(Reading time: 14 - 28 minutes)

மிஸ்டர் ஹாரியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் அவள் கேட்கவில்லை. அதனால் அவளை வேலையை விட்டு தூக்கி விட்டு என்னை அந்த ஸி.ஒ.ஒ. போஸ்டில் அமர்த்தினார்.

“வேலையில் இல்லாவிட்டாலும், அடிக்கடி அபிசிற்கும் வந்து செல்வாள். அப்படி ஒரு நாள் வந்த பொழுது தான் எனக்கு ப்ரப்போஸ் செய்தாள். நான் அப்பொழுதே முடியாது என்று சொல்லிவிட்டேன்.”

“ஆனாலும் எனக்கு ஏதாவது பரிசு அனுப்புவது, என் லஞ்ச் வேளையில் என்னுடன் வந்து சாப்பிடுவது என்று எதோ ஒரு வகையில் தொல்லை செய்து கொண்டு தான் இருப்பாள். அதை எல்லாம் முன்பு நான் பெரிதாக எடுத்துக் கொண்டது கிடையாதுடா. “

“ஆனால் நீ, என்னை விரும்பியதை எல்லாம் கதை, கதையாக சொன்ன பொழுது, உன்னைப் போல் தானே அவளும் என்று நினைக்கத் தோன்றியது.” என்று அபி கூறிய பொழுது.....

“என்னது, நானும் அவளும் ஒன்றா உங்களுக்கு?” என கொதித்தாள் உத்ரா.

“கூல்டா. உன்னோட அன்பு போல் தான் அவளது அன்பும் என்று நினைத்து, அவளை நல்லபடியாக, அவள் மனம் நோகாமல், ‘எனக்கு ஏற்கனவே ஒரு தேவதை வீட்டில் இருக்கிறாள், அதனால் உனக்கு இடம் இல்லை ‘ என்று பக்குவமாக சொல்லலாம் என்று நினைத்தேன்.”

“அதனால் அடிக்கடி அவளை சந்தித்து அவள் மனம் நோகாமல் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவள் புரிந்து கொள்ளவே இல்லை.

“அன்று முதல் நாள் லாஸ்வேகாசில் அவளை, அவளது ரூமில் விட்டு திரும்பிய பொழுது, டாக்சியில் அவளது கைப்பை இருந்ததாக அந்த டிரைவர் கொடுத்து சென்றான். அதனை கொடுக்க அவள் ரூமிற்கு சென்ற பொழுது, அவள் வாங்கிய டிரக்ஸ்க்கான பணத்தை கொடுக்கும்படி ஒருத்தன் அவளை மிரட்டிக் கொண்டு இருந்தான்.”

“அவனை முன்பே அவளுடன் பார்த்து இருக்கிறேன். அவளது கெட்ட சகவாசத்தில் அவனும் ஒருத்தன்.  அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், அவளது அப்பா ஹாரி அவளுக்கு பணம் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டதாகவும், ஆனால் என் பெயரில் பத்து பர்சென்ட் ஷேர்ஸ் எழுதி வைத்து இருப்பது தெரிந்ததால், என்னை எப்படியாவது மயக்கி அந்த ஷேர்ஸ்களை அவள் பெயருக்கு வாங்கிக் கொள்ளலாம் என திட்டமிட்டு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருந்தாள்.”

அதை கேட்ட பின்பு தான் எனக்கு புரிந்தது, இவளிடம் எல்லாம் நல்லபடியாக பேச எந்த அவசியமும் இல்லை என்று. அதானால் தான் அன்று உன்னிடம் கூட சொன்னேன் மனிதர்களை புரிந்து கொள்ளவே சிறிது காலம் ஆகின்றது என்று. அவளைப் பற்றி நம் வீட்டிற்கு வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.

ஆனால் மறுநாள் இரவு மிஸ்டர் ஹாரியே போன் செய்து, காப்ரிலா அதிகமாக டிரக்ஸ் எடுத்து ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்றும், அவளை ஜெட் ஆம்புலென்சில் இங்கு அழைத்து வரும்படியும் கூறினார். உன்னிடம் சொல்லலாம் என்று பார்த்தால், அதற்குள் நீ நன்றாக உறங்க ஆரம்பித்து இருந்தாய். சரி, உன் அம்மா, அப்பா தான் இருக்கிறார்களே, நீ அவர்களுடன் பத்திரமாக வந்து விடுவாய் என்று தான் ஒரு குறிப்பு மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்து விட்டேன். போனிலும் சார்ஜ் முழுவதும் இறங்கி விட்டதால் உன்னுடன் பேசவும் முடியலைடா.

நீ எதோ ரொம்ப கோபத்தில் இருப்ப, உன்னை சமாதானப் படுத்த உன் காலில் எல்லாம் விழ வேண்டி இருக்கும் என்று நினைத்து வந்தால், நீ ரொம்ப கூலா டீ போட்டு எடுத்து வர” என்று கூறியபடி ப்ஃலாச்கில் இருந்த டீயை இரண்டு கப்களில் ஊற்றினான்.

அவன் பேசியதைக் கேட்டு நிம்மதியான உத்ரா “கோபமா இல்லன்னா என்ன இப்போ கூட என் காலில் நீங்க விழுந்தால், பல கோடி ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்” என்று கூறி சிரித்தாள் உத்ரா.    

“நீ எனக்கு கிடைத்ததே பல கோடி ஆசிர்வாதம் தான் உத்ரா.” எனக் கூறி அவளை அனைத்துக் கொண்டான்.

En arugil nee irunthum

முற்றும்

Episode # 09

{kunena_discuss:1170}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.