(Reading time: 34 - 67 minutes)

"நானே எங்க போகலாம்னு தான் டா யோசிச்சிட்டு இருந்தேன்"

"அப்புறம் என்ன யோசனை? அதான் நான் வந்துட்டேன்ல மச்சான்? நீ இங்க வா"

"சரி டா. நீ உன் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்புறம் சொல்லு. நான் இங்க இருந்து கிளம்புறேன்"

"சூப்பர் டா. வர மாட்டேன்னு சொல்லுவியோன்னு நினைச்சேன். உங்கள் வருகைக்காக ஊட்டியும், உன் நண்பன் ஷியாமும் காத்து கொண்டிருப்போம்", என்று சிரித்து கொண்டே போனை வைத்த ஷியாமுக்கு காவ்யாவின் நினைப்பு வந்தது.

"இந்த தடவை மதி இங்க வரும் போது, காவ்யா பத்தின டீடெயில்ஸ் கேக்கணும்", என்று நினைத்து கொண்டான்.

அங்கே "அம்மா அம்மா", என்று கத்தி கொண்டே சென்ற  சூர்யாவோ மங்களம் " என்ன டா?", என்று கேட்டதும் ஷியாம் வர சொன்னதை கூறினான்.

"நல்ல விஷயம் தான் சூர்யா. போய்ட்டு வாங்க", என்றாள் மங்களம். சூர்யாவின் அப்பாவும் அதையே தான் கூறினார்.

"நாங்க மட்டுமா? அவன் உங்களையும் தான் கூப்பிட்டான். நீங்க ரெண்டு பேரும் வாங்க", என்றான் சூர்யா.

"நாங்க வரலை. ஊர்ல வயல் வேலை இருக்கு. அதை பாக்கணும் பா. எத்தனை நாள் தான்  அடுத்தவங்களையே பாக்க சொல்ல முடியும்? மதியை தனியா விட்டுட்டு எப்படி போகன்னு தான் யோசிச்சோம். நீங்க அங்க பத்து பதினஞ்சு நாள் இருந்துட்டு வந்தா, நானும் உன் அப்பாவும் வயலை பாத்துட்டு வருவோம்"

"ஹ்ம்ம் சரி மா. நான் கலை கிட்ட சொல்றேன்", என்று அறைக்கு போனான். அங்கே அவனுடைய போனை எடுத்து யாருக்கோ பேசிக்கொண்டிருந்தாள் கலைமதி.

"எனக்கும் தான் டி. சரி போர்", என்று கலை பேசியதில் இருந்தே அவள் காவ்யாவிடம் தான் பேசுகிறாள் என்று புரிந்து கொண்ட சூர்யாவுக்கு காவ்யாவையும் அழைத்து செல்லலாம் என்ற எண்ணம் உதித்தது.

மதி எதிர்பார்க்காத நேரம் போனை பிடுங்கி தன் காதில் வைத்து கொண்டான். "உன்னோட செல்ல அத்தான் இருந்துமா போர் அடிக்குன்னு சொல்ற? அண்ணா தான் எதாவது குரங்கு சேட்டை செஞ்சு உன் பின்னாடியே வால் பிடிச்சிட்டு திரியுவாங்களே", என்று அந்த பக்கம் பேசிக்கொண்டிருந்தாள் காவ்யா.

"அப்ப என்னை குரங்குன்னு சொல்லாம சொல்ற?  அப்படி தான காவ்யா? ஆனா உனக்கு தான் நீளமான வால் வளந்திருக்குன்னு எங்க எல்லாருக்குமே உண்மை தெரியுமே", என்று சிரித்தான் சூர்யா.

அவன் குரலில் அதிர்ச்சியில் விழித்தவள் "ஐயையோ அண்ணா நீங்களா? இதெல்லாம் டூ மச். நாங்க சீக்ரட்டா பேசிட்டு இருக்கும் போது இப்படியெல்லாம்  இப்படி போனை பிடுங்குனா எப்படி?", என்று கேட்டாள். அவன் சிரித்ததிலே அவளுடைய பயம் அவளை விட்டு விலகி சென்றிருந்தது. மதியும் அவர்களின் உரையாடலை சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தாள்.

"திடிர்னு போனை பிடுங்கியதுனால தான நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சது. நான் குரங்கு சேட்டை செய்றேனா? செய்றதெல்லாம் நீ தான்னு உன் அப்பா அடிக்கடி சொல்லிட்டு இருக்காரு", என்றான் சூர்யா.

"எங்க வீட்டுக்கு ஒரு காபி குடிக்க தான் அடிக்கடி வாறீங்கன்னு நினைச்சேன். இப்ப தான தெரியுது, என்னை பத்தி புறணி பேசன்னு", என்று சிரித்தாள் காவ்யா.

"ஆமா, இவ பெரிய அப்பா டக்கரு. இவளை பத்தி புறணி பேசிட்டாலும். சரி சரி லீவ் எப்படி போகுது காவ்யா?"

"மொக்கையா போகுது அண்ணா. காலேஜ் வந்தாலாவது, நம்ம மதி வாயை கிளறி உங்க சேட்டையெல்லாம் கேட்டு நேரம் போகும். எங்க எல்லா மேடமும் பாடம் நடத்தியே எங்களை தூங்க வைப்பாங்க. இல்லைன்னா படிக்கிற சாக்குல  புக்கை  தூக்குனா தூக்கம் அப்படியே சொக்கும். இப்ப நேரமும் போக மாட்டிக்கு. தூக்கமும் வர மாட்டிக்கு"

"வாலு, சரி, உனக்கு நேரம் போக ஒரு ஐடியா சொல்லவா?"

"சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே", என்று சிரித்தாள் காவ்யா.

"நீ அடங்கவே மாட்ட. சரி நானும் கலையும்  ஊட்டி போறோம். நீ வரியா?"

"என்ன விளையாடுறீங்களா? ஹனிமூன் போற கப்புள்ஸ் கூட நான் எல்லாம் கரடியா வர மாட்டேன் பா"

"நீ கரடின்னு சொன்னது சரி தான். ஆனா நாங்க இப்ப ஹனிமூன் போகல. ஹனிமூன் எல்லாம் என் பொண்டாட்டி படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் தான். இப்ப உன்னால ஒரு காரியமும் ஆக வேண்டி இருக்கு. அதனால நீயும் வர"

"அதானே பாத்தேன். காரியத்தோடு தான் கூப்பிட்டிங்களா?"

"சே சே அப்படி எல்லாம் இல்லை மா. மதி கிட்ட நீ போர் அடிக்குனு சொல்லிட்டு இருந்ததை கேட்டேன். அப்ப தான் உன்னையும் கூட்டிட்டு போகலாமான்னு யோசிச்சேன். அப்புறம் தான் அந்த ஐடியாவே தோணுச்சு"

"நான் சும்மா தான் சொன்னேன் அண்ணா. இவ்வளவு விளக்கம் தேவை இல்லை. சரி என்ன காரியம்?"

"நாம இப்ப என்னோட பிரண்ட் வீட்டுக்கு தான் போறோம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.