(Reading time: 10 - 19 minutes)

“அவங்க கால்???”

“ம்ம் ஆமாடா போலியோ அட்டாக் அவ பொறந்து செவன் மந்த்ஸா இருக்கும் போதாம்..ரொம்ப வில் பவர் ஜாஸ்திடா.பாவம் கஷ்டப்பட்ட பேமிலி வேற சோ பெருசா ட்ரீட்மெண்ட்க்கு வழியில்ல..அவளே படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டானு அண்ணா சொல்லுவான்..”

“ஓ..”

“சரி டா நா வரேன் ஆல் ரெடி லேட் நீ போய் சாப்டு”

அதன்பின் இரவு உணவை முடித்து தீவிர யோசனையில் இருந்தவன் முகப் புத்தகத்தை திறந்து சாருவிற்கு மெசெஜ் அனுப்பினான்..

“ஹாய்”

“என்ன பக்கி”

“இன்னைக்கு ஒரு பொண்ணை பாத்தேன்..”

“உனக்கு எல்லாம் வாழ்க்கைல வேற வேலையே இல்லையா??”

“ஏய் எருமை மாடு அது இல்ல.இது வேற..”

“என்ன வேற?பொண்ணுங்கள தவர பேசுறதுக்கு வேற விஷயமே இருக்காதே உனக்கு என்ன எவகிட்ட என்ன மொக்க போட்டு வந்த”

“அடச்சை உன்கிட்ட போய் சொல்ல வந்தேன் பாரு..பே..”

“சரி என்ன சொல்லி தொல..”

“அவ பேரு திஷானி”

“ம்ம்”

“மான்ட்டஸரி ஸ்கூல்ல டீச்சரா இருக்கா”

“அங்க உனக்கென்ன வேல??”

“ஏய் லூசு”

“சரி சரி சொல்லு..”

“அந்த பொண்ணை பாத்தவுடனே ஒரு டிபரண்ட் பீல்..கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது..”

“டேய் என்னடா டிபன் சாப்பிடலாம்னு தோணுதுங்கிற மாதிரி சொல்ற??”

“இல்லை டீ நிஜமாவே தான்..நா தான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல கல்யாணம் பண்ணா கண்டிப்பா கஷ்டப்பட்ட பேமிலி பேக்ரவுண்ட் பொண்ணுதான் பாப்பேன்னு..இவளும் அப்படிதானாம்..அதுமட்டுமில்லாம போலியா அட்டாக்ல அவ கால்..”

“அபி!!!!!”

“ஆமா டா கண்டிப்பா இரக்கம்லா இல்ல..அவளை பர்ஸ்ட் பாத்தப்போ அப்படி ஒரு குறையே தெரில..அத்தனை கான்பிடன்ஸ் அவ முகத்துல..அது பிடிச்சுருக்கு..”

“அம்மா அப்பா என்ன சொல்லுவாங்க?!”

“தெரில..பட் கன்வின்ஸ் பண்ணிருவேன்னு நம்பிக்கை இருக்கு..”

“ம்ம் ஆனா நல்லா யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது..விளையாட்டுதனத்தை இதுல காட்டாதீங்க..நாளைக்கு எந்த ஒரு சூழ்நிலைலயும் அவ பீல் பண்ணிட கூடாது..”

“புரியுது டா..யோசிக்குறேன்.ஆனாலும் முடிவுல மாற்றம் இருக்கும்னு தோணல மானிங் அம்மாகிட்ட பேசலாம்னு இருக்கேன்..”

“காட் ப்ளஸ் டா பக்கி...வாழ்த்துக்கள்..ரியலி வெரி ஹாப்பி பார் யூ..சீக்கிரமே நல்ல நியூஸ் சொல்லுங்க..”

“தேங்க்ஸ்டா..பரவால்ல அப்பப்போ நா உன்னைவிட பெரியவன்னு மரியாதை குடுக்குறியே..இருந்தாலும் உன்னை கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது மிஸ் ஆய்டுச்சே..”

“ஆரம்பிக்காத ராசா போ போய் பொழப்ப பாரு..நல்ல வேளை நா தப்பிச்சேன்..சரி எல்லாம் கன்பார்ம் ஆனவுடனே எனக்கு அவங்க போட்டோ அனுப்புங்க..”

“ம்ம் அதெல்லாம் எனக்கு மட்டும்தான்..உனக்கெதுக்கு??”

“ச்சீ..பே..நல்லா இருந்தா சரி..பை..”

வணக்கம் ப்ரெண்ட்ஸ்..அன்பின் அழகு எப்படியிருக்கு..இனிமே நாம இவங்க ரெண்டு பேரோட தான் ட்ராவல் பண்ண போறோம்..நிறை குறைகள் கருத்துக்கள் அத்தனையையும் எதிர்பர்த்து காத்திருக்கிறேன்.. smilesmile

தொடரும்...

Episode # 02

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.