இதுல, sex இருக்குமா இல்லையானு தெரில. ஆனா, நம்மலோட லவ் நிறைய இருக்கு போது. அதுல, மததுஎல்லாம் காணாம போக போது என்று கூறியவளை எழுந்து வந்து அணைத்து கொண்டு ரிஷி கடற்கரைக்கு கூட்டி சென்றான். தன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை அவனை நெகிழ செய்தது.
கீதாவிற்காக மற்ற ஆசைகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால், அவளை அருகில் வைத்து கொண்டு கீதாவின் நம்பிக்கையை காப்பற்ற ரிஷி போராட வேண்டியிருந்தது.
முதல், இரண்டு மாதம் கீதாவின் எக்ஸாம். ரிஷியை தடுத்தது. கடைசி ஒரு மாதம் இருவர்க்கும் முள் மேல் நிற்பது போல இருந்தது. கீதாவின் அடக்கம் ரிஷியை கவர்ந்தது. ரிஷியின் காதலே கீதாவை மிகவும் கவர்ந்தது. அவன் எல்லை மீறாமல் இருக்க ரிஷி படும் கஷ்டங்கள் அவளுக்கு சிரிப்பை வர வைத்தாலும் அவன் மீது காதலை அதிகப்படுத்தியது.
கீதா, ரிஷியுடன் தங்க ஒப்புக்கொண்டது அவளுக்கீயே ஆச்சரியம் தான். ஆனால், ரிஷியின் மீதுள்ள காதல் அவளை எந்த முடிவு எடுக்க வைத்தது. ரிஷி முரடனேயே தவிர நல்ல குணம் கொண்டவன். யாருக்கும் எந்த தீங்கும் நினைக்க தெரியாதவன். ஆனால், கோபம் வந்தால் முதலில் அவன் கை தன பேசும் என்பதும் அவளுக்கு தெரியும். கீதாவின் எக்ஸாம் முடிந்ததும் ரிஷியின் செயல்கள் மாற துவங்கியது. அவளின் அருகில் உட்கார்ந்து அவன் பேசுவது இல்லை. இவள் தள்ளி நிற்கும் போது இவளையே பார்ப்பான். கீதா, இதை புரிந்து கொண்டு அவள் அருகிலேயே இருந்தாள். அவன்படும் அவசத்தை கண்டு அவன் முன்பெயே சிரித்து அவனையும் சிரிக்கவைப்பாள்.
ரிஷிக்கோ , கீதாவின் செய்கைகள் அனைத்தும் புதிதாக இருந்தது. இந்த வீட்டிற்கு வந்த இரண்டு மாதமும் ஹாஸ்டெலில் இருப்பது போலவேயே இருந்தாள். ஆனால், அவள் எக்ஸாம் முடித்ததும் வீட்டின் சமையல் வேலையை அவள் செய்ய ஆரம்பித்தாள். கீதாவிற்கு சமைக்க தெரியாது என்று நினைத்த ரிஷியின் எண்ணத்தை பொய்யாக்கினாள். தினமும், வித விதமாக அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்தாள். காலை மாலை என இரு வேலையும் பூஜை செய்தாள். இவன், வர தாமதம் ஆகும் போதும் இவனுக்காக காத்திருந்தாள். அவள் ரிஷியாய் விட்டும் அந்த வீட்டை விட்டும் எங்கும் செல்ல விரும்பவில்லை. அவள் ஒரு மனைவி போல அவனுக்கு எல்லா கடைமைகளையும் மகிழ்ச்சியுடன் செய்தாள். ரிஷிக்கு தான் அவளது செய்கைகள் கீதாவை மனைவி என்றேயே நினைக்க செய்தது.
பௌர்ணமி நாட்களில், அவனுடன் அதிக நேரம் தோட்டத்தில் உட்கார்ந்து பேசுவாள். நிலஒளியின் வெளிச்சத்தில் அவளது அழகை ரிஷி கண்களினலையே பருகுவான். இரவு நேரத்தில் தூங்க மட்டுமேயெ அவள் ரிஷியை விட்டு விலகுவாள். அப்பொழுதும் கூட, இருவரும் ஒருவரை பற்றி மற்றொவர் நினைத்து கொண்டு இருந்தனர்.
இதற்கு எல்லாம் முடிவாக மூன்று மாதம் முடிய இன்னும் பத்து நாட்களே இருந்தது. ரிஷியால் இனி கீதா இல்லமால் வாழமுடியாது என்ற நிலைக்கேயே வந்துவிட்டான். இதற்கு மேல் தள்ளி போடா கூடாது என்று அவன் தந்தையின் முன்பு போய் நின்றான். கீதாவை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டான். அவர்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கும் முறையை பற்றியும் கூறினான்.
திடிரென்று, தன் மகன் இப்படி வந்து நிற்பான் என்று சதாசிவம் ஒரு போதும் நினைக்கவில்லை. இப்பொழுது தொழிலை நல்லபடியாக பார்த்து கொண்டு இருக்கிறான். ரிஷியின் திருமணம் கூட இரண்டு வருடம் கழித்து தான் செய்யலாம் என்று இருந்தார். ஆனால், இவன் ஒரு பெண்ணுடன் மூன்று மாதம் அதும் தாலி கட்டாமல் வாழந்து கொண்டு இருப்பது அவருக்கு ஆத்திரத்தை வர வளைத்தது.
சதாசிவம், கீதாவை தவறான பெண்ணாக கருதினார். அவளை மருமகள்யாக ஏற்று கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். ரிஷியும் அவருடன் சண்டை போட்டு கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
காரில் வரும் போது எல்லாம் தந்தையின் வார்த்தைகளே அவனது மனதை நிறைந்து இருந்தது. கீதாவை, தவறாக பேசியதை அவனால் ஏற்று கொள்ள முடிய வில்லை. அவள் தன்னை விட்டு போய்விடுவாள். அதும் பணத்திற்காக அவள் என்னுடன் இருக்கிறாள். என்பதை கீதாவை திருமணம் செய்து பொய்யாக்கவேண்டும் என்று எண்ணினான்.
இதேயே, கோபத்துடன் வீட்டை அடைந்தான். அங்கு, ரிஷியை கண்டதும் கீதா வேகமாக ஓடி வந்தாள். ரிஷியின் அருகில் வந்து குட்நியூஸ் என்றாள். அவளது முகம் எங்கும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.
எனக்கு வெளிநாடு போய் படிக்கச் ஸ்சலர்ஷிப் கிடைச்சு இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல எந்த நாடுனு சொல்லுவாங்க. இதோ, காலேஜ்ல இருந்து அப்ப்ளிகேஷன் form அனுப்பியிருக்காங்க என்று கூறி ரிஷியை கட்டிக்கொண்டாள்.
ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை, எப்படி கீதாவால் தன்னை விட்டு போக முடியும். அவளை விட்டு தன்னால் இருக்கவேயே முடியாது அப்படி இருக்க கீதாவை எப்படி ரிஷியால் அனுப்பமுடியும். கீதாவின் மீது அவன் வைத்துள்ள காதல் ரிஷியின் கண்களை மறைத்தது.
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனை அய்யயோ!! என்ற சிவகாமியின் குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது. கீதா, அவளது அறையில் இல்லை.
ரிஷி, வேகமாக கீதாவின் அறையில் இருந்து வெளியில் சென்றான்.
அந்த வீட்டின் ஹாலில், சிவகாமி கீதாவின் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அழிக்குமாறு திட்டி கொண்டு இருந்தார். கீதா, என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தாள்.
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.