(Reading time: 10 - 19 minutes)

“ஜிம்னாஸ்டிக் செய்ய இது உதவும் என கேள்விப்டேன்” என சீனாவும்

“தெரியல . . நோ ஐடியா ஆனா கத்துகணும்” என ஓர் அமெரிக்க சுட்டிப் பெண் உதட்டை பிதுக்கி தோளை குலுக்கியபடி பதில் அளித்தது.

மற்ற குழந்தைகள் பதில் சொல்ல கொஞ்சம் யோசித்து குழம்ப புன்கையோடு சாரு அவர்களை விட்டுவிட்டாள். குழந்தைகள் தான் சொல்வது சரியா தவறா என சிந்திக்காமல் மனதில் உள்ளதை மறைக்காமல் கூறின.

இந்த உரையாடல் முடிந்ததும் சாரு “ பரதநாட்டியம் நம் உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும். நடன அசைவுகளினால் உடலுக்கு சீராக இரத்தம் பாயும். மனதை ஒருங்கிணைத்து கவனமுடன் நடனம் ஆடுவதால் மனம் வலிமை பெறும். அதனோடு கவனச் சிதறல் விலகும். உடல் எடை கட்டுக் கோப்பாக இருக்கும்” என சாரு நடனம் ஆடுவதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி அக்குழந்தையின் வயதிற்கு ஏற்ப எளிமையாக ஆங்கிலத்தில் கூறி முடித்தாள்.

“நடனத்தின் முதல் படி அனைவரையும் வணங்குதல்” அழகாக அபிநயத்துடன் வணங்குதலை ஆடி காட்டினாள். “முதலில் குரு, கடவுள், இசைகலைஞர், மேடை மற்றும் பார்வையாளர்கள் என  முதல் வணக்கத்தை செலுத்த வேண்டும்.”

ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் செலுத்தினாள். குழந்தைகளும் மெல்ல மெல்ல பழக ஆரம்பித்தன. புதிய விஷயத்தை கற்றுக் கொண்ட ஆர்வம் ஆசை அவர்கள் முகத்தில் தெளிவாக தெரிந்தது.

குழந்தைகள் வகுப்பு முடிந்தது. அமெரிக்க பெண் குழந்தை “நான் ஒரு கேள்வி கேட்கலாமா?”  என தயக்கமாக கேட்டது

கேள் என்ற ஜாடை செய்த சாருவிடம் “நடராஜா ஆடுவதுதானே காஸ்மிக் டான்ஸ் என சொல்லப்படுவது அதாவது அணுகள் (ATOM)  பற்றி . .?”

“ஆமா . .  அணுவியல் துகள்கள் நகரும் அமைப்பின் சூட்சுமம் அடங்கியுள்ளது” என்றாள் சாரு

“கிரேட்” என குழந்தை பிரமிக்க

“இதை திருமூலர் திருமந்திரத்துல சொல்லி இருக்கார்”

“ஓஹோ திருமூலர் . .” என மீண்டும் ஒரு முறை அப்பெயரை சொல்லி பார்த்தது அக்குழந்தை. “CERN அணுஆராய்ச்சி தலைமையகத்தில்  நடராஜர் சிலை இருக்கு . . நான் சொல்வது சரியா?” என கேட்ட குழந்தையிடம்

“உனக்கு எப்படி இது தெரியும்?” சாரு கேட்டாள்

“என் அம்மா அணுகள் பற்றிய ஆராய்ச்சியாளர் . . என் வீட்லயும் இதே மாதிரி நடராஜர் சிலை இருக்கு ஆனா இவ்ளோ பெரிசா இல்ல சின்னது” என தன் குரலில் ஏற்ற இரக்கத்துடன் குழந்தை கூறி முடித்தது. இதைக் கேட்க பெருமையாக இருந்தது சாருவிற்கு.

குப்பு முடிந்து குழந்தைகள் சென்றுவிட்டன.

“ஆமவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிரம் ஆயினால்

ஆவியின் கூறுநா றாராயிரத்து ஒன்றே” - திருமூலர் திருமந்திரம்

“பசுவின் முடியில் ஒன்றை எடுத்து அதை நூறாக கூறிட்டு. பின்பு அவற்றில் ஒன்றை ஆயிரமாய் பிரித்தால் பின்பு அதில் ஒன்றை நூறு ஆயிரமாய் பிரித்தால் ஒரு அணுவடிவம் கிடைக்கும்.” என்ற திருமூலர் வாக்கு சாருவின் மனதில் ஓடியது.

வகுப்பு முடிந்தாலும்  சாரு மனம் மட்டும் திருமூலரையே சுற்றிக் கொண்டிருந்தது. நம் முன்னோர்கள் அறிவியலை எவ்வளவு எளிமையாக உலகிற்கு வழங்கியுள்ளனர். இப்படி என்னமிட்டவள் மனதை காஞ்சனா குரல் திசை திருப்பியது.

“இன்னிக்கு இவ்னிங் உனக்கு எதாவது முக்கியமான வேல இருக்கா?” காஞ்சனா கேட்க

“இல்லை” என தலையசைத்தாள். அடுத்த வகுப்புக்கு தயாராகிக் கொண்டே

“ஆறு மணிக்கு லலிதா வீட்ல பார்ட்டி இருக்கு போலாமா?”

“லலிதாவா அது யாரு?”

“உனக்கு மறதி அதிகமாயிடுச்சி சாரு. லாஸ்ட் வீக் மால்ல பாத்தோமே” என  சொன்னார் காஞ்சனா

சற்றே யோசித்தவள் “ஆமா பாத்தோம்?”

“இன்னிக்கு இவ்னிங் அவங்க வெட்டிங் ஆனிவர்சரி பார்ட்டி. அதான் போலாமானு கேட்டேன்”

“எனக்கு அவங்கள அவ்வளவா தெரியாது . . அப்புறம் எப்படி நான் அங்க?”

“சாரு நீ ஒரு கூட்டுக்குள்ள முடங்கி கிடக்காத . .வெளிய வா . . ”

“எதையும் மறக்க முடியல” மனம் புலம்பியது அதை வெளிக்காட்டாமல் “சொல்ல மறந்துடேன் சூர்யாவோட பிராக்டிஸ் இருக்கு” நழுவ பார்த்தாள்

காஞ்சனா “நானே ஆறரை மணிக்கு உன்ன பிக்அப் பண்ண வரேன் ரெடியா இரு . . தட்ஸ் மை ஆர்டர்”

“நான் வர்ல மேம் ப்ளீஸ்”

“நோ வே . . நீ வந்தே ஆகணும்” கட்டளை பிறந்தது காஞ்சனாவிடமிருந்து.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.