(Reading time: 57 - 113 minutes)

அதன் பின் அவளை காலேஜில் விட்டுவிட்டு சாயங்காலமும்  அவளை அழைத்து கொண்டு அவள் வீட்டருகே  இறக்கி விட்டு விட்டு சென்று விட்டான்.

அடுத்த நாளும் இதுவே தொடர்ந்தது.

அதற்கு அடுத்த நாள் மாலை சூர்யாவை  அழைத்து கொண்டு மதி, காவ்யா காலேஜ் முடியும் முன்னே காவ்யா வீட்டுக்கு வந்து விட்டான்.

அவர்களை வரவேற்றது சுந்தர் தான். அன்று சனிக்கிழமை என்பதால் அவருக்கு விடுமுறை. இருவரையும் "உள்ள வா சூர்யா. வாங்க தம்பி", என்று வரவேற்றார்.

திலாகவும் அவர்களை பார்த்து சிரித்தாள்.

"திலகா சொன்னா, நீங்க இங்க தங்குறதுல  எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம்  யாராவது வேற ஆள் வந்தா தான் அதோ அந்த கதவை பூட்டனும்னு  நினைச்சோம். இதுவும் மாடிக்கு போற வழி தான். இந்த கதவை திறந்தா மேலயும் கீழயும் ஒரே வீடு தான். அதனால நீங்க தனி வீட்டில எல்லாம் இல்லை. எங்க வீட்டில தான் இருக்கீங்க. அதனால சாப்பாடு எங்க கூட தான்", என்றார் சுந்தர்.

"ஐயோ, அத்தனை நாள் உங்களுக்கு எதுக்கு சிரமம்? வாடகையும் வேண்டாம்ணு சொல்லிட்டீங்க? சாப்பாடாவது கடைல சாப்பிட்டுக்குறேனே?", என்று  நல்ல  பையன்  போலவே  பேசினான்  ஷியாம்.  சூர்யாவோ  அவனுடைய  நடிப்பை  ரசித்த  படி  அமர்ந்திருந்தான்.

"உங்க ஒருத்தருக்கு சேர்த்து சமைச்சு நான் ஒண்ணும் குறைஞ்சிர  மாட்டேன் தம்பி. ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டு போயிரும். எங்க வீட்டில தான் சாப்பிடணும் சொல்லிட்டேன்", என்றாள் திலகா.

"ஆமா ஷியாம். சூர்யாவோட நண்பன் நீங்க. அப்படின்னா நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான? அப்படி தான சூர்யா?", என்று கேட்டார் சுந்தர்.

"ஆமா  அங்கிள்", என்று சிரித்தான் சூர்யா.

"அவனை மட்டும் வா போன்னு  சொல்றீங்க? என்னையும் வா போன்னே பேசுங்க அங்கிள் ? இல்லைன்னா உங்க வீட்டில சாப்பிட மாட்டேன்", என்று சிரித்தான் ஷியாம்.

"சரி பா, இனி உன்னையும் சூர்யா மாதிரியே கூப்பிடுறேன் போதுமா?", என்று சிரித்தார் சுந்தர்.

"சரி அங்கிள்", என்று சிரித்தான் ஷியாம்.

"நான் மதியையும் காவ்யாவையும் கூட்டிட்டு வறேன்", என்று எழுந்த சூர்யா ஷியாமிடம் கார் சாவியை வாங்கி கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் கிளம்பியதும் "நீ மேல வா ஷியாம். உனக்கு வீடு பிடிச்சிருக்கானு பாரு. நீ தனியா இருக்கணும்னு கேட்டதுனால தான் மேல வீடு. இல்லைன்னா இங்கயே ஒரு ரூம்ல தங்க சொல்லிருப்பேன்", என்றார் சுந்தர்.

"பரவால்ல அங்கிள் நான் மேலயே இருக்கேன்", என்ற படி அவருடன் எழுந்து போனான் ஷியாம்.

"சரி நீ அன்டைம்ல வரும் போது தான் வெளிய உள்ள படி மூலமா மேல போகணும். மித்த நேரம் வீட்டுக்குள்ள வழியா தான் மேல வீட்டுக்கு போகணும் சரியா?"

"உங்க வீட்டை என் வீடா நினைக்க சொல்றீங்க? அப்படி தான அங்கிள்?"

"புரிஞ்சிக்கிட்டா சரி? உனக்கு என்ன சாப்பிட வேணும்னு திலகா  கிட்ட சொல்லு. அவ செஞ்சு தருவா"

"ஸ்பெஷலா ஒண்ணும் வேண்டாம் அங்கிள். எது கொடுத்தாலும் சாப்பிட்டுக்குவேன்"

"நல்ல பையன் தான் நீ. எங்க வீட்டு வாலு  இருக்காளே? அது வேணும் இது வேணாம்னு சரியான இம்சை பண்ணுவா"

தன்னவளை  பற்றி பேசியதும் ஷியாம் முகம் மென்மையானது. "எங்க வீட்டுக்கு வந்துருக்குறப்ப அப்படி காவ்யா  ஒண்ணுமே சொல்லலை அங்கிள். சமத்தா தான் இருந்தா"

"அப்படியா? அடுத்த வீடுன்னு  அடக்கி வாசிச்சிருப்பா. பொல்லாத பொண்ணு. சரி இதோ ரெண்டு பெட் ரூம் இருக்கு. எதுல வேணும்னாலும் நீ தங்கிக்கோ. குடிக்க தண்ணி மட்டும் மேலேய வைக்க சொல்றேன். மித்த படி நீ கீழே  தான் வரணும். டீவீ கீழே  இருக்கு. எவ்வளவு நேரம் வேணும்னாலும் பாக்கலாம் சரியா?"

"சரி  அங்கிள்"

"சரி பா. நீ டிரெஸ் மாத்திட்டு வா. நான் திலகா காப்பி போடுறாளான்னு  பாக்குரேன்"

"சரி அங்கிள்", என்றான் ஷியாம்.

அவர் போனதும் சிரித்து கொண்டே தன்னுடைய பேகை எடுத்து கொண்டு ஒரு ரூமுக்கு சென்றவன் கட்டிலில் அமர்ந்து தன்னுடைய தங்கை காயத்ரியை அழைத்தான்.

"அண்ணா, என்ன அண்ணி வீட்டுக்கு போய்ட்டியா? பிளான்  சக்ஸஸ் ஆகிட்டா?", என்று கேட்டாள் காயத்ரி.

"காயு குட்டி கொடுத்த ஐடியா வொர்கவுட் ஆகாம  இருக்குமா? இப்ப தான் வந்தேன். ஆனா மேடம் இன்னும் காலேஜ் முடிஞ்சு வரல"

"வந்து உன்னை பாத்து முழிக்க போறா. சரி இருபது நாள் ஜாலியா இரு. இங்க வந்தும் தனியா இருக்கேனு தான் உனக்கு அந்த ஐடியா சொன்னேன்"

"இருபது நாள் இல்லை மேடம். ஐயா எக்ஸ்ட்ரா பத்து நாள் லீவ்  சொல்லிட்டேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.