(Reading time: 9 - 18 minutes)

அவனோ தாயின் விழிகள் துளிர்த்த பெருமித கண்ணீரை கூட உணர்ந்து கர்வம் கொள்ளாமல் அந்த வளைகளை தர்மாவின் கரத்தில் தவற வைக்க வேண்டும் என்னும் எண்ணத்திலே நிலைத்திருந்தான்.

"ஐயோ!செம அழகா இருக்கு மீ!"நெட்டி முறித்தான் உடையான்.

"பார்த்திபா!"

"ம்??"

"ஊருக்கு எப்போ கிளம்புறோம்?"-அவரது கேள்வி அவனை ஆச்சரியத்தில் தள்ளியது.

"நீங்க எப்போ சொன்னாலும் கிளம்பலாம்!நீங்க சொல்லணும்னு தான் வெயிட் பண்றேன்!"

"வர வியாழக்கிழமை காலையில கிளம்பலாம்!"

"சரி மீ!நான் சொல்லிடுறேன்.இப்போ நான் போய் கிச்சன்ல ஸ்நாக்ஸ் இருக்கான்னு தேடி சாப்பிட போறேன்.உங்களுக்கு எதாவது வேணுமா?"தர்மாவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

"உனக்கு பிடித்த காலிப்ளவர் பக்கோடா பண்ணி இருக்கேன் பாரு!போய் சாப்பிடு!"

"செம!மா!சீக்கிரம் வாங்க!இல்லை நானே சாப்பிட்டுவிடுவேன்!"-கூவிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான் அவன்.

விளையாட்டு பிள்ளை இவன்.எவ்வளவு வளர்ந்தாலும் மாறவில்லை.மனம் பூரித்தது அத்தாய்க்கு!!

னதறையில் தன் கரங்கள் கொண்டு தீட்டப்பட்ட அந்த ஓவியத்திலே தன் பார்வையை நிலைபெற செய்தாள் மாயா.அன்று கனவில் உருவான பந்தம்!இன்று உயிர்வரை ஊறி கிளர்ச்சியூட்டுகிறது!உயிரற்ற உடலாய் விழி திறவாத ஓவியம் அது!எவ்வளவு முயன்றும் அதற்கான விழிகளை வரைய இயலவில்லை என்பதும் சோகம் தான்.இருப்பினும் இந்த ஓவியத்திற்குரியவன் எங்கோ உள்ளான் என மனமோ ஆழமாய் நம்பியது!!அன்று சொப்பனத்தில் நிழலாடிய பிம்பம்,யாரவன்?எங்கிருக்கிறான்??அவள் மனம் மென்மையானது!எவருக்கும் தீங்கிழைக்காத பவித்ர மனம் கொண்டவள்!யாரையும் இந்நாள்வரை காயம் செய்ததில்லை.பிறர் செய்யும் தவறுக்கு இவள் கண்ணீர் வடிப்பாள்.இவள் லோகத்தில் தண்டனை என்று ஒன்று இல்லை,மன்னிப்பு மட்டும் தான்!இதுபோன்ற மென்மையான இதயம் கொண்டவளை வாட்டும் நோயின் உரிமையாளனான அந்த கொடுங்கோலன் தான் யார்?தெரியவில்லையே...!!!

"அக்கா!"தன் தங்கையின் உரத்த குரலில் கலைந்தவள் அந்த ஓவியத்தை ஒரு திரைச்சீலையால் மூடினாள்.

"என்ன?"

"அம்மா கூப்பிடுறாங்கக்கா!"கூற மறந்தேனா தன் அதுவரை வாழ்ந்த இடம்விட்டு சகோதரிகள் இருவரும் தாயகம் வந்து சில தினங்கள் ஆகிவிட்டன!!

"வரேன்!"என்று எழுந்து சென்றாள் மாயா.தாயானவளோ பரபரப்புடனே எப்போதும் காணப்பட்டாள்.

"சொல்லுங்கம்மா!கூப்பிட்டீங்களா?"

"ஆமா மாயா!நீயும் உன் தங்கச்சியம் சனிக்கிழமை ஊருக்கு கிளம்பணும்!"

"எங்கே?"

"இராஜசிம்மபுரம்!"அவள் முகம் வாடியது.

"கொஞ்ச நாள் இருக்கேன்மா!"புதல்விக்கோ இல்லத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்!தாயோ பரபரப்புடன் அவள் வாழ்வை விரைவில் ஸ்திரமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம்!புரியவில்லையா?புரியும்!!!பொறுத்திருங்கள்....

"சொன்னா கேளு மாயா!வீட்டுல தனியா இருக்கீங்க?நானும் பிசினஸை பார்த்துக்க அடிக்கடி போயிடுறேன்!"ஏதோ கோப்பையை ஆராய்ந்தப்படி கூறினார் சத்யா.

"ஆனா மா!அங்கே யார் இருக்கா?"

"ம்...உன் மாமியார்!"-கேட்டதும் தூக்கிவாரி போட்டது மாயாவிற்கு!!

"மா?"

"எல்லாம் நைட் வந்து பேசுறேன்!எனக்கு நேரமாயிடுச்சு!"அவசர அவசரமாக கிளம்பினார் சத்யா.

"அக்கா!அம்மா போற போக்கே சரியில்லைக்கா!"புன்னகைத்துவிட்டு சென்றாள் இளையவள்.

"ஏன் இப்படி செய்கிறார்கள்?"மனம் வலித்தது அவளுக்கு!!!ஏதேதோ சிந்தித்தவண்ணம் தோட்டத்திற்கு வந்தாள் அவள்.கண்களை பறிக்கும் சூரிய பிம்பம் அவளது கவனத்தையும் பறித்தது.சிறு வயது முதல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த வாழ்வையே பெரிதும் போற்றிய காரிகை அவள்!!!குறிப்பாக ஆதித்யன் என்றால் இவளுக்கு கொள்ளை பிரியம் எனலாம்!சூரிய நாராயணரின் பிரகாசம் மங்கும் திறனை கணக்கில் கொண்டே தான் எக்காரியமும் புரிவாள்.அன்று அவள் வாடிய முகம் கண்டு ஆதவனும் சற்று சலனம் கொண்டிருக்கலாம்.

"எனக்கு ஊருக்கு போறதில் விருப்பமே இல்லை!!"என்றாள் கவலையுடன்!!அவள் எழில் முகம் நிலம் நோக்கியது.அன்றைய வானிலை காரணமாகவோ அல்லது அவள் துயர் துடைக்கவோ வானம் சில்லென்ற மழைத்தூரல்களை மண்ணுக்கு அனுப்பியது.சட்டென ஒரு குளிர்ச்சி பரவிவிட,தன்னை மறந்தாள் மாயா.அதே சமயம்,அவளை விழி எடுக்காமல் தனது பிரகாசத்தை சற்றும் குறைக்காமல் அவளையே கவனித்து கொண்டிருந்தார் ஆதித்யர்.

நீண்ட நேரமாய் இல்லத்தின் தொலைப்பேசி ஒலித்துக் கொண்டிருந்தும் அதை எவரும் சட்டை செய்வதாய் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.