(Reading time: 34 - 67 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 11 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

முதல் பார்வையிலே மனதை கொள்ளை கொண்ட காவ்யா, ஷியாம் பிரகாஷ் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டாள்.

அவள் நினைவிலே அன்றைய வேலையை துடங்கினான் ஷியாம். அன்று  மட்டும் அல்லாமல் அதற்கு பின்னரும் அவள் நினைவிலே அவன் வாழ்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவளை நேரில் கண்டு காதலை சொல்ல அவன் மனது பரபரத்தது.

அவனுக்கு கொடுக்க பட்ட ப்ரொஜெக்ட் வேலையை மின்னல் வேகத்தில் முடிக்க துடங்கினான்.

அங்கே காவ்யாவோ அவனை பற்றி எதுவும் அறியாமல் மதியுடன் காலேஜ் சென்று கொண்டிருந்தாள்.

கலைமதியும் சந்தோசமாக இருந்தாள். சூர்யாவோ  அவளை பொறுப்பாக கவனித்து கொண்டான். இப்படியே அனைவருடைய வாழ்க்கையும் சாதாரணமாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் கலைமதி மனதில் மட்டும் ஒரு குழப்பம் சூழ்ந்திருந்தது. அதை அவனிடம் வெளிப்படையாக சூர்யாவிடம் கேட்க முடியாமல் மனதினுள் வைத்து புழுங்கி கொண்டிருந்தாள். அவள் மனதில் இருக்கும் அந்த கவலையை சூர்யாவும் கவனிக்க தவறி விட்டான்.

அந்த செமஸ்டர் முடிய இன்னும் ஒரு மாதம் இருந்தது. அதற்கு முன் நடந்த மன்த்லி பரீட்சை பேப்பர் கொடுக்க பட்டது. எப்போதும் முதல் மதிப்பெண் வாங்கும் மதி அந்த பரிட்சையில் குறைந்திருந்தாள்.

அவளுடைய வகுப்பு பேராசிரியரும் வீட்டில் இருந்த எதுவோ கோபத்தில் மதி மதிப்பெண் குறைந்ததால் அவளிடம் அந்த மொத்த கோபத்தையும் அவளிடம்  காட்டி விட்டாள்.

தன் மீது தான் தவறு என்று மதிக்கு புரிந்தாலும் இது வரை அவள் இப்படி யாரிடமும் படிப்புக்காக திட்டு வாங்கியதில்லை என்பதால் இன்று வெகுவாக காய பட்டாள்.

காவ்யா தான் மதியை  சமாதான படுத்தினாள். அன்று மாலை மதியை  கூப்பிட வந்த சூர்யா பார்த்தது மதியின் கலங்கின  முகத்தை தான்.

குழப்பத்தில் புருவம் உயர்த்தியவன் அவள் காரில் ஏறி அமர்ந்ததும்  "என்ன மா, என்ன ஆச்சு?", என்று பொறுப்பாய் விசாரித்தான்.

"ஒன்னும் இல்லை", என்று பதில் சொன்னவள் அவன் முகம் பார்க்காமல் திரும்பி கொண்டாள்.

"சரி வீட்டுக்கு போன பிறகு கேட்டுக்கலாம்", என்று நினைத்து கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

வீட்டுக்கு போனதும் அவளிடம் தனியே விசாரிக்க நேரம் பார்த்து கொண்டிருந்தவனுக்கு அந்த நேரத்தை மதி வழங்கவே இல்லை. எப்போதும் மங்களம் அருகிலே சென்று அமர்ந்து கொண்டாள். மங்களத்திடம் சிரித்து பேசி கொண்டு தான் இருந்தாள்.

தன்னை தான் தவிர்க்கிறாள் என்று புரிந்து கொண்டவனுக்கு அவன் மீது எதற்காக கோபம் கொண்டிருக்கிறாள் என்று மட்டும் புரியவே இல்லை.

"நைட் படுக்க வரும் போது கேக்கணும்". என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.

ஆனால் அவளோ அவன் உள்ளே சென்ற பின்னரும் உள்ளே வரவில்லை. "என்ன ஆச்சு?", என்று எண்ணி கொண்டே வெளியே வந்தவன் திகைத்தான். அவள் ஹாலில் அமர்ந்து படித்து கொண்டிருந்தாள்.

"இத்தனை நாள் ரூம் குள்ள வச்சு தான படிப்பா? இப்ப ஏன் வெளிய உக்காந்து படிக்கிறா? அம்மா பாத்தா எதாவது நினைப்பாங்களே",என்று எண்ணி மங்களம் அறையை பார்த்தான். அவர்கள் அறை பூட்டி இருந்தது.

"சரி தூங்க இங்க தான வருவா", என்று நினைத்து விட்டு மறுபடியும் உள்ளே சென்று விட்டான். ஆனால் அவள் பதினோரு மணி ஆகியும் வராததால் மீண்டும் வெளியே வந்தவன் அவள் எதிரே சென்று அமர்ந்தான்.

"மணி பதினொன்னு ஆகிட்டு கலை. இன்னும் தூங்கலையா?", என்று கேட்டான் சூர்யா.

"இல்லை படிக்க வேண்டி இருக்கு", என்று புத்தகத்தில் கண் பதித்தவாறே பதில்  சொன்னாள்.

"நீ இவ்வளவு நேரம் படிக்க மாட்டியே? அது மட்டும் இல்லாம எதுக்கு ஹால்ல உக்காந்துருக்க? உள்ள வர வேண்டியது தான?"

"உள்ள வந்தா படிக்க தோணாது. அதனால தான்"

"கலை, என்ன டி ஆச்சு? ஒரு மாதிரி கோபமாவே பேசுற? எதனால உள்ள வந்தா படிக்க முடியாது? நான் தான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேனே?"

"அதனால தான என்னால படிக்க முடியலை", என்று எண்ணி கொண்டே அமைதியாக இருந்தாள்.

"என்ன கலை அமைதியா இருக்க? என்ன ஆச்சு? நீ சாயங்காலத்துல இருந்தே சரி இல்லை. காரணம் சொன்னா தான தெரியும்? என் மேல கோபமா?"

"ம்ம்"

அவள் பதிலில் அவளை பார்த்து புன்னகைத்தவன் "என்ன கோபம்னு உள்ள போய் பேசுவோமா? இங்க இருந்து பேசுனா அம்மா எப்பவேணாலும் எழுந்து வரலாம்", என்று அழைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.