(Reading time: 14 - 28 minutes)

றுநாள் காலை, எதுவும் நடக்காதது போல், எழுந்தவுடன்  “குட்மார்னிங் உத்ரா” என்றான்.

பதிலுக்கு குட்மார்னிங் கூட சொல்லாமல் எழுந்து குளிக்கச் சென்றாள் உத்ரா. அவள் குளித்து முடித்து வந்து கண்ணாடி முன் நின்று தலை வாரும் பொழுது, பின்னால் இருந்து அவளை அணைத்தான் அபி. அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து , அதனை ரசித்தப்படி, “நானே இப்பொழுது தான் ஒரு தெளிவிற்கு வந்து இருக்கேன் உத்ரா. மனிதர்களை புரிந்து கொள்ளவே நமக்கு சில காலம் ஆகின்றது. இனிமேல், காப்ரிலா என்ற பெயர் நம் வாழ்க்கையில் வராது போதுமா?” என்றான்.

“அப்போ இவ்வளவு நாள் உங்க வாழ்க்கையில் அது இருந்ததா? “

“என்னோட வாழ்க்கையில் எப்பொழுதும் இருந்தது கிடையாது உத்ரா. நம் வாழ்க்கையில் என்று சொன்னேன். இதைப் பற்றி நம் வீட்டிற்கு போன பின் உனக்கு விளக்கிச் சொல்றேன். இப்போ கிளம்பி வெளியே சென்று வரலாம்” என்று கூறி குளிக்கச் சென்றான் அபி.

அவன் சொன்னது எதுவும் புரியாவிட்டாலும், அப்பா, அம்மாவின் முன் எதுவும் வேண்டாம் என்று நினைத்து உத்ராவும் கிளம்பினாள், வெளியே சுற்றிப் பார்க்க.

அன்று முழுவதும் லாச்வேகாசை சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள ஹோட்டல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நகரங்களின் மாதிரிகளாக இருந்தது. பாரிஸ் என்ற ஹோட்டலின் முன்பு பெரிய இஃபிள் டவரின் மாதிரி வடிவமும், வெனிஸ் என்ற ஹோட்டலின் உள்ளே ஒரு நதியே ஓடும் எபெஃக்டில், கால்வாய் அமைத்து, அதில் படகு சவாரியும் இருந்தது.

எம்.ஜி.எம். என்ற ஹோட்டல் தீம் பார்க் ஸ்டைலில் இருந்தது. சர்க்கஸ் என்ற ஹோட்டல் கூடார அமைப்பில் இருந்தது. எல்லா ஹோட்டல்களிலும் தரை தளத்தில் காசினோ இருந்தது.  எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்கவே ஒரு நாள் ஆயிற்று.

எல்லாம் முடித்து தங்கி இருந்த ஹோட்டலுக்கு வரவே இரவாகிவிட்டது. அவரவர் அறைக்கு சென்று டிரஸ் மாத்தி படுக்கையில் விழுந்ததும் அசதியில் கண்களை சொருகியது உத்ராவிற்கு. அந்த தூக்கத்தை கலைப்பது போல் அபிமன்யுவின் போன் அலறியது. சாதாரண நேரமாக இருந்தால்,  இசைத்தது என்று தான் தோன்றும் உத்ராவிற்கு, ஆனால் இப்பொழுது அவளது உறக்கத்தை கலைத்ததால் அது அலறியது போல் தோன்றியது உத்ராவிற்கு.

அபியும், சிறிது நேரத்திற்கு பின் தான் எடுத்தான் போனை. பாவம் அவனுக்கும் அசதியாகத் தானே இருக்கும், என்று நினைத்துக் கொண்டு இருக்கையிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் உத்ரா. கனவில் கூட அந்த காப்ரிலா பற்றி எதோ அபி பேசுவது போலவே இருந்தது உத்ராவிற்கு.

காலையில் கண் விழித்தப் பொழுதே எட்டு மணி ஆகி இருந்தது. அப்பொழுதும் கண்களை முழுவதும் திறக்க முடியாமல் அப்படியே சிறிது நேரம் படுத்திருக்க தோன்றியது. அப்படி படுத்து இருப்பதே ஒரு சுகம் தான். அப்படியே அபியை அணைத்தபடி படுத்தால், இன்னும் சுகமாக இருக்கும் என்று எண்ணியபடி, கண்களை திறக்காமல்  சிறிது அவன் பக்கமாக நகர்ந்து படுத்தாள் உத்ரா. ‘ம்ஹும்... அவன் இல்லை.’ இன்னும் சிறிது நகர்ந்தும் அவனை எட்ட முடியவில்லை.

அப்பொழுது தான் கண்களை திறந்து பார்த்தாள் உத்ரா. படுக்கையிலேயே அவன் இல்லை. எழுந்து அமர்ந்த பொழுது, அருகில் இருந்த போனுக்கு அடியில், அவன் கையெழுத்தில் ஒரு சீட்டு இருந்தது.

“காப்ரிலாவுக்கு உடம்பு சரியில்லை. அவளை நியூயார்க் அழைத்துச் செல்கிறேன். நீங்க மூன்று பேரும் புக் செய்த விமானத்தில் வந்து சேருங்கள்” வேறு ஒன்றும் இல்லை அதில்.

‘சே இந்த காப்ரிலா எப்பொழுது நம் வாழ்க்கையை விட்டு போவாள்’ என்று இருந்தது. பல முறை முயன்றும் அவனை போனில் பிடிக்க முடியவில்லை. அப்பாவிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்றும் ஓடிக் கொண்டு இருந்தது உத்ராவின் மனதில்.

அப்பா, அம்மாவின்  அறைக்கு சென்று, “அபி, ஆபிஸ் வேலையா அவசரமா கிளம்பிட்டார் அப்பா” என்றாள்.

பால்கி கொஞ்சம் சந்தேகமாகப் பார்த்தாலும், “ சரிம்மா, ஆபிஸ் வேலை முக்கியம் தான், நாமும் இன்று இரவே கிளம்பப் போகிறோம் தானே” என்று அவராகவே சமாதானமும் கூறிக் கொண்டார்.

அன்று மதிய உணவிற்க்காக வெளியே சென்ற பொழுது, பெரியப்பா பையன் அர்ஜுனை, அவனது மனைவி சுபா, ஏழு வயது  மகன் கிருஷுடன் பார்த்தார்கள்.

“சித்தப்பா” என்று அழைத்தபடி, வந்து பால்கியை கட்டிக் கொண்டான். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, மதிய உணவை உண்டனர்.

“சித்தப்பா, நாங்கள் லாஸ் ஏஞ்சல்சில் தான் இருக்கிறோம். நீங்க மூன்று பேரும் எங்க வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி தான் செல்ல வேண்டும்.” என்று அன்பாக கேட்கவும், பால்கி உருகிப் போனார்.

“இன்று இரவு விமானத்தில் புக் செய்து இருக்கிறோம் அர்ஜுன். அடுத்த முறை வருகிறோமே” என்றார் பால்கி.

“இவ்வளவு தூரம் எதுக்கு திரும்ப வரணும் சித்தப்பா? இப்பவே வாங்க. உங்களை அங்கிருந்து நான் அனுப்பி வைக்கிறேன்” என்று அர்ஜுன் கூறவும்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.