(Reading time: 34 - 67 minutes)

அவன் சேட்டையை தாங்க முடியாமல் "நான் ரூம்குள்ள போய் தூங்க போறேன்", என்று எழுந்து சென்று விட்டாள். சிரித்து கொண்டே அமர்ந்திருந்தவனின் கையில் பால் டம்பளரை கொடுத்த மங்களம் அவன் எதிரே அமர்ந்து கொண்டாள்.

"உனக்கு மதியை ரொம்ப பிடிச்சிருக்கு அப்படி தான சூர்யா?", என்று கேட்டாள் மங்களம்.

"ஆமா மா, இப்ப எதுக்கு இதை கேக்குறீங்க?", என்று குழப்பமாக கேட்டான்  சூர்யா.

"அந்த பிள்ளை, இந்த அளவுக்கு படிக்கிறதுக்கு ரொம்ப கஷ்ட பட்டிருக்கு சூர்யா. கிட்ட தட்ட அவ படிப்பை பிச்சை வாங்கிருக்கான்னு தான் சொல்லணும். உன் அத்தை காரி அவளுக்கு படிப்புக்குன்னு ஒத்த பைசா தரலையாம். அப்பா இருந்தும் அனாதை மாதிரி ஒரு டிரஸ்ட்ல இருந்து பணம் வாங்கி படிக்கிறது எவ்வளவு கொடுமை? அந்த கொடுமையை தான் மதி அனுபவிச்சிருக்கா. உங்க கல்யாணம் ஆன அன்னைக்கு ஐயோ என் பையன் வாழ்க்கை எப்படி இருக்குமான்னு என் மனசு பரிதவிச்சது உண்மை. ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்ந்து எனக்கு பேரன் பேத்தி பாக்கணும்னு ஆசை. ஆனா மதி படிப்புக்காக எவ்வளவு ஏங்கிருக்கான்னு அவ சொன்னப்ப அவ நல்ல படியா படிச்சு முடிக்கணும்னு ஆசை பட்டேன். அவளோட ஆசையும் அது தான். இன்னும் ஒரு வருசத்துல அவ படிப்பை முடிச்சிருவா. அதுக்கப்புறம் எங்களுக்கு பேரன் பேத்தியை பெத்து கொடுத்தா போதும். உங்க ரெண்டு பேருக்கும் வயசு இருக்கு. அவ முதலில் நல்ல படிக்கட்டும் சூர்யா. ஒரு பெண் படிச்சா அவளோட தலை முறையே படிக்கிற மாதிரி. இப்ப இவ்வளவு நேரம் நல்லா படிச்சிட்டு இருந்தவ நீ வந்த பிறகு தூங்க போய்ட்டா. நீ அவளோட கவனத்தை கலைக்கிறியோன்னு தோணுச்சு. நீ இன்னும் சின்ன பையன் இல்லை சூர்யா. அவள் படிச்சு முடிக்கிற வரைக்கும் அவளை தொல்லை செய்யாத", என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மங்களம்.

அதை இன்று கலைமதியிடம் சொல்லி கொண்டிருந்தான் சூர்யா. "அன்னைக்கு அம்மா இப்படி சொன்னப்பறம் உன்னை தேவை இல்லாம டைவர்ட் பண்ண வேண்டாம்னு தோணுச்சு கலை மா. நீ முதல்ல படிச்சு முடிக்கணும்னு நினைச்சேன். அது மட்டும் இல்லாம நானே சிலநேரம் கட்டுப்பாட்டை இழந்துருவேனோன்னு பயமா இருக்கும். அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எங்க அம்மாவே என்னை செருப்பால அடிப்பாங்க. அவங்களுக்கு நீ நல்ல படிக்கணும்னு ஆசை. அதனால தான் நான் உன்னை முன்னே மாதிரி கிஸ் பண்றது இல்லை. தேவை இல்லாத எதுவும் செய்றது இல்லை. மித்த படி உன்னை பிடிக்காமல்லாம் இல்லை கலை. என் செல்லத்தை எனக்கு பிடிக்காம போகுமா?", என்று கேட்டு கொண்டே அவள் மூக்கை திருகினான் சூர்யா.

