(Reading time: 10 - 19 minutes)

ரவு ஏழு மணி லலிதா வீடு . . பார்ட்டியில் யார் யாரோ ஒருவரையும் சாருவிற்கு தெரியவில்லை அறிமுகமில்லை. வேற்று கிரகத்தில் இருப்பதை போன்ற ஒர் உணர்வு. சாரு யாரிடமும் அதிகம் பழகியதில்லை. அவள் மன வேதனை வலி போன்றவையால் மனிதர்களிடம் இருந்து சற்று விலகியே இருப்பாள். தனிமைதான் அவளுக்கு துணை. அது அவளை என்றும் காயப்படுத்தியது இல்லை.  

அவளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தவர்கள் காஞ்சனாவும் சூர்யாவும்தான். மற்ற பெண்களை போல் அவளுக்கும் ஆசைகள் கனவுகள் இருந்தது. அவை செடியாக இருந்த போதே பிடுங்கி எரிந்தது இந்த சமூகம்.

காஞ்சனா சாருவுடன் இணைந்து லலிதா மற்றும் ராகவ் தம்பதிகளை வாழ்த்தினாள். பின்பு மற்ற நண்பர்களோடு காஞ்சனா பேச ஆரம்பித்துவிட்டார். சாரு தன் போனை நோண்ட ஆரம்பித்துவிட்டாள். எத்தனை நேரம்தான் புரியாத மற்றவர் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பது.

“ஹாய் டான்ஸ் குயின்“ என பலத்த சிரிப்போடு காஞ்சனாவை அணுகினான் ஆகாஷ்.

காஞ்சனா “இது ஆகாஷ்  . . லலிதாவோட தம்பி . . டெக்சாஸ்ல இருக்கான். . ” என சாருவிடம் அறிமுகப்படுத்தினாள்.

சாரு ஆகாஷ் அரை சென்டிமீட்டர் புன்னகையோடு “ஹாயை” பரிமாறிக் கொண்டனர்.

ஆகாஷ்  இந்தியாவில் இருந்து வந்திருக்கும் தன் தந்தை ராமமூர்த்தி மற்றும் தாய் பத்மாவதியை அறிமுகப்படுத்தினான்.

“என்ன பேச்சுலர் எப்ப கல்யாணம்?” என ஒருவர் கேட்க

“எந்த பொண்ண பாத்தாலும் மூக்கு சரியில்ல நாக்கு சரியில்லனு சொன்னா என்ன பண்றது? என அவன் அம்மா பத்மா அலுத்துக் கொண்டார்.

“அவன் லவ் பண்றானு அர்த்தம்” என ஒருவர் குரல் கொடுக்க அனைவரும் சிரித்தனர் . . ஆகாஷ் “நாட் எட்” என்றான். மற்றவர் அதை ஏற்க மறுத்தனர். அந்த இடமே கிண்டல் கலாட்டாவுடன் சிரிப்பொலியில் முழ்கியது.

“என் அம்மா எந்த பொண்ண பாத்து தாலி கட்டுனு சொல்றாங்களோ அவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னோடது 100% ப்யூர் அரேஞ்சிடு மேரேஜ். எனக்கு இந்த லவ்வெல்லாம் செட் ஆகாது” என ஆகாஷ் தன் அம்மா பத்மாவதி தோளில் கைப்போட்டு பேசினான்.

“இந்த தடவை கல்யாணத்த முடிக்காம இந்தியா போக மாட்டேன்” பத்மாவதி  கூற

“இது நீ ஆர்கியூ செய்ற கோர்ட் இல்ல மகனே பொய் சொல்லி மாட்டிகாத. இங்க உன் அம்மாதான் ஜட்ஜ்” என அவன் அப்பா சொல்ல

“நோ டேட் ஐ ம் சீரியஸ்” என முகத்தை சிரிக்காமல் சீரியசாக வைத்துக் கொள்ள முயற்சித்தான்.

பட்டும்படாமல் சாரு கவனித்துக் கொண்டிருந்தாள். வேறுவழியும் இல்லை.

டின்னர் பப்பே தான் என்றாலும் சாரு தயக்கமாக உணர்ந்தாள் தட்டில் கொஞ்சமாக போட்டு கொறித்துக் கொண்டிருந்தாள். இதை கவனித்த பத்மாவதி அவளை தன்னோடு அமர்த்திக் கொண்டு பரிமாறினார். “போதும்மா” என சாரு எத்தனை சொல்லியும் விடவில்லை. “நல்லா சாப்பிடுமா . . நீ டான்சரா? பரதநாட்டியமா?” என பல கேள்விகளை கேட்டார்.

சாருவும் பதில் சொல்லியபடி அவர் பரிமாறியதை சாப்பிட முடியாமல் திணறினாள். அவள் மனதிற்கு இதமாக உணர்ந்தாள்.

“எங்க அம்மா கையால சாப்ட்டா சீக்கிரமே குண்டாயிடுவிங்க . . அப்புறம் டான்ஸ் ஆடறது கஷ்டம்” என சாருவை ஆகாஷ் சீண்டினான். அத்தனை அறிமுகம் இல்லை என்றாலும் சாருவிடம் ஆகாஷ் சகஜமாய் பழகினான்.

“சும்மா இருடா . . ” என  செல்லமாக கடிந்து “நீ சாப்பிடுமா” என அவளை கவனித்துக் கொண்டார். ஆகாஷின் நடவடிக்கைகள் ஒன்றுவிடாமல் சாரு மனதில் பதிவாகியது.

சாருவும் மன இறுக்கம் கடந்து மெல்ல மெல்ல ஆகாஷ் மற்றும் பத்மாவதியுடன் பேச ஆம்பித்தாள்.

சாருவிற்கு பத்மாவிடமிருந்து முற்றிலும் தயக்கம் விலகியது. ஆனால் கோபம் விலகவில்லை.

தொடரும் . .

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.