(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - என்னவளே - 04 - கோமதி சிதம்பரம்

ennavale

கீதா,  திரு திரு வென முழித்தாள். அவளின் கண்கள் அழகாக விரிவதை ரிஷி ரசித்து பார்த்தான். இவள், என்றுமேயே  என்னுடையவள் என்பதை மனதில் நினைக்கும் போதேயே அவனது மனம் சந்தோச வானில் பறந்தது.

தன்னுடன் தாலி கட்டாமல் மூன்று மாதம் வாழ்ந்தவள். அப்போதும், எல்லைகளை மீறி அவர்கள் வாழவில்லை. அந்த வயதில் ரிஷியின் காதல் அவனுக்கு காமத்தை உணர்த்தினாலும்  கீதாவின் குணம், அவனுக்கு அன்பை மட்டுமேயெ பெரிதாக நினைக்க செய்தது.

ரிஷியின் குணம் தெரிந்தும் கீதா அவனுடன் ஒரேயே வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டது ரிஷிகேயே ஆச்சரியம் தான். ஆனால், கீதா ரிஷியை ஒரு தாய் போல பார்த்துக்கொண்டாள். தனது படிப்பையையும் அவள் தொடர்ந்தாள்.

கீதா, சரி என்று சொன்னதும். ரிஷிக்கு தான் உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவளுடன், ஒரேயே வீட்டில் இருப்பது சந்தோசம் தான். ஆனால், அவனது வயது அவனை எல்லை மீற செய்து விட்டால்? என்ன செய்வது? என்ற யோசனையும் அவனிடம் இருந்தது.

ரிஷி, அவனது தந்தை கம்பெனியில் அப்போதுதான் வேலைகளை கற்று முடித்து இருந்தான்.  ஒரு மாதத்தில் தந்தையின் தொழிலை முழுதாக ஏற்க இருந்தான். இன்னும், இரண்டு மாதத்தில் கீதாவும் பி.பி.எ முடித்து விடுவாள். பின்னர், அவள் படிக்க நினைத்தால் திருமணத்துக்கு பிறகு படிக்கட்டும் என்ற முடிவும் அவனையே எடுத்தான்.

இருப்பத்தி மூன்று வயதில் திருமணம் செய்து கொள்வதில் ரிஷிக்கு  விருப்பம் இல்லை. ஆனால், அவனால் கீதா இன்றி ஒரு நிமிடம் கூட இருக்க இருக்க முடியாது என்பதை அவனுக்கு கீதா உணர்த்தி கொண்டேயே இருந்தாள். அதன் விளைவாக தான் , ரிஷி லிவிங் இன் ரெலஷன்ஷிப் யில்  வாழ முடிவுஎடுத்தான்.

கீதா, முதலில்  இதற்கு மறுப்பு தான் தெரிவித்தாள். ஆனால் , ரிஷியின் பிடிவாதம் மற்றும் முரட்டு குணம் கீதாவிற்கு நன்றாகவேயே தெரியும்.  இவள்  மறுக்க ஆரம்பித்ததும், அவன் சாப்பிட மறுக்க ஆரம்பித்தான். கீதா அதை பெரிதா எடுத்துக்கொள்ளவில்லை.

அடுத்து, அவனது கான்ஸ்ட்ருக்ஷன்  கம்பெனிக்கு வேலைக்கு போவது இல்லை என்று அவளையும் கூட்டிக்கொண்டு வெளியில் சுற்ற  ஆரம்பித்தான். ஆனால், அவன் அங்கும் எதும் சாப்பிடாமல் இருப்பது கண்டு கீதா  ரிஷியுடன்  இருக்க சம்மதித்தாள்.

