அவன் அவ்வாறு கூறியதும் அதை ஆமோதிப்பது போன்று தலை அசைத்த ரங்கராஜனை பார்த்த தீரன் ஓகே இப்போ நாம் ப்ரொஜெக்டை பற்றி பேசலாமா? என்று கேட்டான்
ம்....சொல்லுங்க தம்பி நீங்க இப்போ காமிச்ச மேப்புக்கும் நீங்க வந்திருக்கும் ப்ராஜெக்டுக்கும் என்ன சம்மந்தம் என்றார் .
நீங்க இந்த மேப்பில் பார்த்தது போல காவேரி ஆற்றுப்படுகைகளின் ஆழத்தில் ஏராளமான கனிமவளங்கள் இருக்கு அதனை எடுத்து சந்தை படுத்துவதன் மூலம் இந்தியா அரபு நாடுகளைப்போல் செல்வம் கொழிக்கும் நாடாக இன்னும் பத்து ஆண்டுகளில் மாறிவிடும்
ஆனால் அவ்வாறு அக்கனிமவளங்களை பூமியின் உள்ளிருந்து எடுக்க ஹை டெக்னிக் மெசின்ஸ் மற்றும் யுத்திகள் தேவைபடுகிறது அதனை எங்களின் சி.என்.ஜி நிறுவனம் சிறப்பாக உங்களுக்காக செய்து கொடுக்கும். மேலும் அதனை சந்தை படுத்துவதற்கு கனிமவளங்களை துறைமுகங்களுக்கும் விமானநிலையங்களுக்கும் எடுத்துச்செல்வதற்கு காவேரிபடுகைகளில் நால்வழிச்சாலைகள் அமைத்து தருவதற்கு எங்கள் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான செலவினங்களுக்கு, நிதியை எங்கள் நாட்டின் வங்கி உங்கள் நாட்டுக்கு கடனாக வழங்க முடியும். அப்படி நீங்க கடன் பெற எங்கள் நிறுவனத்திற்கு அந்த தனிமங்களை பூமிக்கடியில் இருந்து எடுக்க இந்திய அரசாங்கத்திடம் அனுமதி நீங்க வாங்கி கொடுக்கணும் என்றான்.
அவன் சொல்லி முடித்த மறுநிமிடம் ரங்கராஜனின் பி.ஏ தமிழ்மணி தலைவரே அவர் சொல்ற காவேரி படுக்கை அனைத்தும் விவசாயம் பார்க்கக் கூடிய நிலம் அதில் இதுபோல பூமிக்குள் இருந்து பெட்ரோல், மீத்தேன், ஈத்தேன் முதலிய எடுக்கிறோம் என்று கூறினால் விவசாய ஆர்வலர்களிடம் பலத்த எதிர்ப்பு எழும்பும் என்று கூறினான்.
அவ்வளவு நேரம் தீரன் ரங்கராஜனின் பி.ஏ வை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை அவன் ரங்கராஜனை அலார்ட் படுத்திய மறுநிமிடம் தீரனின் பார்வை அவனின் மேல் கூர்மையாக படிந்தது .
அவன் அவ்வாறு கூறியதும் ரங்கராஜன் இந்த பச்சை துண்டை போட்டுக்கிட்டு போராடுகிறோம் என்று போய் டெல்லியில நின்றவங்க என்னத்த சாதிச்சுபுட்டாங்க, ஆட்சி நம்ம கையில இருக்கும் போது நாம எதுக்கும் பயப்படவேண்டாம் என்றார்.
