அமைச்சரின் வீட்டின் காம்பவுண்டு உள்ளே சிறிதுநேரம் பயணித்து வாசலில் நின்ற காரின் இருந்து இறங்கிய தீரனை வரவேற்க தனது மனைவி மற்றும் மகன் சக்ரவர்த்தியுடன் நின்றிருந்தார் .
அமைச்சரின் மனைவி தமிழ்நாட்டு பெண்களுக்கே உரிய நெற்றி குங்குமத்துடன் பட்டுபுடவையில் மிடுக்கான தோற்றத்துடன் இரண்டுகை எடுத்து கும்பிட்டு வரவேற்றாள்.
தீரனும் இரண்டு கை எடுத்து கும்பிட்டுக்கொண்டே புன்னகைத்தான். அமைச்சர் தனது மனைவியையும் மகனையும் அறிமுகப்படுத்திவைத்தவர் மதிய உணவு உண்டுவிட்டு பேசலாம் என்றபடி தீரனை அழைத்துகொண்டே சாப்பாட்டு அறைக்கு சென்றார்
இந்திய உணவு காரம் இல்லாமல் சமைக்கப்பட்டிருந்தது. இன்னைக்கு சஷ்டி அதனால் அசைவம் சமைக்கல என்று கூறிய அமைச்சர் தனது மனைவி பரிமாற மகனுடன் அமர்ந்து தீரனையும் அருகில் உள்ள இருக்கையில் அமரச்சொன்னார்
எனக்கு இந்த உணவு பழக்கம்தான், என் மாம் ஃப்ரைடே என்றாள் ரைஸ் சாம்பார் பொரியல் ரசம் பாயாசத்துடன் தான் எனக்கு லஞ்ச் குடுப்பாங்க, ஐ லைக் இட் .தேங்க்ஸ் பார் யுவர் லஞ்ச் என்றவன் அவர்களுடம் அமர்ந்து சாப்பிடும் போது தனது அன்னையின் நினைவில் அவனின் உள்ளம் நெகிழ்ந்தது.
அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து பாட்டும் அதை தொடர்ந்து சலங்கை ஓலியும் கேட்டது அந்த சத்தம் கேட்ட மறுநொடி அமைச்சர் ரங்கராஜன், வள்ளி.... என்ன சத்தம் என்று கேட்டதும். நம்ம சந்தியா அவ காலேஜ் பிரண்ட்ஸ் கூட மாடியில் ஏதோ ப்ரோகிராமிற்கு பிராக்டிஸ் பார்த்துக் கொண்டிருகிறாள். நான் போய் அவளை சத்தம் கீழே வராதவாறு அவள் ரூமில் இருக்கச்சொல்கிறேன் என்றவள் மாடிக்கு விரைந்தாள்.
ஆனால் சலங்கை ஒலி கேட்டதும் தீரனின் உள்ளம் பரபரப்படைந்தது சிறுவயதில் இருந்து அவன் காதில் ஒலித்த ஜதி கட்டையின் சத்தமும் சலங்கை ஒலியும் திரும்ப கேட்டதும் அங்கு போகச் சொல்லி அவன் கால்கள் துடித்தது. ஆனால் தன்னை கஷ்ட்டப்பட்டு கட்டுப்படுத்தி அமர்ந்துகொண்டான்.
சாப்பிட்டு முடித்து வாஸ்பேசனில் கைகழுவுவதற்கு வந்த தீரனின் பார்வை அங்கிருந்த ஜன்னலின் வழியே வெளியே தனது தோழிகளுடன் கார்டனில் அரட்டையடித்துக் கொண்டிருந்த யாழிசை காட்சியளித்தாள். தீரனின் விழிகள், ஏனோ அவளை அவன் அறியாமல் படம் எடுத்து தனது மனப்பெட்டகத்தினுள் பதிந்துவைத்துகொண்டதை அவனே அறியவில்லை.
