(Reading time: 10 - 19 minutes)

அவள் எழுந்து குளியலறைக்கு போனவள் அவன் கூறியதைக் கேட்டு நின்றாள். “நாம பேசனும்னு நினைக்கறதால ப்ராப்லம் வரும் நினைக்காத, கடைசிவரைக்கும் ரெண்டு பேரும் ஒருத்தரஒருத்தர் புரிஞ்சுக்காம இருக்கறதுக்கு பதில் பேசிடறது பெட்டர். இனிமேல் நான் உன்னை எந்தக் காரணத்தக் கொண்டும் பிரியமாட்டேன் இட்ஸ் அ ப்ராமீஸ்” என்றான்.

அவன் கூறியதால் மனம் சமாதனம் அடைந்ததால், இனிமேல் அனைத்தும் காலத்தின் கையில் விட்டுவிட்டாள். அவனை பார்த்து சிரித்துவிட்டு குளியலறைக்கு சென்றுவிட்டாள்.

இருவரின் எண்ணங்களும் தங்களது கடந்தக் காலத்தை அடைந்தது. நான்கு வருடங்களுக்குமுன் ஹரிஷ் மற்றும் அனந்திதா இருவரும் ஒரு வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனத்தில் இந்தியாவில் உள்ள இரு வேறு மாநகரங்களில் தங்கள் பணியை செய்துக் கொண்டிருந்தனர்.

ஹரிஷ் மற்றும் அனந்திதா இருவரும் கோவையைச் சார்ந்தவர்களே ஆனால் இருவேறு திசைகளில் வாழ்ந்தவர்கள். ஹரிஷ் தன்னுடைய யுஜி மற்றும் பிஜி படிப்புகளை சென்னையிலும், அனந்திதா தன்னுடைய யுஜி யை கோவையிலும் முடித்தாள்.

இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் பணியில் சேர்ந்தனர். ஹரிஷ் பெங்களூரிலும், அனந்திதா சென்னையிலும் சேர்ந்தாள்.

அவர்கள் பணிப்புரிந்த நிறுவனமானது, புதுமுயற்சியாக இப்பொழுது பணியில் சேர்ந்த fresher சை வெளிநாட்டில் உள்ள பிரான்ஞ்சில் அவர்களுடைய ட்ரைனிங்கை ஆரம்பிக்க ஒரு வாய்ப்பை அளித்தது.

அதில் பங்குபெருபவர்களின் பட்டியலே அவர்களே தேர்ந்தேடுத்தனர், அதில் இவர்களுடன் சேர்ந்து 1௦ பேரை அவர்கள் லண்டனில் உள்ள மையின் பிரான்ச்க்கு அனுப்ப முடிவெடுத்தனர்.

இவ்வாறு அமையும் வாய்ப்பை யாரும் இழக்க தாயரகல்லை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற அதுவாக அமைத்துள்ள வாய்ப்பை ஏற்க தயாராகினர். அனைவரும் ஒன்றாக டெல்லியில் இருந்து தங்கள் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் உடன் தங்கள் விசாவை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறப்பட்டிருந்தது.

அதனால் இந்தியாவில் உள்ள அந்த மென்பொருள் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேரும் டெல்லியை அடைந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

ஆனால் இருவரும் தங்களை ஒருவர் ஒருவர் சந்தித்தது ப்ளேட்டிலேயே அதுவும் பக்கத்து சீட்டில், இது ஒன்றே போதாத அவர்கள் அறிமுகமாக.

அனந்திதாவிற்கு யாரையும் தெரியாது, தன்னுடைய விசா வாங்க அலுவலகம் வந்தவள் அங்கு தன்னைப் போலவே வந்த மித்திலாவை சந்தித்தாள். அவள் டெல்லியை சார்ந்தவள் எனவும், அவளும் இந்த வாய்ப்பை பெற்றுள்ளாள் எனவும், அறிந்த இருவரும் சிறிது நேரத்தில் தோழிகளாக மாறிவிட்டிருந்தனர்.

பிறகு விமானநிலையம் வந்த இருவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். அப்பொழுது அங்கு தங்களைப் போலவே வந்த அனைவரிடமும் தங்களை அறிமுகம் படுத்திக்கொண்டு இருந்தவள் மீது யாரோ வேகமாக மோதியிருந்தனர்.

அவர்களை திரும்பி பார்த்தவள் ஏதோ திட்ட போகவும் அதற்குள் அவனே, “சாரி மேடம், கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, அதனால அவசரத்துல வந்ததால தெரியாம இடுச்சிட்டேன்” என்று தமிழில் சொன்னவனைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.

பின்பு பார்மலாக, “பரவாயில்லை” என்றவளை ஆச்சரியமாக பார்த்தான்.

பின்பு இருக்காத சிறு பெண்ணாக மேலே ஒரு டி-ஷார்ட்டும் லாங் ஸ்கிர்ட்டும் அணிந்து கழுத்தில் சிறு ஷாலை சுற்றிக்கொண்டு பார்க்க அல்ட்ரா மாடர்னாக இருந்தவள், பார்த்தவுடன் தமிழ் பெண் என்றரிந்தவன் பார்த்த நொடியில் அவள் மனத்தைக் கொள்ளையடித்தாள்.

பிறகு அங்கு வந்த ப்ராஜெக்ட் லீடர் அவரை அறிமுகம் படுத்திக்கொண்டு இருந்தவர்,  அங்குள்ள அனைவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகபடுத்தினார்.

 அப்பொழுது ஹரிஷின் முறை வந்ததும் தான் அனந்திதா அறிந்தாள் அவனும் தங்களைப் போலவே ட்ரைனிங்காக வந்தவன் என்று.

ஒருபுறம் சந்தோசமாக இருந்தது அவளுக்கு யாராவது ஒருத்தர் நம்ம தமிழ் ஆளுங்க கிடச்சங்க என்று.

இருக்காத என்ன தான் corporate culture ஆக இருந்தாலும் தங்களோடு எண்ணத்தை பிரதிபலிக்க நம் மொழியில் பேசுவதையே அனைவரும் விரும்புவர் அவள் ஒன்றும் அதற்கு விதிவிலக்கானவள் இல்லையே.

ப்ளைட் டேக் ஆப் ஆகும் அறிவிப்பு வரவும் தங்கள் இருக்கையை அடைந்த இருவருக்கும் மகிழ்ச்சியே, அனந்திதாவோ தனக்கு பேசுவதற்கு கம்பெனி கிடைத்துவிட்டது எனவும் அவனோ அவளோடு லண்டன் செல்லும் வரை இருக்கலாம் எனவும் நினைத்து இருவரும் மற்றவரை அறிந்துக் கொள்ளலாம் என ஒருசேர மனதில் முடிவெடுத்திருந்தனர்.

“ ஹாய் !! அனந்திதா !! உன்னோட நேட்டிவ் எது?”

“ ஹலோ !! கோயம்புத்தூர் தான்”

“ ஏய் !! நானும் அங்கதான் !!” என்றவன், அவளிடம் எங்கு எது என்று கேட்டுக் கொண்டான் அவளும் நம்ம ஊர்காரர் தான் என்று படித்தது வேலை செய்ய ஆரம்பித்தது எனக் கேட்டும் தன்னைப் பற்றி சொல்லியும் அவர்களின் பேச்சுவார்த்தைத் தொடங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.