(Reading time: 10 - 19 minutes)

முகத்தில் புன்னகை மின்ன அவர்கள் அருகில் சென்றவள் குழந்தையை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தாள்..

திஷானி முதுகலை பட்டதாரி..மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னனியில் இருந்து வந்தவள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படித்து முடித்த கையோடு ஐடியில் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கடும் உழைப்பால் குடும்பத்தை ஓரளவு நடுநிலைக்குக் கொண்டு வந்திருந்தாள்.தம்பி படிப்பை முடித்து வேலைக்குச் சென்றவுடன் தன் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டாள்..

திஷானி பெயரைப் போன்றே அவளும் வித்யாசமானவள் தான்..கருப்பழகி என்றுதான் கூற வேண்டும்..அவளை கண்டபின் நிச்சயம் கருமையையும் ரசித்துப் பார்க்கத் தோன்றும்.அந்த கண்கள் பேசும் கவியை படிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறதோ தெரியவில்லை.அப்படியான கண்கள்..முதுகை மறைத்த அடர்த்தியான கூந்தல்.மூக்கில் சிறிதாய் ஒற்றை வெள்ளைக் கல் மூக்கூத்தி மேலும் அழகு சேர்ப்பதாய்..

இத்தனையையும் மீறிய அவளின் குறை அவளை திருமண சந்தையில் விலக்கி விட்டிருந்து.அதை நினைத்து அவளும் என்றும் வருந்தியதில்லை தான் ஆனால் அவளின் அன்னைக்கும் தம்பிக்கும் அதுதான் மிகப் பெரும் கவலையாய் இருந்தது.

மாலை வேளையில் அபினவ் அலுவலகத்திலிருந்து கிளம்ப எத்தனிக்க சரியாய் அவனின் கைப்பேசி அலறியது.அவனது நண்பன் நரேன் தான் அழைத்திருந்தான்.இருவரும் பக்கத்து பக்கத்து அப்பார்ட்மெண்டில் தான் வசித்து வந்தனர் குடும்ப நண்பர்களும் கூட..

“சொல்லு மச்சி”

“மச்சான் நானும் அனுவும் ஆபீஸ் மீட்டிங்ல மாட்டிக்கிட்டோம்டா பாப்பாவ ஸ்கூல்லயே பாத்துக்க சொல்லிருந்தோம்..பட் ரொம்ப லேட் ஆய்டுச்சு எக்ஸ்பெக்டே பண்ணல நீ போய் பாப்பாவ பிக்கப் பண்ணிக்கிறியா..சாரி டா இன்னைக்கு மட்டும்..”

“டேய் இதுக்கு எதுக்கு சாரியெல்லாம் சொல்ற என் டார்லிங்க நா பிக்கப் பண்ணமாட்டேனா..நீங்க பாத்து பொறுமையா வாங்க நா பாத்துக்குறேன்..பை..”

அடுத்த பதினைந்தாவது நிமிடம் பள்ளி வாசலில் காரை நிறுத்தியவன் உள்ளே செல்ல அங்கு யாரையும் காணாமல்  ஹாலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க,

“யாரு உள்ளே வாங்க..”,எனும் குரல் கேட்டு ஷுவை கழட்டிவிட்டு உள்ளே சென்றான்.அங்கே சீஃப் ஆபீசர் எனுமிடத்தில் அமர்ந்திருந்த திஷானி அவனை ஏறிட தன் வழக்கமான விளையாட்டு சுபாவம் மாறாமல் முகம் மலர சிரித்தவன்,

“ஹாய் ஷாமிலியை பிக்கப் பண்ணிக்க வந்துருக்கேன்..அவங்க பரண்ட்ஸ்..”

“யா கால் பண்ணி சொன்னாங்க ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க ஆயாம்மா அழைச்சுட்டு வருவாங்க”

“ஓகேய்..”என்றவாறு பார்வையை சுழற்றியவன் மீண்டும் அவளிடத்திலேயே பார்வையை பதித்தான்..அதற்குள் குழந்தை வந்துவிட அவளை அழைத்துக் கொண்டு அவளிடம் விடைப் பெற்று வெளியே வந்தவன் காரில் குழந்தையை அமர வைத்து விட்டு தன்னிருக்கையில் அமர்ந்தான்.

காரை ஆன் செய்வதற்குள் அலைப்பேசி அழைப்பு வர அப்படியே பேசிக் கொண்டிருந்தவன் வெளியே வந்தவளைக் கண்டு ஒரு நொடி பேசுவதையே நிறுத்தி விட்டிருந்தான்..

ஒற்றைக் கையில் வாக்கிங் ஸ்டிக்கை பிடித்தவாறு ஒருபுறமாய் லேசாய் சாய்ந்து நடந்தவளிடமிருந்து ஏனோ பார்வையை அகற்ற முடியவில்லை..குழந்தையின் சிணுங்கலில் நினைவிற்கு வந்தவன் வேகமாய் காரை வீட்டை நோக்கி இயக்கினான்..

“அபி..நாம இப்போ எங்க போறோம்??”

“டார்லிங் நாம இப்போ சாரதா பாட்டிய பாக்க போலாம் நீ சமத்தா சாப்டுவியாம்.டேடியும் மம்மியும் ஓடி வந்துருவாங்களாம்..ஓ.கே வா??”,என்றவாறு காரை பார்க் செய்தவன் வீட்டிற்குள் நுழைய குழந்தை சாரதாவை தேடி ஓடினாள்..

“அம்மா நீ அவளுக்கு சாப்பிட ஏதாவது குடு.நா ரெப்ரெஷ் ஆய்ட்டு வரேன்”

அவன் வருவதற்குள் குழந்தை சாரதாவிடம் சாப்பிட்டு முடித்திருக்க அபி சென்று தன் அன்னை மடியில் படுத்துக் கொண்டான்..

“ஏன்டா எத்தனை வயசு ஆனாலும் இந்த பழக்கத்தை மாதிக்கவே மாட்டியா?சின்ன புள்ளை மாதிரி”

“ம்மா நா உனக்கு சின்ன புள்ளை தான..கொஞ்ச நேரம் ப்ளீஸ்..”

அதற்குள் ஷாமிலியின் பெற்றோர்கள் அவளை அழைத்துச் செல்ல வர,அபி தன் நண்பனோடு பால்கனியில் சென்று பேசிக் கொண்டிருந்தான்.

“செம கடி டா இன்னைக்கு ஆபீஸ்..இந்த ஸ்கூல்னால பரவால்ல அந்த மிஸ் கொஞ்சம் கேர் எடுத்து பாத்துப்பாங்க இல்லனா எங்க நிலைமையெல்லாம் ரொம்ப கஷ்டம்..”

“ம்ம் நம்ம குட்டிக்காக தான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணாங்க போல உடனே கிளம்பிடாங்க”

“ம்ம் ஆமாடா அந்த பொண்ணு பேரு திஷானி..அவங்களும் ஐடி ல வேலை பாத்தவ தான்..மனசுக்கு பிடிக்காம பேமிலி ரீசன்ஸ்காக பாத்துட்டு இருந்தா.இப்போ கொஞ்சம் பெட்டர் ஆனவுடனே இங்க வந்துட்டா..நம்மளவிட சின்ன பொண்ணு தான்..அவங்க அம்மா முன்னாடி என் அண்ணா வீட்ல சர்வெண்டா வேலை பாத்தாங்க சோ டீடெயில்ஸ் தெரியும்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.