(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 04 - சகி

Nenchil thunivirunthaal

ல நாள் காத்திருப்பு ஓர் நாள் கரம் சேரும் போது கிடைக்கப்பெறும் நிம்மதியானது அகிலத்தில் ஈடு இணையற்றது.அந்தக் காத்திருப்பை தவம் என்பார்கள்.தாயோ தன் சிசுவை காண காத்திருக்கிறாள்.தந்தை,தன் பிள்ளையின் வளர்ச்சியை காண காத்திருக்கிறார்.குருவோ சீடனின் புகழை அகிலம் போற்ற காத்திருக்கிறார்.பக்தனோ இறைவனின் முகம் நோக்க காத்திருக்கிறான்.தவசி முக்திக்கும்,மழலை தாய்மடிக்கும்,மனிதன் நிம்மதிக்கும்,மனிதம் நீதிக்கும்,மன்னன் புகழுக்கும்,மண் மனிதனுக்கும்,ஞானம் தர்மத்திற்கும்,ஞாலம் அமைதிக்கும்,இறைவனோ கிட்டிய அரிய வாய்ப்புகளை மனிதன் தவறவிடுகையில் ஆற்றிய பாவங்களை தண்டிக்கும் மாபெரும் சந்தர்பத்தை எதிர்நோக்கியும் காத்திருக்கின்றனர்.சந்தர்பம் நோக்கி ஏன் காத்திருக்க வேண்டும்??தவறுக்கான தண்டனை என்பது எளிதில் கிட்டும்!பாவத்திற்கான தண்டனை???சந்தித்து பாருங்கள்...தவறும் பாபமும் ஒன்றா?வெவ்வேறா??நல்லோர்களின் சாபம்,விரக்தி,கண்ணீர்,சினம் இவையனைத்தும் நிச்சயம் அநீதிக்கு எதிரான தண்டனை வழங்க இறைவனைக்கு அவசியம்!!அவன் அடங்கும்,அவன் அஞ்சும்,அவனை அடக்கும் ஒரே ஆயுதம் சுயநலமற்ற கண்ணீர் அல்லவா!!!நல்லவர் ஒருவர் கண்கலங்கும் சமயத்தில் இறைவனே குற்றவாளியாகிறான்.ஆம்...!அச்சமயம் நீதி வழங்க அவனுக்கு எத்தகுதியும் இராது!அவ்விடத்தில் நீதியை பாதிக்கப்பட்ட ஆன்மாவே வழங்கும்!குற்றவாளிக்கும்,தவறிழைத்தோருக்கும் சேர்த்தே அந்த ஆன்மா நீதி வழங்கும்!கர்மத்தின் பிடியிலிருந்து எவரும் தப்ப இயலாது!!நினைவில் நிறுத்துங்கள்...நல்லோரின் துயர் துடைக்க வல்லான் ஒருவன் உள்ளான்.தவறிழைத்தவன் இராமன் எனினும்,இராவணன் எனினும் தத்தம் தண்டனையை அனுபவித்தல் அவசியம்!!!

"எந்த ஊரு?"

"இராஜசிம்மபுரம்!"உடையானின் கூற்று மனதை நெருடியடி இருந்தது.

தண்டனைக் காலம் நெருங்கியது!!!செய்த தவறுக்கான தண்டனை வழங்க இத்தனை வருடம் காத்திருப்பு!!இனியும் தாமதம் இல்லை.நீதிபதி உருவாகினானே!!!தர்மாவின் விழிகளுக்குள் இரத்த நாளங்கள் புடைத்திருந்தன.பல ஆண்டுகளுக்கு முன் இழைக்கப்பட்ட துரோகம்,களங்கமற்ற ஆன்மாவை குற்றவாளியாய் நிறுத்தி தன் கைகளை கட்டியதை மறக்க இயலுமா????நிச்சயம் இயலாது...!!!

ஆனால்,நடக்க போகும் யுத்தத்தில் என் புதல்வன் எனை நீங்கினால்???கதி கலங்கி போயிற்று!!அவ்வெண்ணம் என்றுமில்லாத கிலியை அவருள் விதைத்தது.

"என்ன செய்வாய்?"என்ற மனதிற்கு அழுத்தமாய் புத்தி உரைத்தது,

"இது குறித்து நான் சிந்திக்கக்கூட விரும்பவில்லை!"என்று!!எண்ணங்கள் முழுதும் புதல்வனிடமே நிலைத்திருக்க,அவர் சிந்தையை கலைத்தது ஆருயிர் மகனின் குரல்!!

"மீ!"

"என்னடா?"

"எங்கே இருக்கீங்க மீ?"சுற்றி சுற்றி தேடினான்.

"ம்...இதுக்கு தான் கண்ணை செக் பண்ணுன்னு சொல்றது!"-நக்கலாக கூறிய மொழியினில் தாயை அறிந்தவன்,

"இங்கே தான் இருக்கீங்களா?"என்று இடையில் இருந்த சோபாவை எகிறி தாண்டி வந்து அவர் அருகே அமர்ந்தான்.

"என்னடா?"

"உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கேன்!"

"என்ன?எதாவது சண்டை இழுத்துட்டு வந்திருக்கியா?"

"ஐயோ!எங்க அம்மா எவ்வளவு பிரைட்டு!ஆனா அது இல்லை விஷயம்!"

"வேற என்ன?"

"டொன்டொடைன்!"என்று சிறு நகை பெட்டியை காண்பித்தான்.

"என்ன இது?"

"பிரித்து பாருங்க மீ!"-தர்மா அதை வாங்கி பிரிக்க,அதில் ஔிர்ந்தது இரு தங்க வளைகள்!!

"என்னடா இது?"

"வளையல் மீ!இன்னிக்கு என் ஃப்ரண்ட் ஒருத்தனை பார்த்தேன்.அவன் பெரிய ஜூவல் டிசைனர்!அவன் வைத்திருந்த நோட்டுல சில டிசைன் பார்த்தேன்.இந்த டிசைன் பார்த்த உடனே பிடித்துப்போச்சு!விடுவானா உங்கப்புள்ள,உடனே இதே டிசைன்ல செய்து கொடுய்யான்னு இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்து,இதோ இன்னிக்கு வாங்கிட்டு வந்துட்டான்ல!"-அவன் கூறிய தொனி அவரை கவலை மறந்து சிரிக்க வைத்தது.

"எனக்கு எதுக்குடா இதெல்லாம்?இருக்கிறது எல்லாம் போதாதா?"

"மீ!இன்னிக்கு உடையான்னு ஒருத்தன் இருக்கான்னா அதுக்கு காரணமே நீங்க தானே!என்னை பெற்ற தெய்வத்தை நான் எப்படி வேணும்னாலும் அலங்காரம் பண்ணி பார்ப்பேன்!"கண்கள் பெருமிதத்தில் துளிர்க்க தான் செய்தன அவன் மொழிகளால்..!இல்லாமல் போகுமா எந்த ஒரு தாயும் தன் பிறவி நிலை அடையும் தருணத்தை இதுபோன்ற மொழிகள் அல்லவா அங்கீகரிக்கின்றன.

'இத்தனை ஆண்டுகளாய் நான் மேற்கொண்ட தவ வாழ்விற்கான,என் இறைவனை நான் வணங்கியதன் பலனாக கிடைத்த செல்வம் இவன்!'மனம் உரைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.