(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ

anbin Azhage

பால்போலே பதினாறில் 

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

 

இணைய தளத்தில் கணிணி களத்தில்

மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே

வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்

முகத்தை முகத்தால் துடைக்கணுமே

 

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

 

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா

கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா

கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

காரில் அலறிக் கொண்டிருந்த பாடலுக்கு ஸ்டிரிங்கில் தாளம் போட்டவாறே அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான் அபினவ்...30 வயது இளைஞன்.மிகப் பெரிய ஐடி நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக பணிபுரிகிறான்..சாரதா ராகவன் தம்பதியினரின் ஒரே புதல்வன்.மேல்தட்டு நடுத்தர குடும்பம் அவர்களுடையது.இப்போதைக்கு பெற்றோரின் ஒரே கவலை மகனின் திருமணம் மட்டுமே.ஆனால் அவனோ பிடி கொடுக்காமல் இந்த வருடம் அடுத்த வருடம் என்று தள்ளிக் கொண்டே செல்கிறான்.

அபினவ் பால் வண்ண நிறமும் ஆறடி உயரமுமாய் அதை மேலும் மெருகூட்டுவதாய் அவனின் சிக்ஸ் பேக்கும் அம்சமாய் திருமணத்திற்கு தயாரான நிலையில் இருக்கும் அழகு கண்ணன்...

தன் இருக்கையில் அமர்ந்தவன் கணிணியை உயிர்பித்து முதல் வேலையாய் முகப் புத்தகத்தினுள் நுழைய அத்தனை அத்தனை நோட்டிபிகேஷன்கள்..தனது வழக்கமான புன்னகையை உதட்டில் ஒட்டியவன் ஒவ்வொன்றாய் பார்த்து க்ளியர் செய்ய மறுபுறம் மெசென்ஜரில் கான்வர்சேஷன்கள் வர ஆரம்பித்திருந்தது.

தலை சுற்றி விடும் அளவிற்கு நண்பர்கள் பட்டியல் நீண்டு கொண்டேயிருந்தது.அதிலும் பெண் தோழிகளே அதிகம்..முதலில் பார்ப்பவர்கள் யாருக்கும் நிச்சயமாய் நல்லவிதமாய் எண்ண தோன்றாத கேட்டகிரி தான் நம்ம ஹீரோ சார்..பட் ஸ்ரீ யோட ஹீரோஸ் குட் பாயா இல்லாம எப்படி..மிக மிக நல்லவன் தான் என்ன வாய் கொஞ்சம் அதிகம்..

இப்படிபட்டவனின் சமீபகால முகப் புத்தக தோழி சாரு..அவன் எதையோ யோசிக்கும் போதே அவளின் நோட்டிபிகேஷன் வந்தது.

“நீயெல்லாம் இன்னும் உயிரோடதான் இருக்கியா?”

முகத்தின் புன்னகை பெரிதாக,”எஸ் ஸ்டில் அலைவ்”,என்று அனுப்பினான்.

“நீயெல்லாம் வரதா புயல்ல செத்துட்டனுல நினைச்சேன்..அறிவில்லையா மெசெஜ் பண்ணணும்னு தோணாது??”

“ஆபீஸ் ஷெக்டிக் வொர்க் பிஸி”

“நல்லது எக்கேடோ கெட்டு போ.பை”

“பை..”

“திமிரு..”

பார்த்தவனுக்கு மனதில் எழுந்த சிரிப்பை முகத்தில் காட்ட முடியவில்லை..ஒரு வாரமாய் புது ப்ராஜெக்ட் என்பதால் நிஜமாகவே வேலை தலைக்கு மேல் இருந்தது.அவ்வளவாய் யாருக்கும் ரிப்ளை செய்ய முடியாமல் போனது..மனிதர்கள் பலவிதம் என்பதற்கேற்ப பழகிய குறுகிய நாட்களிலேயே உயிர்த் தோழியாய் மாறிப் போனாள் சாரு..பாதி நாட்கள் இருவருக்கும் சண்டை மட்டுமே ஆனால் அதிலும் ஒரு புரிதல் இருந்தது..அவனின் விளையாட்டு பேச்சைக் கூட ரசிக்க மாட்டாள் கிட்டதட்ட அன்னையின் கண்டிப்பு இருக்கும் அதில்.

இப்படிபட்ட சாக்லேட் பாய் இன்று வரை சிங்கிள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா!!ஆனால் அதுதான் உண்மை..அன்னையாய் தங்கையாய் தமக்கையாய் மகளாய் தோழியாய் பல பெண்களோடு பேசுபவனுக்கு ஏனோ மனைவி என்ற இடத்திற்கான பெண்ணை தேட தோன்றவில்லை…

(முடிலல என்னாலயும் முடில..நல்லவரா கெட்டவரானு தான கேக்குறீங்க சத்தியமா எனக்கே தெரில..ஓ.கே நோ டென்ஷன்..வாங்க ஹிரோயினாவது புரிய மாதிரி இருக்காங்களானு பாப்போம்..)

ந்த பட்டர்ஃப்ளை மான்ட்டஸரி பள்ளியின் ப்ரிகேஜி வளாகத்தில் சிறு சிறு வாண்டுகளுக்கு நடுவே அமர்ந்திருந்தவளை யாரோ அழைக்க அவள் தன் வேலையிலேயே கவனமாய் இருக்க அவளருகில் இருந்த பிஞ்சு தன் தளிர் கரங்களால் அவளைத் தட்டி வாசலைக் காட்ட ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையோடு நின்றிருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.