(Reading time: 15 - 29 minutes)

“திஷா இங்க பேக் வாட்டர் போட்டிங் இருக்குனு சொன்னாங்க போலாம்.போட் ஹவுஸ் வேக்கண்ட் இருந்தா அங்க ஸ்டே பண்ணலாம்..எதுக்கும் லக்கேஜ் எடுத்துக்கலாம்..ஓ.கே வா?”

“ம்ம் சரிங்க நா எடுத்து வைக்குறேன் எல்லாத்தையும்..”,என்று அனைத்தையுமாய் எடுத்து வைத்தவாறு கிளம்பினர்.

அங்கு சென்றபின் என்ன தோன்றியதோ போட்டிங் வேண்டாமென பயந்தவளை வற்புறுத்தாது ஹவுஸ்போட்டிற்குச் சென்றனர்.அத்தனை அழகான சூழல் அந்த வெயிலையும் தாண்டிய மழைச்சாரலை அளித்திருந்தது இருவருக்குமே..முந்தைய நாளின் உரையாடலுக்குப் பின் இருவருமே தங்களுக்கிடையேயான இடைவெளியை சற்று ஒதுக்கி விட்டிருந்தனர் என்றே கூற வேண்டும்.. நாள் முழுவதுமாய் தன்னவனுடனான உரையாடல் சலிக்காத தெவிட்டாத செங்கரும்பாய் இனிக்க ரசித்து ரசித்து மகிழ்ந்தாள் திஷானி.

“ஏன்ங்க நீங்க என்னைப் பத்தி அம்மா அப்பாகிட்ட சொன்னப்போ அவங்க கொஞ்சம் கூட நெகெட்டிவா எதுவும் சொல்லலையா?உடனே ஓ.கே சொல்லிட்டாங்களா?”

“ம்ம் ஆமா டா..நானுமே எதிர்பர்க்கல ..”

“பட் அவங்க வீட்டுக்கு வந்து பேசினப்போ எனக்கு ஏதோ ஒரு உலகத்துல இருந்த ஒரு பீல்..கொஞ்சம் கூட கர்வமோ தலைகணமோ இல்லாம அவங்களாவே வந்து என்கிட்ட பொறுமையா பேசி..வாய்ப்பே இல்லங்க..அந்த கேரக்டர் தான் நீங்க இப்படி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்குறதுக்கும் காரணம் கண்டீப்பா..”

“உண்மை தான் திஷா பேபி..அக்சுவலா சொல்ல ஒரு காரணம் இருக்கு அது.. அம்மாவோட அண்ணா பொண்ணு  கன்சீவ் ஆனப்போ ஸ்கேன் எடுக்கும் போது பேபி பிசிகலி சேலண்ஞ்ச்டா தான் பிறக்கும்னு சொன்னாங்களாம்..

என் கசின்க்கும் அவ ஹப்பிக்கும் ரொம்ப வருத்தம் தான் இருந்தாலும் பேபிய அபார்ட் பண்ண நினைக்கல நாம நல்லா பாத்துக்கலாம்னு நினைச்சாங்களாம் பட் எங்க அம்மாவோட அம்மா பிடிவாதமா அந்த குழந்தை வேண்டாம்னு சொல்ல டாக்டரும் பேமிலி டாக்டர் சோ அவங்களும் பாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பெண் குழந்தை வேற சோ பாட்டி சொல்றத கேளு அப்படி இப்படினு அபார்ஷனுக்கு சம்மதிக்க வச்சுடாங்களாம்...

அந்த இன்சிடன்ட் நடக்கும் போது நா காலேஜ்னு நினைக்குறேன்..அப்போ அம்மா அவ்ளோ புலம்பினாங்க என்கிட்டேயும் அப்பாகிட்டேயும்..ஏன் குழந்தை அப்படியிருந்தா பெத்துக்க கூடாதா ஒரு வேளை பிறந்தப்பறம் எதாவது ஆச்சுனா வேண்டாம்னு தூக்கிப் போட்ருவாங்களா அப்படி இப்படினு ஆர்பாட்டமே பண்ணிடாங்க..அதுக்கப்பறம் எங்க பாட்டிகிட்ட ரொம்ப நாளா அவங்க பேசவே இல்ல..

சோ மேபி அதனால உன்னை பார்த்து அவங்க இம்ரஸ் ஆய்ருக்கலாம்..தடைகளைத் தாண்டி சாதிக்குறது நமக்கான அடையாளத்தை நிலை நிறுத்துறதெல்லாம் அம்மாக்கு ரொம்ப இஷ்டம்..அதுவும் பொண்ணுங்க அப்படி இருக்காங்கனா கேக்கவே வேணாம்..

