(Reading time: 34 - 67 minutes)

"சரி", என்று எழுந்தவள் புத்தகத்தையும் எடுத்து கொண்டு அறைக்குள் சென்றாள். அவள் பின்னே சென்றவன் அறைக்கதவை அடைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தான்.

அவள் டேபிளில் எதோ செய்து கொண்டிருந்தாள். "மதி இங்க வா. இங்க உக்காரு", என்று அழைத்தான் சூர்யா.

அவன் முகம் பார்க்காமல் நடந்து வந்தவள், அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.

"இப்ப சொல்லு டி. என் மேல என்ன கோபம்? நான் உன்னை என்ன செஞ்சேன்?"

"நீங்க ஒன்னும் செய்யலை"

"அப்புறம் என்ன கோபம்?"

"இன்னைக்கு மார்க் சீட் கொடுத்தாங்க. எப்பவும் போல மார்க்  வாங்காம இந்த தடவை குறைஞ்சிட்டேன். எங்க மேடம் திட்டிட்டாங்க"

"ஓ, அது தான் இப்படி இருக்கியா? சரி  நீ ஏன் இந்த தடவை சரியா படிக்கல? கல்யாண நேரத்துல கூட நல்ல மார்க் தான வாங்கி இருந்த?"

"என்னால படிக்க முடியல"

"படிக்க முடியலையா ? ஏன் கலை?"

"சும்மா தான்"

"இப்படி சொன்னா எப்படி கலை? சொன்னா தான தெரியும்?"

"நீங்க தான் காரணம். உங்களால தான் இந்த மாசம் நான் சரியாவே படிக்கல. படிக்கவும் முடியல"

"என்னாலயா? நான் என்ன செஞ்சேன்? தினமும் வேலைக்கு போயிட்டு வந்து சாப்பிட்டுட்டு படுத்துறேனே? நீ அமைதியா உக்காந்து படிக்கணும்னு தான நான் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தேன்"

"பொய்"

"பொய்யா? என்ன பொய்"

"நான் படிக்கணும்னு டிஸ்டர்ப் பண்ணாம இருந்தேன்னு சொன்னது பொய்"

"ஏன் டி அப்படி சொல்ற?"

"முன்னாடி எல்லாம் என்கிட்ட அன்பா பேசுவீங்க? அப்புறம் அப்புறம் என்கிட்ட.... ப்ச் இப்ப சரியாவே பேசுறது இல்லை. என்னை உங்களுக்கு பிடிக்கலை. அதனால தான் என்கிட்ட பேச மாட்டிக்கிங்க. முன்னாடி எல்லாம் ஒண்ணா தான் படுத்துருப்போம். இப்ப எல்லாம் என்னை விட்டு தள்ளி தான் படுக்குறீங்க?", என்று திக்கி திணறி சொல்லி விட்டாள்.

"இதுக்கும் இவ படிப்புக்கும் என்ன சம்பந்தம்?", என்று நினைத்தவனுக்கு அடுத்த நிமிடம் விடை கிடைத்தது.

அவள் கையை பற்றி கொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி அவனை பார்க்க வைத்தான்.

தன் நாடியில் இருந்த அவனுடைய  கையை தட்டி விட்டாள் கலைமதி. "ஏய், கலை இங்க என்னை பாரேன். இப்ப நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. நான் முன்னாடி மாதிரி உன்னை கிஸ் பண்றது இல்லை. கட்டி பிடிக்கிறது இல்லை. அது எதுக்குன்னு உனக்கு குழப்பம். அதனால தான் நீ சரியா படிக்கிறது இல்லையா?", என்று கேட்டான் சூர்யா.

"ஆமா", என்று சொல்லாமல் அமைதியாக இருந்தாள் கலை. "ஏய் லூசு, இதை என்கிட்ட முன்னாடியே கேட்டுருக்கலாம்ல? இதை நினைச்சு கவலை பட்டுட்டு இருந்தியா? நான் உனக்காக தான் டி உன்னை விட்டு விலகி இருந்தேன்", என்று புன்னகையுடன் கூறினான் சூர்யா.

குழப்பமாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் கலைமதி. "நிஜமா தான் கலை மா. நான் அப்படி எல்லாம் உன்னை சீண்டிட்டு இருந்தா நீ படிக்க மாட்டேன்னு நினைச்சேன். அதனால தான் விலகி இருந்தேன்"

"அப்படின்னு யார் சொன்னா? நீங்க என்கிட்டே பேசாம இருந்தது தான் கஷ்டமா இருந்தது. என்னால படிக்கவே முடியலை. எதனாலன்னு யோசிச்சிட்டே இருந்தேன் தெரியுமா அத்தான்?"

"சாரி கலை. நீ இப்படி யோசிச்சிருப்பன்னு  எனக்கு தெரியாது டா. எனக்கும் உன்னை விட்டு விலகி இருக்குறது கஷ்டமா தான் இருந்தது தெரியுமா?"

"அப்புறம் ஏன் அப்படி இருக்கணும்?"

"அதுவா? நம்ம ரிசப்ஷன் முடிஞ்சு ஒரு நாலு நாள் கழிச்சு நீ ஹால் சோபால உக்காந்து படிச்சிட்டு இருந்த நியாபகம் இருக்கா?"

"ஹ்ம்ம், ஆமா என் ரூம்ல உக்காந்து தான் படிச்சிட்டு இருந்தேன். எதுக்கோ மாமா கூப்பிட்டாங்கன்னு வெளிய வந்தேன். அப்புறம் அங்கேயே உக்காந்து படிச்சிட்டு இருந்தேன். அதை எதுக்கு கேக்குறீங்க?"

"காரணமா தான் கேக்குறேன். அன்னைக்கு நீ அப்பா கிட்ட பேசி முடிச்சு அப்புறம் அவர் அவரோட ரூம்க்கு போன அப்புறம் என்ன நடந்தது?"

நினைத்து பார்த்தவளுக்கு முகம் சிவந்தது. அன்று அவர் எழுந்து போனதும் அமைதியாக படித்து கொண்டிருந்தவள் அருகில் அமர்ந்த சூர்யா, அவளை சீண்ட ஆரம்பித்தான்.

அன்றைய நினைவு இருவருக்கும் வந்தது. படித்து கொண்டிருந்தவள் அவனை பார்த்து சிரித்து விட்டு திரும்பி விட்டாள். ஆனால் அவளுக்கு நெருக்கமாக அமர்ந்த சூர்யாவோ, முதலில் அவள் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டான். பின் ஒவ்வொரு விரலாக நீவி விட்டவன் பின் ஒவ்வொரு விரலுக்கும் முத்த மிட ஆரம்பித்தான். அதில் முற்றிலுமாக கலைமதியின் கவனம் படிப்பில் இருந்து சிதைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.