(Reading time: 11 - 21 minutes)

இதேயே, சந்தோசம் அவன் வாழ்க்கை முழுதும் இருக்கணும்....

சீக்கிரமா , ரிஷி கீதாவை பற்றிய உண்மை எல்லாம் கண்டுபிடிச்சுடுவான். நீங்க வேற ஏதும் நினைக்காம நிம்மதியா ரெஸ்ட் எடுங்க அண்ணா ....

தங்கையின் வார்த்தைகள் சதாசிவத்திற்கு ஆறுதலை தரவில்லை...  பருவதம் சொல்வது போல கீதாவை பற்றி ரிஷி கண்டுபிடித்து விட்டால்.

ரிஷி தன்னை வெறுத்து விட்டால் என்ன செய்வது???? தன்னை உயிர் என கருதும் தங்கையே தன்னை வெறுத்தாலும் ஆச்சரியமில்லை. கடவுளேயே! என்னை என் இப்படி சோதிக்கிறாய்.... 

எனது தங்கை சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நான் நினைத்தது தவறா?... அதற்காக, இப்பொழுது நான் என் மகனை இழக்க முடியுமா????

தனது நினைவுகளில் இருந்தவரை சிவகாமி அம்மாளின் குரல் கலைத்தது.

அண்ணா, எப்படி இருக்கீங்க ???? இப்பதான் உங்களுக்கு எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா??? என்று பொய்யான பாசத்துடன் கேட்டார்.

அது, சதாசிவத்திற்கும் நன்றவாகேயே தெரிந்தது.....தான் இருக்கும் மனநிலையில் சிவகாமியுடன் பேச முடியாதுஎன்று  நினைத்தவர் .... சிவகாமிக்கு தனது புன்னகையே பதிலாக தந்தார்.....

அண்ணனின் மனதை உணர்த்த பருவதம் அம்மாள், சிவகாமி அண்ணாக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல .... நாம அப்புறம் வரலாம். வா என்ற அழைப்புடன் வெளியில் சென்றார்.

சிவகாமி அம்மாள் மீண்டும் உடம்புக்கு என்னவாயிற்று  என்று கேட்டு விட்டு தான் வெளியில் வந்தார்.

பருவதம் அம்மாளின் அண்ணன் என்ற ஒரேயே காரணமேயே சிவகாமி சதாசிவத்தை வெறுக்க காரணமாக இருந்தது.

ஆனால், அவரது பணம் சிவகாமி அம்மாளை வியக்க வைத்தது.

 அதனாலேயே சதாசிவத்தின் முன்பு சிவகாமி அம்மாள் பாசத்துடன் இருப்பது போல காட்டிக்கொள்வார்.

 சிவகாமி அம்மாளின் பொய்யான நடிப்பை அந்த வீட்டில் வீட்டில் இருக்கும் அனைவரும் அறிந்தது தான்.

 பருவதம் அம்மாளுக்கு சிவகாமி பற்றி தெரிந்து இருந்தாலும் தனது கணவனின் இரண்டாவது மனைவி என்பதால் அவரது உரிமைகளை அவர்க்கு கொடுத்தார்.

 ஆனால், சிவகாமியின் லட்சியமேயே அந்த வீட்டின் சொத்து முழுவதும் அவரேயே ஆள வேண்டும் என்பது தான்.

 சிவகாமிக்கு இருக்கும் ஒரேயே சொந்தம் அவரது தம்பி கோபி மட்டும் தான். தனக்கு பிறகு தனது தம்பிக்கு இந்த சொத்துக்கள் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

 சிவகாமியின் சதி செயல் அனைத்திற்கும் கோபி என்றும் உடந்தையாக தான்  இருந்தான். அவனை பொறுத்தவரை சிவகாமி அம்மாள் பொன் முட்டையிடும் வாத்து.

அதனாலேயே, அக்கா சொல்லும் வேலைகளை உடனேயே செய்து முடித்தான்.

 இப்போது கூட கீதாவை பற்றி விசாரித்து தனது அக்காவிற்கு தகவல் அனுப்பி கொண்டு இருப்பது அவன் தான்.

 ராஜகுட்டிக்கு,  தங்க செயின் ஒன்றை சதாசிவம் பரிசாக கொடுத்தார். இதை, பார்த்த சிவகாமி அம்மாவுக்கோ கோபம் தலைக்கேறியது.

 பருவதம் அம்மாள் தடுத்தும் கூட சதாசிவம் அதை கேட்கவில்லை. நீ  தொலைத்த சந்தோசத்தை உனக்கு உன் பேரன் தான் மீட்டு கொடுத்து இருக்கிறான். அதற்காக, அவனுக்கு இதை விட அதிகமாக நான் செய்ய  தயார். என்று கூறியவர் ராஜா குட்டியை வாரி அணைத்து'கொண்டார்.

 இவர்களது பாசத்தை கண்ட சிவகாமி அம்மாவுக்கு பற்றி கொண்டு வந்தது.

மேலும் ராஜகுட்டியின் பெயர் சுட்டும் வீழாவை பற்றியும் கலந்து ஆலோசித்தார் பருவதம் அம்மாள்.

சிவகாமிக்கோ, தன் வீட்டு சொத்தை அழிக்கவேயே ராஜகுட்டி வந்து இருப்பது போல தோன்றியது.

ஊர்ல இல்லாத பேரன், செத்த அவங்க அப்பன் கூடவேயே பொய் இருக்க கூடாது.... சனியன்..... என்று மனதில் திட்டி கொண்டு இருந்தார்.

இருவரும் பேசி முடித்த பின்னர் சிவகாமியும் பருவதமும் ராஜகுட்டியை தூக்கி கொண்டு வெளியில் வந்தனர்.

பருவதம் வரவிற்காக காத்து கொண்டு இருந்த கீதா அவர்களிடம் வேகமாக சென்றாள். சிவகாமியும் கூட இருந்தார்.

அம்மா, என்று புன்னகையுடன் வந்து நின்ற கீதாவை பார்த்த பருவதம் அம்மாள். என்னமா????? என்று ஆசையுடன் கேட்டார்.

ஏற்கனவேயே கடுப்பில் இருந்த சிவகாமி அம்மாவுக்கு இப்போது பருவதம் அம்மாள் கீதாவிடம் பேசுவதை பார்த்து இன்னும் கடுகடுப்பானது.

அம்மா, உங்க கிட்ட நான் ஒண்ணு காட்டுவேனாம். but, நீங்க அத பார்த்து பீல் பண்ணக்கூடாது . சரியா ???

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.