“ம்ம் உண்மையா ரொம்ப ஆச்சரியமா இருக்கு அத்தை மாதிரி எத்தனை பேர் யோசிப்பாங்களோ தெரில..எவ்ளோ ப்ராட் மைண்டட் பீபுளா இருந்தாலும் தன் பையன் வாழ்க்கைனு வரும் போது அவங்க பாலிசியை அப்ளை பண்ண யோசிப்பாங்க தான..மாமாவும் அத்தைக்கும் உங்களுக்கும் புல் ப்போர்ட் தராரு..அது இன்னும் அழகான விஷயம்..இப்போ இருக்குற நிலைமைக்கு லைவ்ல என்ன அச்சீவ் பண்ணணும்னு கேட்டா அவங்கள மாதிரி நல்லபடியா குடும்பம் நடத்தி அவங்க குடுத்த மாதிரியே இந்த உலகத்துக்கு ஒரு நல்ல பையனையோ பொண்ணையோ குடுக்கனும்னு தான் வேண்டிப்பேன்..”,என்றவள் சிந்தனை கலைந்து தன்னவனைப் பார்க்க அவனோ அவளை முழுங்கும் பார்வை பார்த்திருக்க அதன் பின்னே தன் வார்த்தையை உணர்ந்தவள் சட்டென விழி மூடி நாக்கை லேசாய் கடித்துக் கொண்டாள்.

குறும்பு பார்வையோடு தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் தன்னவளின் அருகில் சென்று காட்டிலில் அமர அவளுக்கோ வாய் வார்த்தைகளின்றி நர்த்தனமாட ஆரம்பித்திருந்தது..

“இல்ல அது வந்து எதார்த்தமா தான்..மத்தபடி..”

“மத்தபடி ..”

“…..”

திஷானியின் மருண்ட விழிகளும் முகத்தின் படபடப்பும் அவனை சற்றே நிலை தடுமாற வைத்துவிட அத்தனை நெருக்கத்தில் அவள் முகத்தை கையில் ஏந்தியவனுக்கு காதலனாய் கணவனாய் உணர்ச்சிக் கலவைகள் போட்டியிட முகத்தில் முத்தங்களை நிரப்ப இதழோடு இதழ் சேர்ந்த நேரம் மொத்தமாய் தன்வசம் இழந்திருந்தவன் அவளின் அனுமதியோடு இன்னுமாய் முன்னேறினான்.

காதலை தாண்டிய தாம்பத்திய தொடுகையை உணர்ந்தவளுக்கோ ஒன்றும் செய்ய முடியாத நிலை கூச்சமும் பயமும் போட்டியிட தடுக்கவும் முடியாமல் அவனோடு இயைந்து செல்லவும் முடியாமல் அவஸ்தையாய் அவள் தவித்தாள்.

நிமிடங்கள் நகர தன்னவளை தனக்கே உரிமையாக்கும் சிந்தனையில் இருந்தவன் மெதுவாய் அவளிடம்,

“பேபி உன்னை மாதிரியே என்னை மயக்கி வச்சுக்குறதுக்கு அழகா ரெண்டு பேபிஸ்..நீங்க மூணு பேரும் தான் இனி என் வாழ்க்கை மொத்ததுக்கும்..”,என அவள் காதில் ரகசியம் உறைத்தவாறே அவன் பணியைத் தொடர

சட்டென நெருப்பில் தகித்தவளாய் அவனிடமிருந்து விலகியவள் எழுந்து அமர்ந்தாள்.இதை சற்றும் எதிர்பாராதவனோ,

“சாரி டா என்னாச்சு ஹர்ட் பண்ணிட்டனா!!”,என அவள் காலை ஆராய அவளோ,

“இல்ல இல்லங்க அதெல்லாம் ஒண்ணுமில்ல..”,என்றாள் கண்ணீரை கட்டுப்படுத்தியவளாய்.

அவள் இதை விரும்பவில்லை என உணர்ந்தவனும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் அவளை தன் தோள் சாய்த்துக் கொண்டான்.

“ரிலாக்ஸ் திஷா டியர்..ஒண்ணுமில்ல..பி கூல்..”,என உச்சி முகர்ந்து இதழ் பதித்தான்.

தொடரும்...

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.