(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - என்னவளே - 10 - கோமதி சிதம்பரம்

ennavale

நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்த சதாசிவத்தை பருவதம் அம்மாளும் ரிஷியும் இரு பக்கமாக பிடித்து கொண்டு கட்டிலில் படுக்க வைத்தனர்.

ரிஷி டாக்டர் க்கு  போன் செய்... என்று பருவதம் அம்மாள் பதற்றத்துடன் கூறினார்...

ரிஷி போனெனின் அருகில் செல்லும் போது சதாசிவம் வேண்டாம் என்பது போல கையசைத்தார்.

அவரது பையில் இருந்து சில மாத்திரைகளை எடுத்து கொடுக்க சொன்னார்.

ரிஷியும் அந்த மாத்திரைகள் எல்லாம் எடுத்து கொடுத்தான். அதற்குள் , பருவதம் அம்மாளும் ஜூஸ் எடுத்து கொண்டு வந்தார்.

மாத்திரையும் ஜூஸ் குடித்தவர் உடம்பு சிறிது தெம்புடன் காணப்பட்டது .

அப்பா, எதுக்கும் நாம ஒரு தடவை ஹாஸ்பிடல்கும்  போய் செக் பண்ணிடலாம்....  என்று கவலையுடன் கூறிய ரிஷியை பார்த்தவர்.

தனது மகனின் தலையை பாசமாக தடவினார். மூன்று வருடம் கழித்து தனது அண்ணனும் ரிஷியும் பேசுவதை பார்த்த பருவதம் அம்மாளும் சந்தோசபட்டார்.

இல்லப்பா , மூணு வருஷமா இப்படி அடிக்கடி வரும் அப்புறம் நாம பேமிலி டாக்டர் கொடுத்த மாத்திரையை போட்டுக்கிட்டா சரியாகிடும்.நீ, கவலைப்படாத ரிஷி .... எனக்கு ஒன்னும் இல்லை.... என்று சோர்வுடன் கூறினார்.

அப்பா,  என்னை மன்னிச்சுடுங்க... எல்லா தப்பும் என்னோடதுதான்..... நீங்களும் அத்தையும் பேசுனா எல்லாத்தையும் நான் கேட்டுட்டு தான் இருந்தேன்.

கல்யாணம் செய்யாமல் நானும் கீதாவும் ஒண்ணா இருந்தது தப்பு தான். ஆனா , கீதா இதுக்கு சம்மதிக்கல்லபா....என் சந்தோஷத்துக்காக தான் அவ என்கூட இருந்தப்பா .....

அவளை பற்றி நீங்க தப்ப பேசினது அவகிட்ட சொன்ன போது கூட...... கீதா, உங்கள பற்றி தப்ப ஒரு வார்த்தை கூட சொல்லல.... நீங்க பேசுனது எல்லாம் சரிதான் சொன்ன....  ஒரு அப்பாவா உங்க மனநிலைமை அவ நல்ல புரிஞ்சு வச்சுட்டு தான் இருந்த.....ஆனா 

நான்  தான் யாரையும் புரிஞ்சுக்காம இருந்துட்டேன் .... இந்த மூணு வருசமா நீங்க மாத்திரை சாப்பிடுறது கூட தெரியாம இருந்துருக்கேன் .... என்று கவலையுடன் கூறிய ரிஷிக்கு பருவதம் அம்மாள் ஆறுதல் கூறினார்.

இப்ப  புரியுதா.... அவசரமா செய்யுற காரியம் எல்லாம் இப்படித்தான் போகும்.... நமக்குன்னு இருக்குற கலாச்சாரம் பாரம்பரியத்தை நாம மதிக்கணும்..... எவ்ளோ படிச்சாலும் நாம அத மீறக்கூடாது.... நடந்தது எல்லாம் நடந்து போச்சு விடு....

இப்ப கீதாவோட பிரச்சனை என்னனு நீதான் கண்டுபிடிக்கணும்..... நீதான் அவகிட்ட பேசணும்.... சேகர்க்கும் அவளுக்கும் என்ன சம்மந்தமான்னு கேளு ரிஷி ..... எல்லாம் நல்லபடியா முடிஞ்சா ........உனக்கும் கீதாவுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்குறது என் பொறுப்பு சரியா..... என்று சந்தோசத்துடன் பருவதம் அம்மாள் கூறினார்.....

அத்தையின், வார்த்தைகள் ரிஷிக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.....

திரும்பி, தனது தந்தையின் முகத்தை பார்த்தான்.... அவரது முகத்தில் எந்த ஒரு சந்தோஷமும் இல்லை.... எதோ யோசனையில் இருந்தார்......

ரிஷியின், பார்வையை உணர்ந்து கொண்ட பருவதம் அம்மாள் ரிஷியின் கையை மெதுவாக அழுத்தி கொடுத்தார்...

எல்லாம் நல்லபடியா நடக்கும் .... என்று கண்களினால் ரிஷிக்கு தைரியத்தை கொடுத்தார்...

அத்தை கொடுத்த தைரியத்தில் ரிஷியும் அடுத்த காரியம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான்....

அத்தை, கீதாவிற்கு நாம் பேசிய ஏதும் தெரிய வேண்டாம் .... முதலில், சேகர் பற்றி தெரிந்து கொண்டால் கீதாவிற்கும் சேகர்க்கும் இருக்கும் உறவு நமக்கு புரிந்து விடும்...

அடுத்த, கீதாவை கூட்டி சென்ற மாமா யாருனு நான் தெரிஞ்சுக்கணும்.... அது தெரிஞ்சுட்டா போதும் கீதா என்னை விட்டு என் போனான்னு நமக்கு தெரிஞ்சுடும்...

ஆமாடா , இது ரெண்டையும் நீ கண்டுபிடுச்சிட்டா.... அடுத்த முகுர்த்தத்திலேயே உனக்கும் கீதாக்கும் ஜாம் ஜாம்னு கல்யாணம் பணிவைக்குறது எங்க பொறுப்பு என்று பருவதம் அம்மாள் சந்தோசத்துடன் கூறினார்....

ரிஷிக்கு, மனதும் ரெக்கை கட்டி பறப்பது போல இருந்தது .... வீட்டின் சம்மதம் கிடைத்து விட்டது... இனி கீதா மட்டும் தான்.... அவள் என்னை விட்டு இனி எங்கும் செல்ல  முடியாது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கட்டிலில் இருந்து எழுந்தவன் தனது அத்தையை கட்டி கொண்டான்....

அடபோக்கிரி.... என்ன ஏன்டா கட்டிப்பிடிக்குற... போ போய் வெளியில ஒருத்தி உனக்காக காத்துஇருப்ப அவள போய் கட்டிப்பிடி....  என்று ரிஷியின் கதை திருகியவரேயே கூறினார்...

ஐயோ... அத்தை விடுங்க காது வலிக்குது.... நீங்க, என்னோட செல்ல அத்தை நீங்க சொல்லி நான் கேட்காம இருபென்யா... நான் போய் கீதாவையே கட்டிப்பிடிச்சு கிறேன் நீங்க அப்பாவை நல்ல பார்த்துக்கோங்க.....

ஹ்ம்ம் போடா போய் அவகிட்ட நாலு அடி வாங்கு ..... என்று சிரித்தவரேயே கூறியவர்....  

தனது அண்ணனிடம் திரும்பி பார்த்தீங்களான ! நான் சொல்லல இந்த வீடுடோட சந்தோசம் கீதாகிட்ட தான் இருக்கு.... ரொம்ம்ப வருஷம் கழிச்சு ரிஷியா  இப்பதான் சிரிச்ச முகமா பாக்குறேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.