(Reading time: 34 - 67 minutes)

எல்லாரையும் உள்ளே அழைத்த ஷியாம் சூர்யாவை கை பிடித்து அழைத்து சென்றான். "இவன் தான் அண்ணாவோட பிரண்டா டி? செமையா இருக்கான்ல?", என்று மதியின் காதை கடித்தாள் காவ்யா.

"ஏண்டி, யாரை பாத்தாலும் இந்த டயலாக்கை சொல்ல மறந்துறாதே. அமைதியா வா", என்று அவளை பேச விடாமல் செய்து உள்ளே அழைத்து வந்தாள் கலைமதி.

அனைவரையும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர வைத்து விட்டு எல்லாருக்கும் டீ கொடுத்த ஷியாம் "எனக்கு மட்டும் சமைக்க எதுக்கு வேலைக்காரின்னு வேண்டாம்னு நினைச்சேன் டா. இப்ப தான் நீங்க வந்துடீங்களே? வாட்ச்மேன் கிட்ட சொல்லி நல்ல ஆளை வேலைக்கு வர சொல்லி சொல்லிட்டு வரேன்", என்று வெளியே சென்றான்.

பின் வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு இவர்களிடம் வந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு இரண்டு அறைகளை காட்டி ஓய்வெடுக்க அனுப்பினான்.

அறைக்குள் சென்றவுடன் "இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு அத்தான். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க இருந்து அண்ணா எதுக்கு பாரின்ல போய் கஷ்ட படுறாங்க?", என்று கேட்டாள் கலைமதி.

"அவன் தலை எழுத்து கலை. சொந்த குடும்பத்தை கைக்கு எட்டுற  தூரத்துல வச்சிக்கிட்டு அவங்க கிட்ட இருந்து பிரிஞ்சு இருக்கணும்னா இன்னும் வேதனை தான? அதனால தான் அங்கேயே செட்டில் ஆகிட்டான். சரி உனக்கு இந்த இடம் மட்டும் தான் பிடிச்சிருக்கா?", என்று விஷமமாக கேட்டான் சூர்யா.

"ஆமா, வேற என்ன சொல்லணும்?"

"இந்த குளிர் பிடிக்கலையா கலை?", என்று குலைந்து ஒலித்தது சூர்யாவின் குரல்.

"குளிர் எப்படி பிடிக்கும்? இதுல குளிக்கணும்னு நினைச்சாலே கடுப்பா இருக்கு. ஆனாலும் கேரளா காஷ்மீர்ல இதை விட குளிரா இருக்கும்ல? அங்க எல்லாம் எப்படி தான் இருக்காங்களோ?"

"அவங்களுக்கு பழகிருச்சு கலை. புதுசா வர நமக்கு தான் தாங்கிக்கிறது கஷ்டம். ஆனா நமக்கும் ஒரு வழி இருக்கு குளிரை குறைக்க"

"என்ன வழி அத்தான்?"

"இந்த வழி தான்", என்று சொல்லி கொண்டே அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.

அவன் தோள் வளைவில் முகம் புதைத்தவள் அவன் முதுகில் கை கோர்த்து இறுக்கி கொண்டு "யாரோ படிப்பு முடியுற வரைக்கும் சும்மா இருக்கணும்னு சொன்னாங்க", என்றாள்.

"ஹ்ம்ம் ஆமா, அதுக்காக இங்க வந்து கட்டி பிடிக்க கூடாது, முத்தம் கொடுக்க கூடாதுன்னு இருக்கா என்ன? உன்னை படிக்கும் போது தானே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்? லீவுல எப்படி வேணும்னாலும் தொல்லை செய்யலாம்", என்று சொல்லி கொண்டே அவள் உதட்டை குறுகுறுவென்று பார்த்தான்.

அவன் பார்வையில் முகம் சிவந்தவள் "விடுங்க குளிக்க போகணும்", என்று சொன்னாள்.

"அதுக்குள்ளே குளிச்சு என்ன செய்ய போற? இந்த அம்மாவால இத்தனை நாள் ஒரு முத்தம் கூட கொடுக்கல. இப்ப கொடுத்துக்குறேன் டி", என்று சொல்லி கொண்டே அவன் முகம் நோக்கி குனிந்தவன் அவள் உதடுகளை சிறை செய்தான். அவனுடைய முத்தத்தில் அவளும் அவனுக்குள்ளே தொலைந்து போனாள்.

காவ்யாவை ஒரு அறையில் விட்ட ஷியாமோ, "இந்த ரூம் உங்களுக்கு ஓகே தானே?", என்று கேட்டான்.

"ஓகே இல்லைனா பெரிய மாளிகையை தர போறீங்களா சார்? பாவம் நீங்களே பரம ஏழை. எங்களுக்காக ரொம்ப வேலை வேற செய்யணும்? அதனால எப்படி இருந்தாலும் நான் அட் ஜஸ்ட் பண்ணிக்குவேன்", என்று சொன்னாள் காவ்யா.

"இவ கிண்டல் பண்றாளா?", என்று நினைத்து அவள் முகத்தை பார்த்தான் ஷியாம். அவளோ சீரியாசாக தான் சொல்லி கொண்டிருந்தாள்.

"என்ன ஏழை? என்ன சொல்றீங்க?", என்று கேட்டான் ஷியாம் பிரகாஷ்.

"சாரி, உங்க கஷ்டத்தை நான் நியாபக படுத்திட்டேனா? சாரிங்க. நீங்க ரொம்ப ஏழையாம். நாங்க  கெஸ்ட்டா வந்து தங்கி சாப்பிடுறதுக்கு கூட நீங்க அதிகமா வேலை செய்யணும்.  கவலை படாதீங்க. உங்களுக்கு அதிகமா செலவு வைக்க மாட்டோம். இந்த மாளிகையை பாத்துக்குற வேலை தான பாக்குறீங்க? இங்க சரியா சம்பளம் கொடுத்துருவாங்களா?", என்று கேட்டாள் காவ்யா.

அவள் கேள்வியில்  மனதுக்குள் சிரித்து கொண்டவன் அவளை பார்த்தும் சிரித்த படி "சரியா கொடுத்துருவாங்க.  இந்த ரூம் வசதி இல்லைன்னா வேற ரூம் கொடுக்கலாம்னு தான் கேட்டேன்", என்றான்.

"இந்த ரூமே வசதியா தான் இருக்கு. நான் குளிச்சிட்டு வரேன்", என்று திரும்பினாள்.

"இருங்க, உங்களுக்கு ஹீட்டர் ஆன் பண்ண தெரியுமா? விலகுங்க, நான் சொல்லி தரேன்"

"அதெல்லாம் தெரியும். நீங்க போங்க", என்று புன்னகையுடன்  சொன்ன காவ்யாவை அப்படியே அள்ளி அணைக்க ஆவல் வந்தது ஷியாமுக்கு. அதை மறைத்தவன் "ரெஸ்ட் எடுங்க", என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.