(Reading time: 57 - 113 minutes)

எப்படியோ பத்து மணி வரை நேரத்தை கடத்தியவள் "படுக்கலாம்", என்று நினைத்து எழுந்தாள்.

பாட்டிலில் தண்ணீர் இல்லாததால் கீழே சென்றாள். திலாகவும் சுந்தரும் அமர்ந்து சீரியல் பார்த்து கொண்டிருந்தார்கள். 

"என்ன டி,  படிச்சிட்ட?", என்று கேட்டாள் திலாகா.

"ஓ, படிச்சிட்டேனே? தூங்க போறேன் மா. தண்ணி எடுக்க வந்தேன்"

"காலைலயும்  ஒரு தடவை படி, சரியா?"

"திலகா அவ என்ன ஐ. ஏ. எஸ்க்கா  படிக்கிறா?  வேலை பாக்குற அளவுக்கு அறிவு இருந்தா போதும். கூடவே கொஞ்சம் மார்க்கும். நீ போடா குட்டி", என்றார் சுந்தர்.

"நீங்க இப்படியே செல்லம் குடுங்க. சரி காவ்யா, ஷியாம் தம்பிக்கும் தண்ணி எடுத்துட்டு போய் கொடுத்துரு. நாளைக்கு கேன் வாங்கி வச்சிரலாம்"

"நானா? அதெல்லாம் முடியாது. நீ போய் கொடு"

"மேல தான டி போற? போய் கொடு", என்று சொல்லி விட்டு டிவி  பக்கம் திரும்பி கொண்டாள்.

"அட பாவிகளா, அவன் நல்லவன்னு  நம்பி இப்படி போக சொல்றீங்களே? நீங்க அப்படி நினைக்கணும்னு தான் அவன் என்னை பாக்காத மாதிரி சீன போட்டானா?", என்று நினைத்து கொண்டு இரண்டு பாட்டிலில் தண்ணீர் பிடித்தவள் மாடியை நோக்கி சென்றாள்.

தன்னுடைய ரூமில் ஒரு பாட்டிலை வைத்தவள், மற்றொன்றை தூக்கி கொண்டு அந்த கதவு வழியாக  அவன் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றாள்.

ஹாலில் நின்று கொண்டு தலையை சுழற்றி பார்த்தாள். "அவன் கிட்ட கொடுத்துட்டு ஓடி வந்துரனும்",   என்று மனதுக்குள் சொல்லி கொண்டாலும் காவ்யா கால்கள் தாளம் போட்டன.

ஒரு பெட்‌ரூம் வெளியே பூட்டி இருந்ததால் மற்றொன்றில் தான் இருப்பான் என்று எண்ணி அதை நெருங்கியவள் கதவை தட்டினாள். ஏற்கனவே கதவை தட்டாமல் சென்று பார்த்த கோலம் இன்னும் மறக்க வில்லையே.

"கதவு திறந்து தான் இருக்கு அங்கிள்", என்று சொல்லி எழுந்து வந்தான் ஷியாம்.

இவள் கதவை திறக்கவும், அவன் கதவு அருகே வருவதும் சரியாக இருந்தது. அந்த நேரத்தில் அவளை அவன் சுத்தமாக எதிர்பார்க்க வில்லை.

முதல் நாளே இவ்வளவு அருகில் அவளுடைய தரிசனமா? இதுக்கு தானே இத்தனை பிளான்  போட்டேன்", என்று எண்ணி கொண்டே அவளை பார்த்து சிரித்தான்.

அவனை பார்க்க முடியாமல் "தண்ணி", என்று பாட்டிலை மட்டும் நீட்டினாள். கை நீட்டி  அதை வாங்கி கொண்டவன் அவள் கைகளை மட்டும் விடவே இல்லை.

"இதுக்கு தான் இங்க வர யோசிச்சேன்?", என்று நினைத்து கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து "கையை விடுங்க", என்றாள்.

அவனோ பிடித்திருந்த கையை சுண்டி இழுத்தான். அவனுடைய மார்பில் போய் விழுந்தாள் காவ்யா. 

"ப்ச், இதுக்கு தான் இங்க வர மாட்டேனு சொன்னேன். இந்த அம்மா தான்"

"ஹா ஹா, நீயும் என்னை இப்படி தனியா பாத்தா இப்படி நடக்கும்னு எதிர் பாத்துருக்க? அப்படி  தான? அப்ப நடத்தாம போனா நல்லா இருக்குமா?", என்று சொல்லி கொண்டே அவளுடைய உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு விடுவித்தான்.

"ஏய், பொண்டாட்டி உன்னோட மாமா ரூம்கு நீ வர கதவு தட்டி அனுமதி வாங்கணும்னு எந்த அவசியமும் இல்லை சரியா?", என்று அவள் காதில் சொன்னான் ஷியாம்.

"எதுக்கு? கதவு தட்டாம வந்து  அன்னைக்கு மாதிரி நடக்குறதுக்கா?", என்று வெட்கத்துடன் சொன்னாள் காவ்யா.

"என்னை அப்படி பாக்க  உனக்கு மட்டும் தான டி உரிமை இருக்கு", என்று சிரித்தான் ஷியாம்.

அவன் கையில் கிள்ளி விட்டு ஓடியே  வந்து விட்டாள் காவ்யா. அவன் கொடுத்த முத்தத்தை பற்றியே நினைத்து கொண்டு  தன் அறைக்கு வந்தவள் படுத்து விட்டாள். சிரித்து  கொண்டே ஷியாமும் தூங்க போனான்.

தே நேரம் கட்டிலில் படுத்திருந்த சூர்யா  உறக்கம் வராமல் புரண்டு  கொண்டிருந்தான். மதியை ஆர்வமாக பார்த்து கொண்டே தூங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான்.

அவன் அசைவுகளிலே அவன் தூங்க வில்லை என்று உணர்ந்த மதி "அத்தான் என்ன தூக்கம் வரலையா?", என்று கேட்டாள்.

"ம்ம்"

"என்ன ஆச்சு? பால் காச்சு கொண்டு வரவா?"

"வேண்டாம் கலை", என்று சோகமாக ஒலித்தது அவனுடைய குரல்.

அவன் வருத்தத்தை உணர்ந்தவள் காரணம் தெரியாமல் எழுந்து லைட்டை போட்டாள்.

"இப்ப எதுக்கு லைட் போடுற?"

"சும்மா தான்", என்றவள் அவன் அருகே அமர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அவனும் எழுந்து அமர்ந்து கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி  அமர்ந்தான்.

அவனை மாதிரியே அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கையை பற்றி கொண்டாள்.

"கலை", என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் சூர்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.