு இருந்தேன் நீயே சொல்லிட்ட. பரவல்ல ஆனா நாம பேசவேண்டியது இன்னும் இருக்கு. நீ புரிஞ்சிப்பன்னு நினைக்கறேன்.” என்றாள்.

அவனும் “ஆமாம், நாம பேசனும், வீட்ல வேணாம். உனக்கு தெரியும்தான நாம லண்டன்ல இருந்தப்ப, ஒரு கெஸ்ட் ஹவுஸ் வாங்கினேன். உங்க வீட்ல இருந்து மார்னிங் வருவாங்க அவங்க எல்லார்கிட்டயும் பேசிட்டு, அங்க ஆப்டர்நூன் போலாம். அங்க பேசிக்கலாம்” என்றான். அவளும் தலையாட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.