(Reading time: 57 - 113 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 15 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

"நான் சும்மா தான் மச்சான் சொன்னேன். நீயும் என் தங்கச்சியும் சேர்ந்து சந்தோசமா இருக்கணும். உங்களுக்குள்ள பிரிவே வரக்கூடாது. என் மேல கோபம் இல்லை தான டா?", என்று கேட்டான் ஷியாம்.

"இல்லை டா. உன் சந்தோசம் எனக்கும் முக்கியம். நீ தாராளமா காவ்யா வீட்ல தங்கிக்கோ. ஆனா அப்ப அப்ப வீட்டு பக்கம் வா டா. அப்புறம் என் பைக்கை நீயே யூஸ் பண்ணிக்கோ", என்று சிரித்தான் சூர்யா.

"என் தங்கச்சி என்னை மன்னிக்க சொன்னதுனால தான நீ  மன்னிச்ச? இல்லைன்னா முகத்தை தூக்கிட்டு தான் இருப்ப. தேங்க்ஸ் தங்கச்சி"

"சும்மா இருங்க அண்ணா. அத்தானுக்கு கோபமே வராது தெரியுமா?", என்று சிரித்தாள் கலைமதி.

"ஆமா, ஆமா அவனுக்கு கோபமே வராது தான்" , என்று சிரித்தான் ஷியாம். இப்படியே பேசிய  படியே வீட்டுக்கு சென்றார்கள். ஷியாம் மற்றும் மதியை இறக்கி விட்ட சூர்யா தன்னுடைய அப்பாவை போனில் அழைத்து "எங்கே வரீங்க?", என்று கேட்டான்.

அவர் பாத்து நிமிசத்தில் வந்து விடுவோம் என்று சொன்னதால் அவர்கள் இருவரிடமும் சொல்லி விட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.

பின் பஸ்ஸ்டாண்டில் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மங்களமும் சிவ பிரகாசமும் ஷியாமை பாசத்தோடு வரவேற்றார்கள்.

ஆனால் அவன் காவ்யா வீட்டில் தங்க போவதை அறிந்து இருவரும் நன்கு திட்டினார்கள். சூர்யா தான் அவர்களுக்கு உண்மையை விளக்கினான்.

அவர்கள் கொடுத்த திட்டை  வாங்கி கொண்டு பேசி பேசியே மங்களத்தையும் சிவ பிரகாசத்தையும் சம்மதிக்க வைத்தான் ஷியாம்.

அதன் பின் அடுத்த நாள் காலையில் மதி, சூர்யாவுடன் காரில் காலேஜ் கிளம்பும் போது சூர்யாவின்  பைக்கை எடுத்து கொண்டு காவ்யாவை காண கிளம்பினான் ஷியாம்.

அதை பார்த்த சூர்யா சிறிது யோசித்து விட்டு, "நீங்க ரெண்டு பேரும் பைக்ல  சுத்துறது  சேப் இல்லை டா. இந்தா நீ கார்ல போ", என்று காரை ஷியாமிடம் கொடுத்து விட்டு மதியை பைக்கில் அழைத்து சென்றான்.

காரை எடுத்து கொண்டு காவ்யா  ஏறும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான் ஷியாம். அங்கு வந்த காவ்யா சூர்யா காரை கண்டதும் "எல்லாரும் இருக்காங்க போல?", என்று நினைத்து கொண்டே அருகில் சென்றாள்.

ஆனால் அதன் பின்னர் அவளுடைய நாயகன் மட்டுமே உள்ளே அமர்ந்திருந்ததை கண்டு சிரித்தவள் "நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?", என்று கேட்டாள்.

"உள்ள ஏறிட்டு  பேசு டி", என்று சிரித்தான் ஷியாம்.

பின் பக்கம் அமர போனவளை "கொன்னுருவேன். ஒழுங்கா முன்னால ஏறு", என்று சொல்லி திட்டினான்.

அவள் முன்னால் ஏறியதும் சந்தோசத்துடன்  காரை ஓட்டினான்.

"கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்  சார்  எப்ப சிவில் இன்ஜினியரிங்  படிச்சீங்க?", என்று நக்கலாக கேட்டாள் காவ்யா.

"என் பொண்டாட்டிக்காக நான் டாக்டர்ன்னு  கூட சொல்லுவேன் டி", என்று சொல்லி அவளை திகைக்க வைத்தான் ஷியாம்.

"பின்னாடி அம்மா அப்பாக்கு  விசயம் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? எனக்காக தான் பொய் சொல்லி வீட்ல தங்கி இருந்தீங்கன்னு கண்டு பிடிச்சிர மாட்டாங்களா?

"ஒண்ணும் நினைக்க மாட்டாங்க. கடைசி வரை அது சைட் பாக்குற விசயமாவே இருக்கட்டும். உங்க வீட்டில தங்கி இருக்கும் போது உன்னை விரும்புனதா அவங்க கிட்ட சொல்லிக்கலாம் . அவங்களை ஏமாத்தினது  அவங்களுக்கு கடைசி வரைக்கும் தெரியாம பாத்துக்கலாம். போதுமா?"

"தேங்க்ஸ் ஷியாம்"

"போடி  லூசு. சரி இப்ப காலேஜ் வந்துரும். உன்னை விடவே மனசு இல்லை. லீவ் போடுறியா?"

"கொன்னுருவேன். அதெல்லாம் முடியாது. அதான் நாளைக்கு மறுநாள்ல இருந்து என் கூட தான இருக்க போறீங்க? அப்புறம்  என்ன?"

"உன் கூட ஒரே வீட்டில இருப்பேன். ஒரே பெட் ரூம்ல இருக்க முடியுமா டி?"

"ஆசை தோசை", என்று உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவளை  பார்த்தவன் அந்த நாகர்கோயில்  செல்லும் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்தியே விட்டான்.

"என்ன இங்கயே நிறுத்திட்டீங்க?", என்று அவன் முகம் பார்த்து கேட்டவள் அவன் பார்வை தன்னுடைய உதட்டில் இருப்பதை பார்த்து அதிர்ந்து "ஷியாம் வண்டியை எடுங்க", என்றாள்.

"ப்ளீஸ் டி ஒன்னெ ஒண்ணு", என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளுடைய உதடுகளை சிறை செய்தான்.

சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகி நல்ல பையனாக காரை ஓட்ட ஆரம்பித்தான். அவள் தான் அவனை பார்க்க முடியாமல் முகம் சிவந்து அமர்ந்திருந்தாள்.

அவள் வெட்கத்தை ரசித்தவன் "இப்படி தான் வெட்க படாதேன்னு சொன்னேன் ", என்று சொல்லி அவளை சீண்ட ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.