(Reading time: 57 - 113 minutes)

"கண்டிப்பா  அத்தான். அப்புறம்  என்ன சொன்னீங்க? வெறும் முத்தமா? வெறும் முத்தம் தான்னு உங்களுக்கு தோணுதா?"

"இல்லை  டி, அது வார்த்தையா சொன்னது. உன்னோட முத்தம் தான் எனக்கு இப்ப எல்லாம் எனெர்ஜி டிரிங்கா இருக்கு தெரியுமா?", என்று கேட்டு கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.

அடுத்து வந்த நாள்கள் அனைவருக்கும் அழகானதாக சென்றது. அடுத்த நாளே  அனைவருக்கும் டிரான்ஸ்பர்  விசயத்தை சொல்லி விட்டான் சூர்யா. மங்களமும் சிவ பிரகாசமும் மதியை  நாங்க பத்திரமா பாத்துக்குவோம் பா. நீ கவலை படாத", என்று  ஆறுதல் கூறினார்கள்.

எப்போதுமே தான் மாமனார் மாமியாரை பெருமையாக நினைக்கும் மதி இன்று அவர்களை நினைத்து பூரித்தே போனாள். மகனின் மன நிலையையும், மருமகளின் நலத்தையும் விரும்பும் பெற்றவர்கள் கிடைப்பது அரிதல்லவா?

நினைத்தது போலவே ஷியாம் தான் சொன்னதால் தான் இப்படி ஆகி விட்டதோ என்று வருந்தினான்.

"என்னோட விதியை, உன் மூலமா எனக்கு கடவுள் முன்னாடியே தெரிய படுத்திருக்கார். அவ்வளவு தான் டா. இதுக்கு போய் பீல் பண்ணாத டா",என்று சமாதான படுத்தினான் சூர்யா.

அதற்கு பிறகு வந்த நாள்களில் மதி சூர்யாவின் மீதே ஒட்டி கொண்டே திரிந்தாள். சும்மா இருக்கும் போது கூட அவன் நெஞ்சிலே சாய்ந்து கிடந்தாள். படிக்கும் போது அவன் மடியில் தலை வைத்து படித்தாள். ஹாஸ்டலுக்கு செல்லும் குழந்தை தாயை பிரிய முடியாமல் தவிப்பது போல இருந்தது அவளுடைய  செய்கை.

வளர்ந்தாலும் கூட அவளும் சிறு குழந்தை தான் என்று எண்ணி கொண்ட சூர்யாவும் அவளே கதி என்று கிடந்தான். முடிந்த அளவு அவளுடைய நினைவுகளை மனப்பெட்டகத்தில்  சேகரித்து வைத்தான்.

இங்கே இப்படி என்றால் காவ்யா வீட்டிலோ பெற்றவர்கள் முன்னால் தங்களின் காதலை  காட்ட முடியாமல் மனதுக்குள் வைத்தே மறுகினார்கள். ஷியாமும் அவளுடன்  தனியாக பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளை கெஞ்சி கொஞ்சி சீண்டி  காதல் நினைவுகளை உருவாக்கி மனதுக்குள் பத்திர படுத்தினான்.

அன்று ஞாயிறு கிழமை. காலை எட்டு மணிக்கே உறவினர் கல்யாணத்துக்காக கிளம்பி கொண்டிருந்தார்கள் திலாகவும் சுந்தரும். கீழே  இறங்கி வந்த ஷியாம் கையில் காப்பியை கொடுத்த திலகா "நாங்க சாயங்காலம் தான் வருவோம். அது வரைக்கும் காவ்யாவா பாத்துக்கோங்க தம்பி", என்றாள்.

அவன் பதில் சொல்வதுக்குள் "திலகா ஷியாமுக்கு வேலை  இருக்குமே", என்றார் சுந்தர்.

பாலுக்கு காவல் இருக்க  எந்த பூனைக்காவது கசக்குமா என்ன?

"எனக்கு இன்னைக்கு வேலை இல்லை அங்கிள். நாளைக்கு தான் ஒரு ஆள் வர சொன்னார். நான் பாத்துக்குறேன்", என்றான்.

"இப்படி எல்லாம் பொறுப்பை எடுக்காத ஷியாம். அது கஷ்டமான வேலை. மேடம் எந்திச்சு  வரவே பதினொன்னு  ஆகும். அப்புறம் டிவியே கதின்னு  கிடப்பா", என்று சிரித்தார் சுந்தர்,

அவனும் சிரித்தான். "சும்மா இருங்க பா. அவ காதுல விழுந்ததோ உங்களை உண்டு இல்லைன்னு ஆக்க்கிருவா. அப்புறம்  ஷியாம். காலைல சாப்பிட டிபன் செஞ்சு ஹாட் பாக்ஸ்ல  வச்சிருக்கேன். மதியம் குழம்பு கூட்டு  எல்லாம் வச்சிட்டேன். காவ்யா குக்கர்ல சாதம் வச்சிருவா. காலைல நீங்களே சாப்பிட்டுருங்க. அவ வந்து எடுத்து கொடுத்தா நீங்க மதியம் தான் சாப்பிடணும்", என்று சிரித்தாள் திலகா.

"நான்  பாத்துக்குறேன் ஆண்ட்டி. நீங்க கவலை படாம  போய்ட்டு வாங்க. எனக்கும் லேப்டாப்ல தான் வேலை  இருக்கு. வெளிய எல்லாம் போக மாட்டேன்", என்று  சிரித்தான் ஷியாம்.

அவர்கள் சென்றதும் பேருக்கு  லேப்டாப்பை தூக்கி கொண்டு கீழே  வந்தவன் அதை வைத்து விட்டு டிவி யை   பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.

அம்மா அப்பா கல்யாணத்துக்கு போவது தெரிந்தாலும் தூங்கி எழுந்தவள் அதை  மறந்து போனாள். தூக்க கலக்கதோடு வந்தவள் "அம்மா  காப்பி தா", என்ற படியே  கீழே இறங்கினாள்.

அவள் குரலில் அவளை திரும்பி பார்த்தவன் அப்படியே அதிர்ந்தான்.

அவனை பார்த்ததும் அதற்கு மேல் அதிர்ந்தாள் காவ்யா. கழுத்தில் துப்பட்டாவை  தூக்கி போடாத தன் மடத்தனத்தை நொந்த படி அவனை பார்த்தாள். இப்போது போய் சாலை எடுத்து போட்டால் ஒரு மாதிரி இருக்கும் என்பதால் வேகமாக கிட்சன்  அருகே சென்று நின்று கொண்டாள். 

அம்மா இல்லாதது அதன் பின்னர் தான் நினைவே வந்தது. தலையிலே தட்டி கொண்டவள் பாலை சூடு பண்ணி இரண்டு டம்பளரில் காப்பியை போட்டு எடுத்து கொண்டு அவன் அருகே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.