(Reading time: 15 - 29 minutes)

வேண்டாம் என தலையசைத்தவன் விளையாட்டாய் அவள்  துப்பட்டாவை கைகாட்ட அவளோ முகம் மலர சற்றும் தாமதியாது அவன் முகத்தை ஒற்றியெடுத்தாள்.

இருவருக்குமே இந்த செய்கை மொழி இன்னும் நெருக்கத்தை கொடுப்பதாய் இருக்க. அபினவோ வாய் அங்கு பேசிக் கொண்டிருந்தாலும் தன்னவளோடான இந்த நேரத்தை இழக்க விரும்பாதவனாய் தான் அமர்ந்திருந்த நீள் சோபாவில் அவளை அமரச் சொல்ல என்னவென புரியாமல் திஷானியும் அமர்ந்தாள்.

சிறு பிள்ளையாய் அவள் மடியில் தலை வைத்து படுத்தவாறே பேச ஆரம்பித்திருந்தான்.பெண்ணவளுக்கோ இனம் புரியா ஓர் உணர்வு. அவளது கை அந்நிச்சையாய் அவன் முடி கோத காதலும் தாய்மையும் கலந்த உணர்வு கலவை அவளை ரொம்பவே இம்சித்தது..அடுத்த சில நொடிகளில் அழைப்பை துண்டித்தவன் அவள் முகம் பார்க்க,

“சாரி திஷா டியர் இது என் ஹபிட் எப்பவுமே அம்மா பக்கத்துல இருந்தா இப்படி படுத்துப்பேன்..இனி உன்கிட்டேயும்..”,என்று நிறுத்தி அவள் கண்களுக்குள் பார்க்க சட்டென உணர்வு பெற்றவளாய்,

“ரொம்ப லேட் ஆய்டுச்சு வாங்க சாப்டலாம்”,என பேச்சை மாற்ற மென்னகையோடே எழுந்தவன் மேலும் அவளை சீண்டாமல் ரூம் சர்வீஸிற்கு கால் செய்து உணவு எடுத்து வருமாறு கூறினான்.

இருவருமாய் ஏதேதோ பேசியவாறே உணவை முடிக்க சற்று நேரம் ஓய்வெடுத்து மாலை மீண்டும் வெளியே செல்லலாம் என முடிவு செய்தனர்.

மாலை ஆறு மணியளவில் இருவருமாய் கிளம்பத் தயாராக அபினவ் திஷானியிடம்,”எங்க போலாம்னு சொல்லு திஷா..ட்ரைவ் போலாமா இல்ல வேற எங்கேயாவது??”

“உங்க இஷ்டம்ங்க எனக்கு பீச்லயே உட்காந்திருந்தா கூட போதும்..அவ்ளோ பிடிச்சுருக்கு..”,என்றாள் எதார்த்தமாய் அவனோ அதை செயல்படுத்தியே விட்டான்..

கடற்கரைக்குச் சென்றவன் தன்னவளோடு கால்களை அலை நனைக்க அப்படியே அமர்ந்து விட்டான்.கிட்டதட்ட மூன்று மணி நேரம் என்ன பேசினோம் எப்படி பொழுது கழிந்தது என எதுவும் தெரியாமல் அத்தனை சுவாரசியமாய் பேச்சும் சிரிப்பும் சீண்டலுமாய் கழிந்தது..

“ரொம்பவே டைம் ஆச்சு திஷாம்மா..போலாமா”,என்றவனின் அழைப்பே மனதில் பதிய அவன் மறுபுறம் திரும்பி தன் ஆடையிலிருந்த மணலை தட்டிக் கொண்டிருக்க அதை கவனித்தவள் தானே எழுந்துவிட எண்ணி எழ அத்தனை நேரம் அமர்ந்திருந்ததில் கால் ஏதோ போல் உணர்வு கொடுக்க சமாளிப்பதற்குள் நிலை தடுமாறிவள் “அபிப்பா” என்றவாறு அப்படியே விழுந்திருந்தாள்..

அவளின் அழைப்பில் திரும்பியவன் பதட்டமாய் திரும்ப மொத்தமாய் நீரில் நனைந்திருந்தவளை பார்க்க அவனறியாமல் சிரிப்பு வந்துவிட சத்தமாய் சிரித்து விட்டான்.

திஷானிக்கோ அவள் விழுந்ததைவிட அவனின் சிரிப்பில் கடுப்பாக எழுப்பி விடுமாறு கை நீட்ட இரு நொடி மனதார சிரித்து முடித்தவன் சாதாரணமாய் கை கொடுக்க தன் முழுபலம் கொண்டு அவனை இழுத்து விட்டிருந்தாள் திஷானி..

இப்போது தடுமாறுவது அவன் முறையாய் இருக்க அவள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.

“அடிப்பாவி சைலண்ட் கில்லரா நீ..”

“ம்ம் நீங்க மட்டும் சிரிச்சீங்க தான அதுக்கு இது சரரியா போச்சு..”,என்றவள் சிரிக்க வழக்கம் போல் அவள் சிரிப்பில் தன்னை தொலைத்தவன் அவள் இதழோரம் தட்டிச் சிரித்தவாறு எழுந்தான்..தன் முகத்தை துடைத்து தன்னை சரி செய்தவன் தன்னவளை இடைப்பற்றி தூக்க சாதாரண காட்டன் சல்வார் என்பதால் ஈரத்தில் நனைந்திருந்ததில் இன்னுமாய் மெல்லிதாகியிருக்க கையில் ஏந்தியவனுக்கோ அவளின் வெற்றிடையை பற்றியதைப் போன்ற உணர்வு..

பெண்ணவளுமே அதைதான் உணர்ந்தாளோ என்னவோ அத்தனை நேரம் சிரித்திருந்த அவளின் முகம் மொத்தமாய் சிவந்து விட்டிருந்தது..அவளறியாமல் வேக மூச்சுகள் எடுக்க அவள் நிலையுணர்ந்தவனுமே தன்னிலை மறந்து விட்டிருந்தான்.

அவன் கழுத்தை சுற்றியிருந்த அவள் கைகளில் அத்தனை ஈரத்தையும் தாண்டிய வெம்மையை உணர்ந்தான்.அறை வாசலுக்கு வந்தவுடன் அவள் இறங்க எத்தனிக்க அவனோ அவளைஅனுமதிக்காது தன் சட்டை பாக்கெட்டை கண்ணால் காட்ட தலை குனிந்தவள் ஒன்றும் கூறாமல் அதிலலிருந்த சாவியை எடுத்து கதவை திறந்தாள்.

உள்ளே நுழைந்தவன் பின்புறமாகவே கதவை காலால் எட்டி உதைக்க அது அறைந்து ஒலித்து  ஓய்ந்தது.கதவருகே மெதுவாய் அவளை இறக்கியவன் அவள் நிதானமாக நொடிப் பொழுது நேரம் கொடுத்து அவளின் பக்கவாட்டின் இருபுறமும் தன் கையை கதவில் ஊன்றியவாறு அவளிடமிருந்து விழியகற்றாமல் நின்றான்.

பெண்ணவளுக்கோ வயிற்றில் ஏதோ பந்து பந்தாய் உருள்வதைப் போன்ற உணர்வு தவறியும் தன்னவனை பார்க்க முடியவில்லை..ஈரம் சொட்ட நின்றவளின் தலையில் குத்தியிருந்த சென்டர் கிளிப்பை மெதுவாய் அவன் அகற்ற முடிக் கற்றைகள் லேசாய் அவள் கன்னங்களை உரசின..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.