பின் தீரனிடம் நீங்க சொல்றதெல்லாம் சரிதம்பி, ஆனா இதுபத்தி மேலிடத்தில் பேசணும் என்றாள் இது உண்மையா? சாத்தியமா? என்ற பல கேள்வி கேட்பாங்க. அத புரூப் பண்ண புள்ளி விபரங்கள் எல்லாம் கேட்பாங்களே... மேலும் நீங்க சொல்ற இந்த ப்ராஜெக்ட் செய்றதுக்கு விவசாய நிலத்தையெல்லாம் கையகப்படுத்த வேண்டியிருக்கும், நிறைய காம்பென்சேசன்லாம் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் அதை தடுக்குறேனு புதுசு புதுசா பல தலைவன் உருவாவான். அவனை எல்லாம் பணத்தாலேயோ மற்றதாலேயும் கவனிக்க வேண்டியிருக்கும். இந்த ரிஸ்க்கை எடுக்கிற எனக்கும் கொஞ்சம் ஆதாயம் வேணும். இதுக்கெல்லாம் நீங்க பாரின் கரன்சியை அல்லிவிடுவீங்களா? என்று பச்சையாக டீல் பேசினான் ரங்கராஜன்.
அவர் அவ்வாறு கூறியதும் தீரனின் பார்வை நீங்கள் தேர்ந்தெடுத்த லச்சனமான தலைவன் இவன்தான் என்று எள்ளலுடன் அவனின் பி.ஏ தமிழ்மணியை பார்த்து கண்களினால் அலட்ச்சியப்படுத்தியவன், ரங்கராஜனிடம்.
நான் இங்க வரும் முன்பே நீங்க கேட்கிற ஸ்டேடிஸ்டிக்ஸ் ரிபோர்ட் எல்லாம் சர்வே செய்து ரிசல்ட் களைட் பண்ணி எடுத்து வந்திருக்கிறேன். நம்ம ப்ராஜெக்ட் ஆரம்பித்து பூமிக்கடியில் இருந்து நேச்சுரல் ரிசோர்ஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் தொழில் மற்றும் கனிம ஏற்றுமதியால் இந்திய கவர்மெண்டின் வளர்ச்சி இப்பொழுது இருப்பதைவிட நினைத்துபார்க்காத அளவில் அதிகரித்து இருக்கும்.
அதனால் இந்த ப்ராஜெக்ட் செய்வதற்கு நீங்கள் வாங்கிய கடனை எளிதாக அடைத்தும் விடலாம் உங்களின் நாடும் வளர்ந்த செல்வம் கொழிக்கும் நாடாக மாறும் அதற்கான புள்ளிவிபரங்கள் இதோ என்று தனது கணினியில் இருந்த ஸ்டேடிஸ்டிக்ஸ் ரிசல்டை காண்பித்தான்.
மேலும் நீங்கள் இந்த ப்ராஜெக்ட்டை எங்களின் நிறுவனத்திற்கு ஒப்படைத்தால் உலக அளவில் எங்களின் தொழிலை விரிவு படுத்தி அதில் லாபம் ஈட்ட வழிவகை எங்களின் சி.என்.ஜிக்கு கிடைக்கும் இதனை ஆரம்பிக்க உங்களுக்கு பினான்சியலா நாங்க சப்போர் செய்வோம். உங்களுக்கும் அதில் பங்கு உண்டு மிஸ்டர் ரங்கராஜன் என்று கூறினான்.
நான் தலைவரிடம் இதபத்தி பேசிட்டு உங்களிடம் பதில் சொல்கிறேன். கண்டிப்பா இதை முடிச்சு குடுக்க முயற்சி பண்றேன் தம்பி என்றார். நீங்க வச்சுருக்க ஸ்டேடிஸ்டிக்ஸ் ரிசல்ட் காபியை என் பி.ஏவிடம் கொடுங்க அதை காண்பித்துதான் நான் மேலிடத்தில் பேசணும் தம்பி என்றார்.
வந்த விசயத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட திருப்தியில் தீரன் ஸ்யூர் ரங்கராஜன்.ஐ ஆம் வெரி ஹாப்பி, தட் திஸ் மீட்டிங் ஹஸ் பீன் சக்சஸ். உங்க வீடு ரொம்ப அழகாக வெஸ்டர்ன் பில்டிங்கை விட டிபரன்ட்டாக இருக்கு நான் இதை பற்றி தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டான்.
அவனுக்கு மனதின் ஓரத்தில் மீண்டும் கார்டனில் தான் பார்த்த அந்த பெண்ணை திரும்ப பார்க்க வேண்டும் போன்ற ஒரு எண்ணம் முனுமுனுத்துக்கொண்டே இருந்தது.