"அத்தை, எவ்வளவு நல்லவங்க? எனக்கு அவங்களை நினைச்சா பெருமையா இருக்கு அத்தான். எனக்காக யோசித்து உங்க கிட்ட பேசிருக்காங்க பாருங்க? அதுல  அவங்க எனக்கு இன்னொரு அம்மான்னு நிரூபிச்சிட்டாங்க", என்று சொல்லி கண் கலங்கினாள் கலைமதி.

"சிரிச்சிகிட்டே அழுறது நீயா தான் டி இருக்கும். சரி இனிமே ஒழுங்கா படிப்ப தான?"

"கண்டிப்பா அத்தான். சாரி உங்களையும் கஷ்ட படுத்திட்டேன்ல?"

"அதெல்லாம் இல்லை டா குட்டி. நீ படி. அதுக்கு என்கிட்ட என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு சரியா?"

"ம்ம்", என்ற படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்ட மதி "அத்தைக்காகவாது நல்லா படிக்கணும்", என்று நினைத்து கொண்டாள்.

அதன் படியே படிக்கவும் செய்தாள். அந்த செமஸ்டர் பரிட்சையும் நன்றாகவே எழுதினாள்.

லீவ் விட்ட பிறகு மங்களத்தின் பின்னேயே வால் பிடித்து கொண்டு திரிந்தாள் கலைமதி. அப்போது மங்களம் தான் தன் மகனை அழைத்து எங்கேயாவது வெளியே அழைத்து செல்ல சொன்னாள்.

அவனும் "சரி மா", என்று சொல்லி விட்டு எங்கே போகலாம் என்று யோசனையில் ஆழ்ந்தான்.

அதே நேரம் அவனை போனில் அழைத்தான் ஷியாம் பிரகாஷ். இந்தியா நம்பரில் இருந்து அவன் அழைத்ததும் வியப்பான சூர்யா ஆனந்தத்துடன் போனை எடுத்தான்.

"மச்சான், எப்ப டா இங்க வந்த? சொல்லவே இல்லை?", என்று சந்தோசமாக கேட்டான் சூர்யா.

"இன்னைக்கு மார்னிங் தான் டா வந்தேன். அதான் உன்னை கூப்பிட்டேன். எப்படி இருக்க? மதி எப்படி இருக்கா?", என்று கேட்டான் ஷியாம் பிரகாஷ்.

"எல்லாரும் நல்லா இருக்கோம். நீ வரியா?"

"ஹ்ம்ம் வரேன் டா. இன்னும் கொஞ்ச நாள் இங்க தான இருக்க போறேன்? முதல்ல வீட்டுக்கு போகணும். அதான்", என்று இழுத்தான் ஷியாம்.

"அப்ப நேரா நீ வீட்டுக்கு போகலையா?", என்று ஆச்சர்யமாக கேட்டான் சூர்யா.

"எதுக்கு டா? வந்த அன்னைக்கே அங்க போய் என் நிம்மதியை கெடுத்துக்கணுமா? ஆனா போகாமலும் இருக்க முடியாது. போய் ரெண்டு நாள் இருந்துட்டு இங்க ஊட்டிக்கே வந்துருவேன்"

"ஹ்ம்ம் சரி மச்சான். அப்ப உன் வீட்டுக்கு போயிட்டு எங்க வீட்டுக்கு வந்துறியா?"

"நானா? அது அப்புறம் வரேன் டா. நீ, சிஸ்டர், அம்மா, அப்பா எல்லாரையும் கூட்டிட்டு இங்க வரலாம்ல? இப்ப இங்க நல்ல சீசன் டா. எனக்கும் நேரம் போகும். மதிக்கும் லீவ் விட்டதா சொன்னியே?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.