ரிஷி தன்னை வருத்தி கொள்வதை கீதா ஒருபோதும் விரும்பமாட்டாள். என்பதை அறிந்தேயே ரிஷி உணவு உண்பதை நிறுத்திக்கொண்டான் அதை கீதா அறிவதற்காகவேயே வெளியில் கூட்டி செல்லவும் செய்தான். அவன் எதிர்பார்த்தபடி, கீதாவும் ரிஷி  உண்ணாமல் இருப்பதை தாங்க முடியாது ஒத்துக்கொண்டாள்.

ரிஷி அவளை கூட்டி வந்து இருந்தது ஒரு பீச் ரிசார்ட்  அங்கு இருந்த டேப்ளேளில் உட்கார்ந்து  கொண்டு ரிஷி தனது பசி அடங்கும் வரை உணவு அருந்தி கொண்டு இருந்தான். எதிரில் பொய் கோபத்துடன் கீதா அவன் உண்பதையே பார்த்து கொண்டு இருந்தாள்..

அப்படி என் முகத்துல என இருக்குனு இப்படி  பார்க்குறீங்க மேடம்? என்ற ரிஷியின் கேள்வி கீதாவிற்கு கோபத்தை வரவழைத்தது.

பின்ன , இவ்ளோ பசி வச்சுக்கிட்டு பிடிவாதமா சாப்பிட மாட்டேன்னு  இருந்த என்ன பண்றது? எப்ப பாரு பிடிவாதம்  என்று  கீதா சலித்து கொண்டாள் .

ஆமாம் . நான் பிடிவாதம் பிடிக்காம இருந்த மேடம்  என்கூட இருக்க ஓகே சொல்லமாட்டீங்களேயே அதான். பயப்படாத, உன்ன நான் ஒன்னும் பண்ணமாட்டேன். மூணு  மாசம் முடிஞ்சதும் உங்க ஊர்ல கூட்டிட்டு பொய் விட்டுடுறேன் சரியா?....  என்று ரிஷி  கேட்டு முடிக்கவும் கீதா கலகலவென  சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவள் சிரிப்பதை பார்த்த ரிஷி.  கீதாவின் சிரிப்பினில் மயங்கினாலும் அவள் சிரிப்பதற்கான காரணத்தையும் கேட்டான்.

கீதா சிரிப்பதை நிறுத்திவிட்டு, அவனை குறும்புடன் பார்த்தாள். என்ன  எதோ பண்ணுவிங்கனு சொன்னிங்க இல்ல.  அது எல்லாம் பண்ற அளவிற்கு  உங்களுக்கு தைரியம் இருக்கானு  யோசிச்சு பார்த்தேன் சிரிப்பு வந்துடுச்சு. என்று பாவம் போல முகத்தை வைத்து கொண்டு சொன்னாள்.

ஓ, அப்படியா!  மேடம்  வந்து தங்கும்  போது தெரியும். நான்என்ன  எல்லாம்  செய்ய போறேன்னு. அப்ப பாக்குறேன் நீ எப்படி சிரிக்குறேனு? என்று கேட்டா ரிஷிக்கு இம்முறையும் கீதா சிரிப்பையே பதிலாக  தந்தாள. அவள் சிரிக்கும் போது அவளது  உதட்டு  மச்சம் ரிஷியை கிறங்க செய்தது. அவனது பார்வையை உணர்ந்த கீதா மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

ஹே! என்ன  ஒரு பையன் அதும் உன் லவர் கூட தங்க போறங்குற பயம் கொஞ்சம் கூட இல்லாம சிரிக்குற. உன் மேல அவ்ளோ நம்பிக்கையா?....

சிரிப்பை நிறுத்திவிட்டு,  ரிஷியை பார்த்த கீதா நம்பிக்கைதான,  அசைக்க முடியாத நம்பிக்கை என் மேல் இல்ல. உங்க மேல. நீங்க என் வாழ்க்கையில வில்லன்  இல்ல. ஹீரோ. உங்க கூட தங்க போற இந்த மூணு மாசம் தான்.  என் லைப் யோட  பெஸ்ட்யா  இருக்க போது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.