(Reading time: 9 - 17 minutes)

ன்று காலை பயணம் தொடங்கியதுமே மதிய உணவிற்குப் பிறகு பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் கான்பிரன்ஸ் ஹாலுக்கு அழைத்து வரப்பட்டார்கள். அறிமுகப் படலம் நிறைவடைந்ததும், தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் தூத்துக்குடி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் கடலின் மழைக்காடுகள் பாதுகாப்பு அரண் எனப்படும் பவளப்பாறைகள் பற்றிய படக்காட்சிகள் தொடங்கப்பட்டன.

கடலின் பாதுகாப்பிற்கு பளப்பாறைகள் எத்தகு பயனை மேற்கொள்கின்றன. மனிதர்களின் சுயநலத்திற்காக அவை எவ்வாறு அழிக்கப்படுகிறது. மிக முக்கிய கடல் பிராந்தியமான மன்னார் வளைகுடா, கேரள மற்றும் அந்தமான் நிக்கோபார், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகள் பவளப்பாறைகள் அதிகம் இருக்கும் இடங்களாகும். கடல் அலைகளின் ஆக்ரோஷத்தையும், வேகத்தையும் பவப்பாறைகள் கட்டப்படுத்தியதால் கரையை நோக்கி குறைந்த வேகத்தில் அலைகள் வந்தன. ஆனால் தற்போது, இயந்திர படகுகள், சட்டவிரோதமாக பவளப்பாறைகளை வெட்டி எடுத்தல், முறையற்ற மீன்பிடிப்பு, பருவநிலை மாற்றம், சுற்றுலா பயணிகளின் கழிவுகள் என பல முக்கிய காரணங்களினால் பவளப்பாறைகள் அழிந்து வருகிறது.

தண்ணீர், மின்சாரம், அதேபோல் ஒசோன் மண்டலத்தின் மாசுபாடு தற்போது பவளப்பாறைகளின் அழிவு. இதனால் ஏற்படும் அபாயம் இன்னும் நம்மில் பலரால் சரி வர அறியப்படவில்லை.

சென்னை மெரினா எலியட்ஸ், இன்னும் அநேக கடற் பகுதிகளில் கடலலைகளின் வேகத்திற்கு பலியானதற்கு காரணம் இந்த பவளப்பாறைகளின் அழிவுதான். சமீபத்தில் நாம் அநேக பத்திரிக்கைகளில் படித்திருப்போம் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களை கடலலையில் இழுத்துச் சென்றன என்று அவற்றிற்கெல்லாம் காரணம் இந்த பவளப்பாறைகளின் அழிவுகள்தான். அழிந்து வரும் இந்த கடல் பாதுகாப்பு அரணை மீட்டெடுக்க நம்மால் ஆன பங்களிப்புதான் இந்த குழுவின் நோக்கம். 

சாதாரணமாக எல்லாரையும் போல் சுயநலம் என்ற ஒன்றில் மூழ்கிவிடாமல் கடல் மீதுள்ள காதலால் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார் மிஸ்டர். பரத்சக்கரவர்த்தி சக்கரவர்த்தி குழுமத்தின் இளையமகன், வருடாவருடம் கடல் சார்ந்த அட்வென்ஸர்ஸ் எல்லாம் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு நாம் பயணம் புரியும் இந்தக் கப்பலுக்குச் சொந்தக்காரர். இராமேஸ்வரம் கடல் பகுதியில் அழிந்து வரும் கடல்பாறைகளுக்காக செயற்கை முறையில் பவளப்பாறைகள் தயாரிக்கும் முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியதோடு இதே போல் அங்கும் ஒருகுழு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இது இவரது இரண்டாவது முயற்சி அதற்கு அரணாய் உங்கள் ஆதரவோடு அவரைப் பேச அழைக்கிறோம் என்று அவர் வழிவிட்டு நகர்ந்தார். 

வணக்கம்

அவையளந்த பார்வையும், கம்பீர குரலில் ஒருவித அமர்வும், அவன் பேசத் துவங்கியபோதே இனம் கண்டு கொண்டாள் உத்ரா. இவர் கடவுளே.....ஒரு ஆபத்தான கட்டத்தில் உதவியவருக்கு நன்றி கூற தெரிவிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தேன். நல்லவேளை அவரையே நேரில் கொண்டு வந்து நிறுத்திவிட்டாய் என்று கடவுளுக்கு மனதார நன்றியுரைத்தாள். வெகு சுருக்கமான உரைதான் அவனுடையது. 

இந்த சபையில் அனைவருமே இளையவர்களாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்று சொன்னது உண்மையாகி இருக்கிறது நம்முடைய எல்லாத் தேவைகளையும் சீர்தூக்கிப் பார்த்து பெற்றவர்களைப் போல கவனித்துக்கொண்ட இயற்கை அன்னைக்கு நம்முடைய கடமை இன்று தேவைப்படுவதென்னவோ உண்மைதான். நம் மண்ணில் என்ன இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என்பதைக் கூட நாம் போராடி உயிர்களை பலிகொடுத்துத்தான் பெற வேண்டியிருக்கிறது இந்த தூத்துக்குடியில் நடைபெற்றவற்றைத்தான் பேசுகிறேன்.

இன்னும் நாம் போராட வேண்டியவை அநேகம் உள்ளது. அந்த போராட்டத்தில் இறந்த அனைவருக்கும் நம் அஞ்சலியை ஒரு முழு நிமிடம் செலுத்தி விட்டு மற்றவற்றை பேசலாம் என்று நினைக்கிறேன். அவன் கூறியவுடன் அத்தனை பேரும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார்கள். 

ஒருவித வசீகரமும் அவனின் குரலுக்கு இதம் சேர்த்தது. , பவளப்பாறைகளை வெட்டி எடுக்க அரசு தடை விதித்திருந்தாலும், அழிந்து போன பவளப்பாறைகளை மீட்டுக் கொண்டு வரவும், பவளப்பாறைகளை அழிக்கும் நட்சத்திர மீனை அழிப்பதற்கும். தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் தூத்துக்குடி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் பவளப்பாறைகளுக்காக செயற்கைத் தளத்தை செயல்படுத்தியது.

அடுத்து வரும் பயிற்சிகளில் இதைப்பற்றி நாம் நேரடியாகவே பார்க்கலாம். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்.

பேச்சை முடித்துவிட்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவளைக் கண்டுகொள்ளாதது சற்றே உறுத்தியது. இருந்தாலும் ஒரு சாம்ராஜ்ய அதிபதிபோல் தோற்றமளிக்கும் அவன் இந்த ஏழை பெண்ணை நினைவில் கொண்டு இருப்பானா ?

மீட்டிங் முடிவுற்றதும் சிறு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரவர்களுக்கு உரிய உணவை எடுத்துப் போட்டுக்கொண்டு தனித்தனிக் குழுக்களாக நின்று உணவருந்த உத்ராவின் விழிகள் தன்னையும் அறியாமல், பரத்தை தேடின.

அவன் அன்றேபோலவே இன்றும் ஒரு யுவதியுடன் தனியறைக்குச் சென்று கொண்டு இருந்தான்.

சுருக்கென்று ஏதோ தைத்ததைப் போல இருந்த மனதை ஒரு தரம் குட்டிவிட்டு அன்று பரத்தை சந்தித்ததை நினைவு கூர்ந்தாள் உத்ரா. 

தொடரும்...

Episode # 04

Episode # 06

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.