பேசும்போது அபிநயம் சிந்தும் அவளின் கண்களை கண்டு மாடியில் ஒலித்த சலங்கை ஒலி அவளின் பாதத்தில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்று அவன் உள்ளம் அடித்துகூறியது. அவளுடன் இன்னும் ஐந்து ஆறு பெண்கள் அங்கு நின்றாலும் அவனின் பார்வை ஏனோ யாழிசையை மட்டுமே படம்பிடித்தது.
தனை மறந்து தீரன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துகொண்டு நின்றிருந்தபோது ஏய்! வாங்கப்பா... என் ரூமை கிளீன் பன்னியாச்சாம், போகலாம்... என்று ஒருத்தி சொல்லவும், மற்றவர்களுடம் யாழிசையும் அங்கிருந்து நகர்ந்ததுவிட்டாள். அதில் தன்னிலை அடைந்த தீரன் தன்னை இயல்பாக்கிக் கொண்டு திரும்பி வந்தான்.
வந்தவன் சாப்பாடு ரொம்ப டேஸ்டா இருந்தது மிஸஸ் ரங்கராஜன். என் மாம் செய்து சாப்பிட்டதை போன்ற ஒரு பீல் கொடுத்ததுக்கு என் சின்ன காம்ப்ளிமென்ட் என்றவன் தனது வேலட்டினுள் வைத்திருந்த சிறு கண்ணாடி பேழையில் இருந்த ஒருபவுன் தங்க காசை ரங்கராஜனின் மனைவியிடம் கொடுத்தான்.
அதை வாங்க தயக்கத்துடன் தனது கணவனை பார்த்த ரங்கராஜனின் மனைவி வள்ளியிடம், தீரன் கூறினான் தமிழ்நாட்டில் ஒரு வீட்டிற்கு விருந்துக்கு போகும் போது வெறும் கையுடன் போகக் கூடாது என்று என் மாம் கூறியிருந்தார். சோ! இதை கொடுப்பதற்காக கொண்டு வந்தேன். ப்ளீஸ்! அக்சப்ட் இட். என்று கூறிய மறுகணமே ரங்கராஜன் வாங்கிக்கோ வள்ளி தம்பி ஆசையா தருவதை வேண்டாம் என்று சொல்லக்கூடாது, என்று கூறியதும் அதை புன்னகையுடன் பெற்றுகொண்டாள் வள்ளி.
அதன் பின் ரங்கராஜன் வாங்க தம்பி நாம உள்ள கான்பெரென்ஸ் ரூமிற்குள் போய் பேசலாம் என்று கூப்பிட்டுகொண்டு போனார். அந்த அறையில் மினிஸ்டர் மற்றும் அவரின் பி.ஏ உடன், அவரின் மகன் சக்ரவர்த்தி ஆகியோர் மட்டும் இருந்தனர். உள்ளே சென்றதும் உட்காருங்க தம்பி என்று இருக்கையை காண்பித்து அதன் எதிரில் உள்ள இருக்கையில் அவர் அமர்ந்தார். அவரின் பிஏ அவரின் இருக்கையின் பின் நின்று கொண்டான். சக்ரவர்த்தி தீரனின் அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.
தீரன் தனது லேப்டாப்பை எடுத்து அதில் செயற்கை கோளில் இருந்து வந்த ரகசிய இந்திய ஆராய்ச்சி பற்றிய தனிமங்களை தேடும் புகைபடம் இருந்ததை காண்பித்தான் ஆயிரக்கணக்கான டன் கனிமவளங்கள் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்து கிடந்த விஷயத்தை அந்த செயற்கை கோள்புகைபடம் காண்பித்தது.
அதை பார்த்த சக்ரவர்த்தி அப்பா நேச்சுரல் ரிசோர்செஸ் எல்லாம் நம்ம ஊரைசுற்றி இருக்கிறதா இந்த மேப் காண்பிக்குது என்று வியப்புடன் கூறினான்.